Published:Updated:

நம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தயாராகும் மக்களவை! அ.தி.மு.கவுக்கு 29 நிமிடங்கள் ஒதுக்கீடு

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நாடாளுமன்ற மக்களவையில் நாளை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. 

பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த தெலுங்கு தேசம் கட்சி, சமீபத்தில் கூட்டணியிலிருந்து விலகியது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பதாகக் கொடுத்த வாக்குறுதியை பா.ஜ.க நிறைவேற்றவில்லை என்று கூறி கூட்டணியை முறித்துக்கொண்ட தெலுங்கு தேசம், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்தது. இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதம் நாளை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மக்களவையில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க மத்திய பா.ஜ.க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

இந்த நிலையில், நாளைய விவாதத்தின்போது கட்சிகளுக்கு நேரம் ஒதுக்கி சபாநாயகர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி, நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ளும் பா.ஜ.க-வுக்கு 3 மணி நேரம், 33 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதில், பிரதமர் மோடி சுமார் ஒரு மணி நேரம் உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 48 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு 38 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. மக்களவையில் 37 உறுப்பினர்களுடன் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் அ.தி.மு.க-வுக்கு 29 நிமிடங்களை ஒதுக்கி உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல், திரிணாமுல் காங்கிரஸ் - 27 நிமிடங்கள், பிஜூ ஜனதா தளம் -15 நிமிடங்கள், சிவசேனா - 14 நிமிடங்கள், நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவந்த தெலுங்கு தேசம் கட்சிக்கு 13 நிமிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 7 நிமிடங்களும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 6 நிமிடங்களும் அளிக்கப்பட்டிருக்கின்றன. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு மொத்தம் 7 மணி நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. தெலுங்கு தேசம் கட்சி கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்துக்குக் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அதை அ.தி.மு.க ஆதரிக்காது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism