Published:Updated:

"ரஜினி தன் போயஸ் வீட்டிலும் களை எடுப்பாரா?" - மன்றத்தினர் ஆவேசம்! #VikatanExclusive

"ரஜினி தன் போயஸ் வீட்டிலும் களை எடுப்பாரா?" - மன்றத்தினர் ஆவேசம்! #VikatanExclusive

"ரஜினி தன் போயஸ் வீட்டிலும் களை எடுப்பாரா?" - மன்றத்தினர் ஆவேசம்! #VikatanExclusive

"ரஜினி தன் போயஸ் வீட்டிலும் களை எடுப்பாரா?" - மன்றத்தினர் ஆவேசம்! #VikatanExclusive

"ரஜினி தன் போயஸ் வீட்டிலும் களை எடுப்பாரா?" - மன்றத்தினர் ஆவேசம்! #VikatanExclusive

Published:Updated:
"ரஜினி தன் போயஸ் வீட்டிலும் களை எடுப்பாரா?" - மன்றத்தினர் ஆவேசம்! #VikatanExclusive

ஜினியின் `ராகவேந்திரா திருமண மண்டப'த்தின் முதல்மாடியில் இருக்கும் தலைமை அலுவலகத்தைப் புதுப்பிக்கும் பணி நடந்து வந்தது. சில நாள்களுக்கு முன்பு புதுப்பிக்கும் பணி முடிந்து, முறைப்படி பூஜை போட்டு மன்றப்பணியைத் தொடங்கிவிட்டனர். புதிய அலுவலகத்துக்கு வந்திருந்த ரஜினி, சில முக்கிய ஆலோசனைகளை வழங்கிவிட்டு, படப்பிடிப்புக்காக டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார். ஆகஸ்ட் மாதத்தின் முதல்வாரத்தில்தான் ரஜினி சென்னைத் திரும்புகிறார். அதுவரை, மன்ற நிர்வாகத்தைக் கவனிக்கும் பொறுப்பை அமைப்புச் செயலாளர் டாக்டர். இளவரசனிடம் ஒப்படைத்திருக்கிறார். அவருடன், முன்னாள் போலீஸ் அதிகாரி ராஜசேகரையும் இணைந்து செயல்படும்படி சொல்லியிருக்கிறாராம் ரஜினி. இவர்கள் இருவரும் நேற்று முதல் குறைகேட்கும் வாரம் என்று ஒரு புரோகிராமைத் தொடங்கியுள்ளனர். தினந்தோறும் மாவட்டவாரியாக ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்து வருகின்றனர். முதல்கட்டமாக, திருவண்ணாமலை, திருவள்ளூர், வேலூர், விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளை தனித்தனியாகச் சந்தித்து குறை கேட்கும் படலத்தை நடத்தினர். 

முன்னதாக, மாவட்ட நிர்வாகிகளுக்குத் தலைமை மன்றத்திலிருந்து மெயில் மூலம் சில தகவல்களை தெரிவித்தார்களாம். அதன்படி, `மன்றத்தினர் யாரும் அப்பாயின்ட்மென்ட் இல்லாமல் சென்னைத் தலைமை அலுவலகத்துக்கு வரக் கூடாது. மாவட்ட அளவில் ஏதாவது புகார் என்றால், அங்குள்ள நிர்வாகிகளிடம்தான் முதலில் சொல்லவேண்டும். அங்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை என்றால், தலைமை அலுவலகத்துக்கு வரவேண்டும். அதுமட்டுமல்ல... திருமண மண்டபத்தின் முன் பக்க கேட்டில் இனி யாரும் வரக் கூடாது. பின் வாசல் வழியாகத்தான் வரவேண்டும்' என்பது உள்ளிட்ட பல தகவல்கள் சொல்லப்பட்டதாம். அதன்படியே, மாவட்ட நிர்வாகிகள் நேற்று நேரில் வந்தனர். 

