Published:Updated:

‘‘தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை காங்கிரஸ் நிறுத்தும்!” - நக்மா வாய்ஸ்

‘‘தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை காங்கிரஸ் நிறுத்தும்!” - நக்மா வாய்ஸ்
பிரீமியம் ஸ்டோரி

‘‘பிரதமர் மோடிக்கு வளையல் களைப் பரிசாக அனுப்புவேன்’’ எனச் சீறிய வேகத்தில், நடிகர் ரஜினியைச் சந்தித்து இருக்கிறார், அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் நக்மா. ஏற்கெனவே ரஜினியை பி.ஜே.பி-யில் இணைப்பதற்கான பல மறைமுக வேலைகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் ரஜினி-நக்மா சந்திப்பு, அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியத்தை  உண்டாக்கியிருக்கிறது. இந்த நிலையில் நக்மாவிடம் பேசினோம்.

‘‘தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை காங்கிரஸ் நிறுத்தும்!” - நக்மா வாய்ஸ்

“ ‘மோடிக்கு வளையல் பரிசளிப்பேன்’ எனச் சொல்லியிருக்கிறீர்களே?”

“காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் எல்லையில் ராணுவ வீரர்கள் கொல்லப் பட்டபோது, மன்மோகன் சிங்குக்கு அன்று பி.ஜே.பி-யினர் என்ன பரிசு அனுப்பி வைத்தார்கள்? தற்போது பி.ஜே.பி ஆட்சியில் பாகிஸ்தான் தீவிரவாதிகளாலும் நக்சலைட்டுகளாலும் தினம் தினம் பல ராணுவ வீரர்கள் மடிந்து வருகிறார்கள். ‘இந்தியாவை அழிக்க நினைக்கும் அந்நிய சக்திகளை வேரறுப்பேன்’ என்று சொல்லியே ஆட்சிக்கு வந்தார் மோடி. ஆனால், இன்றுவரை அண்டை நாடுகளினால் நம் மக்களும், ராணுவ வீரர்களும் கொல்லப்படுகின்றனர். இதைத் தடுக்க சக்தியில்லாத மோடிக்கு வளையல்களைத்தான் பரிசாக அனுப்ப முடியும். இதில் என்ன தவறு இருக்கிறது?”

“தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் பற்றி என்ன சொல்கிறீர்கள்?”

‘‘தமிழகத்தில் தற்போது ஒரு கேவலமான ஆட்சி நடந்துவருகிறது. தீர்க்கப்பட வேண்டிய மக்கள் பிரச்னைகள் நிறைய இருக்கின்றன. விவசாயிகள் தற்கொலை, குடிநீர்ப் பஞ்சம், ஹைட்ரோ கார்பன், மின்சாரப் பிரச்னைகள் என மக்கள் தவிக்கிறார்கள். ஆனால், ஆட்சியில் உள்ளவர்களுக்கு மக்கள் பிரச்னையைவிட பதவிக்காக அடித்துக் கொள்ளும் தங்களின் சொந்தப் பிரச்னையே பெரிதாக இருக்கிறது. இவை எல்லாமே மத்திய மோடி அரசால் திட்டமிடப்பட்டது. எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பல சதி வேலைகளை மோடி அரசு செய்து வருகிறது. இதில் பாதிக்கப்படுவது தமிழக மக்கள்தான்.”

“தமிழகத்துக்கு  சட்டமன்றத் தேர்தல்  விரைவில் வரும் என்று யூகங்கள். காங்கிரஸ் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக யாரை நிறுத்துவீர்கள்?”

“அதைக் கட்சி மேலிடம்தான் முடிவுசெய்யும். தமிழகத்தில் நல்லாட்சி நடத்தத் தகுதி உடையவரைத்தான் முதல்வர் வேட்பாளராக காங்கிரஸ் நிறுத்தும். எப்படி மிகச் சிறந்த தலைவர்களான காமராஜரையும், கக்கனையும் தமிழகத்துக்கு காங்கிரஸ் கொடுத்ததோ... அதுபோல ஒரு நல்ல தலைவரைக் கொடுத்து தமிழகத்தில் சிறப்பான ஆட்சியை, காங்கிரஸ் அமைக்கும்.”

“திடீரென ரஜினியைச் சந்தித்ததன் பின்னணி?”

‘‘அவர் எனது சிறந்த நண்பர். பல வருடங்களுக்கு முன் வெளிவந்த ‘பாட்ஷா’ திரைப்படம் சமீபத்தில் டிஜிட்டலில் மாற்றலாகி வந்தது. அப்போதும்கூட அதை புதிய திரைப் படமாகவே ரசிகர்கள் கொண்டாடி னார்கள். இது ரஜினியால் மட்டுமே சாத்தியம். அதற்காக ரஜினியைச் சந்தித்து நன்றி தெரிவித்துவிட்டு வந்தேன்.”

‘‘தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை காங்கிரஸ் நிறுத்தும்!” - நக்மா வாய்ஸ்

“ரஜினியை இணைத்துக்கொள்ள பி.ஜே.பி தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. அதுபோல காங்கிரஸ் எடுக்கும் முயற்சிதான் இந்த சந்திப்பா?”

“அப்படியெல்லாம் இல்லை. அவர் இன்றுவரை அரசியலுக்கு வரமாட்டேன் என்றுதான் சொல்லி வருகிறார். மோடி தமிழகத்தில் காலூன்ற, மக்கள் செல்வாக்கை அதிகளவில் சம்பாதித்து வைத்துள்ள ரஜினியை தன்பக்கம் இழுத்துக் கொள்ள நினைக்கிறார். அதனால் பி.ஜே.பி அவரையே சுற்றிச் சுற்றி வருகிறது.’’

“நீங்கள் வந்ததால்தான் குஷ்பு டம்மி ஆக்கப்பட்டாரா?”

“இதில் உண்மையில்லை. அவர் காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர். அதனால் அவரின் பணி சற்றுக் குறைவு. தொலைக்காட்சி மற்றும் பொது நிகழ்ச்சிகளிலும் பங்குகொண்டு வருகிறார். அதனால், குஷ்பு கட்சிப் பணியைக் கவனிக்காதது போலவும், நான் கட்சியில் பணியாற்றுவது போலவும் தெரிகிறது. உண்மையில் அவரவர் பணியைச் சிறப்பாகச் செய்து வருகிறோம்.”

- ஜெ.அன்பரசன்
படம்: சொ.பாலசுப்ரமணியன்