Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!
கழுகார் பதில்கள்!

ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி.

‘எந்தச் சூழலிலும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது’ என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சொல்லி இருக்கிறாரே?

தான் பயணம் செய்யும் விமானம் இந்திய எல்லையைத் தாண்டியதும், இதை ரணில் மறந்து போவார்.

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

‘உன்னாலே நான் கெட்டேன், என்னாலே நீ கெட்டே...’ என்ற நிலைமை இன்றைய அரசியலில் யாருக்குப் பொருந்தும்?


விஜயகாந்துக்கும் மக்கள் நலக்கூட்டணி தலைவர்களுக்கும். விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்காமல் இருந்திருந்தால், கொஞ்சம் இருந்த நல்ல பெயராவது மிஞ்சி இருக்கும் அந்தக் கூட்டணிக்கு.

அவர்களோடு சேர்ந்ததால்தான் ‘முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் பெரும் தோல்வி அடைந்தார்’ என்கிறோம். சேராமல் இருந்திருந்தால், அந்தப் பெயர் ஏற்பட்டு இருக்காது.

கழுகார் பதில்கள்!

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்.

தினகரனிடம் இருந்து அனைவரும் ஓடியது எதைக் காட்டுகிறது?


பதவி இருந்தால் ஒட்டிக் கொள்வார்கள். இல்லாவிட்டால் ஓடிவிடுவார்கள். ‘அற்ற குளத்தின் அறுநீர்ப் பறவைபோல் உற்றுழித் தீர்வா ருறவல்லர்’  என்று சொல்வார் ஒளவையார். ‘நீர் வற்றியதும் குளத்தில் இருக்கும் பறவைகள் பறந்துவிடுவதைப் போல, துன்பம் வந்ததும் பறந்து செல்பவர்கள் நல்ல நட்பு ஆக மாட்டார்கள்’ என்பது இந்த மூதுரையின் பொருள். கைது செய்யப்பட்ட தினகரன் டெல்லியில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டபோது, நாஞ்சில் சம்பத்தும் பெங்களூரு புகழேந்தியும்தான் அவருக்காகக் காத்திருந்தார்கள். இதுதான் உலகம்.

ஆர்.ஆறுமுகம், திருமயம்.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனைக்காகவும், தங்கக் கட்டிகள் வைத்திருந்ததற்காகவும் சேகர் ரெட்டி, பிரேம், சீனிவாசலுவைக் கைது செய்த அமலாக்கத்துறை, அதே வழக்கில் தொடர்புடைய புதுக்கோட்டை ராமச்சந்திரனையும் திண்டுக்கல் ரத்தினத்தையும் ஏன் கைது செய்யவில்லை?


 புதுக்கோட்டை ராமசந்திரன், திண்டுக்கல் ரத்தினம் ஆகியோரை சி.பி.ஐ கைது செய்தது. ஆனால் அமலாக்கத்துறை இவர்களை கைது செய்யவில்லை. இதுபோன்ற கைதுகள் ஆரம்ப ஜோராக மட்டுமே இருக்கின்றன. பின்னர் நடவடிக்கைகள் அவ்வளவு துரிதமாக இருப்பது இல்லை. சேகர் ரெட்டியின் சொத்துக்களை முடக்கி இருப்பதாக இப்போது அறிவித்துள்ளது அமலாக்கத்துறை.

கழுகார் பதில்கள்!

சேகர் ரெட்டி இல்லாமல் புதுக்கோட்டை ராமச்சந்திரன் இல்லை. எடப்பாடி பழனிசாமி இல்லை. ஓ.பன்னீர்செல்வமும் இல்லை. இவர்கள் மீது பாயாத நடவடிக்கை, என்ன நடவடிக்கை? ஜெயலலிதாவுக்குத் தண்டனை தரப்பட்ட நாளன்று சேகர் ரெட்டிக்குச் சாதகமான ஒரு கடிதத்தைத் தலைமைச் செயலாளர் தயார் செய்கிறார் என்றால், அரசு நிர்வாகத்தில் இவர் களுக்கு உள்ள செல்வாக்கைப் புரிந்துகொள்ளவும்.

ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன் புதூர்.

‘நடுத்தர மக்களும் விமானத்தில் பறக்க வேண்டும்’ என்கிறாரே பிரதமர் நரேந்திர மோடி?


இப்படிச் சொல்லி ரயில் வசதிகளை ரத்து செய்துவிட வேண்டாம்!

க.சுல்தான் ஸலாஹீத்தீன் மழாஹிரி, காயல்பட்டினம்.

இணையுமா? இணையாதா?


இணைய இயலாது!

தமிழினியன், விழுப்புரம்

ஸ்டாலினின் கடற்கரை ஆலோசனை கை கூடுமா?


 ஓ! தினமும் கடற்கரை சென்று காற்று வாங்குவதைச் சொல்கிறீர்களா? காற்று வாங்கினால் வோட்டு வாங்க முடியும் என்று ஜோசியர் சொல்லி இருக்கிறாரா?

பொன்விழி, அன்னூர்.

தி.மு.க-வை வழிநடத்த கருணாநிதி குடும்பத்தினரைத் தாண்டி தகுதியானவர்கள் யாராவது இருக்கிறார்களா?


ஏன் இல்லை? வாய்ப்புகள் வழங்கப்பட்டு இருந்தால், பலரும் தகுதியானவர்களாக வளர்ந்து இருப்பார்கள். அப்படி வளர்ந்து வந்த பல பேரின் றெக்கைகள் ஆரம்பத்திலேயே வெட்டப்பட்டன. பலரும் வெளியேற்றப்பட்டார்கள். ‘ஸ்டாலின்தான் அடுத்து’ என்று சொன்னபிறகு, யார் தன்னை தலைமைக்கான தகுதியுடன் வளர்த்துக்கொள்வார்கள்?

ஸ்டாலின் தலைமையை ஏற்காத அழகிரி, கட்சியை விட்டு நீக்கப்பட்டார். கனிமொழி இப்போது திணறிக்கொண்டு இருக்கிறார். யாரையும் வளர்த்துவிடாமல், வளரவிடாமல் செய்துவிட்டு, ‘ஸ்டாலினை விட்டால் வேறு ஆள் இல்லை’ என்று சொல்வதைப் போல புரட்டு என்ன இருக்க முடியும்?

ஹெச்.ராஜா,
தேசிய செயலாளர்,
பி.ஜே.பி

கழுகார் பதில்கள்!

ஜெயலலிதாவின் மரணத்தில் இருக்கும் மர்மம்தான் என்ன?

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி இரவில் அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். அவருக்குக் காய்ச்சல் என்று சொன்னது அப்போலோ. டிசம்பர் 5-ம் தேதி இரவு திடீரென அவரது இதயத்துடிப்பு நின்று போனதாக அறிவித்தது அப்போலோ. இடைப்பட்ட காலகட்டத்தில் அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளை மொத்தமாகப் படிப்பவர்கள், அதில் உள்ள மர்மத்தை உணர்வார்கள்.

‘‘போயஸ் கார்டன் வீட்டில் வைத்து ஜெயலலிதா தாக்கப்பட்டார், மண்டையில் காயம் ஏற்பட்டது’’ என்று பொன்னையனும் பி.ஹெச்.பாண்டியனும் சொன்னார்கள். செப்டம்பர் 29-ம் தேதிக்குப் பிறகு ஜெயலலிதா உடலில் எந்தச் செயல்பாடும் இல்லை என்றே உள்விவகாரங்களை அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

‘ரமணா’ படத்தில் செத்தவருக்குச் சிகிச்சை தந்து சம்பாதித்ததைப் போல, சசிகலா குடும்பத்தினர் ஜெயலலிதாவை வைத்து சில அரசியல், ஆட்சி மற்றும் கட்சி நகர்வுகளை அந்த 75 நாள்களும் செய்து
கொண்டார்கள் என்பதுதானே ஊர் முழுக்கப் பேச்சாக இருக்கிறது. அப்படிச் செய்த பாவம் அவர்களுக்குக் கை கொடுக்கவில்லை என்பதுதான் ஒரே ஆறுதல். மத்தியில் ஆட்சி நடத்தும் அரசாவது இந்த உண்மைகளை வெளிக்கொண்டுவர முயற்சிக்க வேண்டும்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள்,  ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை,  சென்னை- 600 002 kalugu@vikatan.com  என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!