Published:Updated:

பட்ஜெட்டை புறக்கணித்தது தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட்

 பட்ஜெட்டை புறக்கணித்தது தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட்
பட்ஜெட்டை புறக்கணித்தது தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட்
தமிழக சட்டப்பேரவையியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டை தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணித்து விட்டு வெளிநடப்பு செய்தது.
 பட்ஜெட்டை புறக்கணித்தது தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட்
தமிழக அரசின் 2013-14 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
அப்போது, பட்ஜெட்டை புறக்கணித்து தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
 
 பட்ஜெட்டை புறக்கணித்தது தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட்
இதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் பட்ஜெட்டை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். வெளியே வந்த அவர்கள், மத்திய அரசுக்கு எதிராக வாசகங்கள் எழுதிய பதாகைகளை கையில் பிடித்துக் கொண்டு முழக்கமிட்டனர்.

அப்போது, "இந்திய மத்திய காங்கிரஸ் அரசே, இலங்கையின் இன அழிப்புக்கு துணை போகாதே, தமிழக சட்டமன்ற தீர்மானம் பொருளாதார தடையை அமல்படுத்து, ஈழத் தமிழர் அரசியல் உரிமை நிலை நாட்ட பொது வாக்கெடுப்பு நடத்தி ஆதரவு தா, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் சர்வதேச  பொது விசாரணை நடத்த தீர்மானம் கொண்டுவா" என்று கோஷங்கள் எழுப்பினர்.

படங்கள்: சு.குமரேசன்