இதுபற்றி கூட்டத்தில் கலந்துகொண்ட மன்ற நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ``என்னத்தைச் சொல்வது?.. இங்கே நடப்பதை தலைவர் லைவ் ஆகப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.." என்கிற முன்னறிவிப்புடன் ஆரம்பித்தனர். ``இளவரசன், ராஜசேகர் மற்றும் தூத்துக்குடி ஸ்டாலின் ஆகிய மூவரும் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஸ்டாலின், தூத்துக்குடி மாவட்டச் செயலாளர். அவரை ஏன் திடீரென முன்னிலைப்படுத்தப்படுகிறார் என்பது புரியவில்லை. இதற்கு முன்பு, ரஜினி சார் எங்களை மரியாதையாக உபசரித்து சந்தோஷப்படுத்தினார். இப்போது இவர்கள் எங்களுக்குக் குடிக்க தண்ணீர் வசதி கூட செய்து தரவில்லை. ஒரு டீ தரவில்லை. சேர்களை மரத்தடியில் போட்டு உட்கார வைத்தனர். குறைகளை சொல்ல முற்பட்டபோது, அதை அப்புறம் பார்த்துக்கலாம் என்று தள்ளிப்போட்டனர். பூத் கமிட்டி விரைவாக அமைப்பது பற்றி கேள்விகளைக் கேட்டனர். இவர்களிடம் பிரச்னை பற்றி பேசி பயனில்லை என்பதைப் புரிந்துகொண்டு நொந்துபோய் வெளியே வந்தோம். பேசிக்கொண்டிருக்கும்போதே இன்னொரு விஷயத்தைப் பற்றியும் சொன்னார்கள். `எம்.எல்.ஏ, எம்.பி சீட் வேண்டும் என்ற ஆசை இருந்தால் அதை இப்போதே விட்டுவிடுங்கள். ஏற்கெனவே, அதற்கான இடம் நிரம்பிவிட்டது. இனியும் அந்த ஆசை இருந்தால் அடுத்தகூட்டத்துக்குகூட நீங்கள வரவேண்டாம்' எனக் கூறிவிட்டனர்" என்றார். பெரும்பாலான மன்ற நிர்வாகிகள் சில முக்கியமான பிரச்னைகளைத் தலைமை மன்ற நிர்வாகிகளிடம் புகார் செய்யச் சென்றிருக்கிறார்கள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னையைச் சேர்ந்த மன்றத்தினர் சிலர் மீடியாக்களிடம் மனம்விட்டு பேசியபோது, ``சென்னை மன்ற நிர்வாகிகளை ரஜினிதான் இனி காப்பாற்றவேண்டும். வடசென்னை மாவட்டப் பொறுப்பாளர், கீழ்மட்ட நிர்வாகிகளை தரக்குறைவாக நடத்துகிறார். இதை மன்றத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழுவினரே நேரில் பார்த்தனர். இதேபோல், சோழிங்கநல்லூர் ஏரியாவில் மற்ற அரசியல் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஈடுகொடுத்து மன்ற நிர்வாகி ஒருவர் செயல்பட்டு வருகிறாராம். இவருக்கும் மாவட்டச் செயலாளருக்கும் பனிப்போர் உச்சத்தில் இருக்கிறது. ஆலந்தூர் ஏரியாவில் உள்ள முக்கிய நிர்வாகி ஒருவரை வேறு ஒரு ஏரியாவை கவனிக்கச் சொல்லி மாவட்ட முக்கிய நிர்வாகி ஒருவர் பிரஷர் கொடுக்கிறாராம். அவருக்கு வேண்டப்பட்ட ஒருவரை ஆலந்தூர் ஏரியாவுக்கு நியமிக்க ஏற்பாடு நடக்கிறது. இப்படிப் பல மாவட்டங்களிலும் பிரச்னைகள் வெடித்துவருகின்றன" என்றனர்.
  
இதேபோல், ராகவேந்திரா மண்டபத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு வரை ராஜூ மகாலிங்கம் தலைமையில் மன்ற நிர்வாகம் நடந்து வந்தது. அலுவலகப் பணிகளை ஆறு பேர் கவனித்து வந்தனர். இவர்கள் மீது நிறைய புகார்கள் வந்ததையடுத்து, அந்தக் கூட்டணியைக் களைத்துவிட்டார் ரஜினி. மன்றப்பணிகளை கவனித்து வந்த சுதாகரை திருமண மண்டப நிர்வாகப் பணியை மட்டும் கவனிக்க சொல்லிவிட்டார் ரஜினி. பிறகு மன்ற விவகாரங்களில் ராஜூமகாலிங்கம் பெரிதாக தலையிடுவதில்லை. தற்போது நடைபெறும் கூட்டங்களில்கூட ராஜு மகாலிங்கத்தின் தலையீடு இல்லை. இப்படியிருக்க.. மன்றத்தில் இன்னொரு புகைச்சல் கிளம்பியுள்ளது. 

``புகார் கூறப்பட்ட நபர்களை நீக்கிவிட்டார் ரஜினி. அதேபோல், அவரது போயஸ்கார்டன் வீட்டில் இருக்கும் பணியாளர்களில் குறிப்பிட்ட நால்வரின் நடவடிக்கைகளையும் ரஜினி இனி கண்காணிக்கவேண்டும். தென் மாவட்ட மன்ற பிரமுகர், வட மாவட்ட பிரமுகர் இப்படி ஒரு சிலர் மாநில அளவில் மன்றப் பதவிகளைப் பிடிக்க பின்பக்க வழியாகக் காய் நகர்த்தி வருகின்றனர். இவர்களுக்கு ரஜினி வீட்டிலிருப்பவர்களின் ஆதரவு இருக்கிறது. குறுக்கு வழியில் பதவியை யாருக்கும் ரஜினி தரமாட்டார். ஆனால், இவர்கள் அந்த முயற்சியில் இறங்கியுள்ளனர்" என்று ஆவேசத்துடன் மன்ற நிர்வாகிகள் சிலர் சொல்கிறார்கள்.

இந்தப் புகார்கள் தொடர்பாக ரஜினி மன்ற தலைமை நிர்வாகிகளிடம் கருத்து கேட்பதற்கு தொடர்பு கொண்டோம், ``மீட்டிங்ல பிஸியா இருக்கோம் சார். தலைவர் ஷுட்டிங் முடிச்சு சென்னை வந்ததும் சில முக்கிய முடிவுகளை அறிவிப்பாங்க. அப்போ உங்களுக்கு எல்லா உண்மைகளும் தெரியவரும்" என முடித்துக்கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக ரஜினி மன்றத் தரப்பினர் விரிவான விளக்கம் தந்தால் பரிசீலனைக்குப் பிறகு அதையும் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism