Published:Updated:

அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்துக்கு சிறப்பு அந்தஸ்து: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

சென்னை  அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில், அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தை தேசிய தனிச் சிறப்பு மையமாக அங்கீகரிக்க வேண்டும் என்றும், புற்று நோய்க்கான நிகர்நிலை ஆராய்ச்சி மையமாக தனி அந்தஸ்து அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

##~~##
சிறப்பு அந்தஸ்து வழங்குவதன் மூலம் நாடு முழுவதும் பல ஆயிரம் பேர் பயனடைவார்கள் என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதல்வர், கடந்த 1954 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த மையத்துக்கு தமிழக அரசு 30 ஆண்டுகளாக உதவி செய்து வருகிறது என்றும், சிறப்பு அந்தஸ்து குறித்து ஏற்கனவே எழுதப்பட்டுள்ள கடிதம் குறித்து நினைவூட்டுவதாகவும் மேலும் கூறியுள்ளார்.