Published:Updated:

உள்ளாட்சித் தேர்தல் டெஸ்ட்... ஆட்சியைப் பிடிப்பது நெக்ஸ்ட்! - ரஜினி வியூகம்

உள்ளாட்சித் தேர்தல் டெஸ்ட்... ஆட்சியைப் பிடிப்பது நெக்ஸ்ட்! - ரஜினி  வியூகம்
பிரீமியம் ஸ்டோரி
உள்ளாட்சித் தேர்தல் டெஸ்ட்... ஆட்சியைப் பிடிப்பது நெக்ஸ்ட்! - ரஜினி வியூகம்

உள்ளாட்சித் தேர்தல் டெஸ்ட்... ஆட்சியைப் பிடிப்பது நெக்ஸ்ட்! - ரஜினி வியூகம்

உள்ளாட்சித் தேர்தல் டெஸ்ட்... ஆட்சியைப் பிடிப்பது நெக்ஸ்ட்! - ரஜினி வியூகம்

உள்ளாட்சித் தேர்தல் டெஸ்ட்... ஆட்சியைப் பிடிப்பது நெக்ஸ்ட்! - ரஜினி வியூகம்

Published:Updated:
உள்ளாட்சித் தேர்தல் டெஸ்ட்... ஆட்சியைப் பிடிப்பது நெக்ஸ்ட்! - ரஜினி  வியூகம்
பிரீமியம் ஸ்டோரி
உள்ளாட்சித் தேர்தல் டெஸ்ட்... ஆட்சியைப் பிடிப்பது நெக்ஸ்ட்! - ரஜினி வியூகம்

‘‘போர் வரும்போது களத்தில் இறங்குவோம்’’ என்ற ரஜினியின் அறிவிப்பு, தமிழக அரசியலில் பெரும் வெப்பச் சலனத்தைக் கிளப்பியிருக்கிறது. கிட்டத்தட்ட தமிழகத்தின் அத்தனை அரசியல் தலைவர்களும், ரஜினியின் ரியாக்‌ஷனுக்குத் தெளிவாகக் கருத்து சொல்லியிருக்கிறார்கள். இதில் தெளிவாக எதையும் சொல்லாதவர், ரஜினி மட்டுமே. ஆனால், ‘‘இந்த முறை எங்களை அவர் ஏமாற்ற மாட்டார்’’ என்கிறார்கள், ரஜினி ரசிகர்கள். 

ரஜினி இப்போது தினமும் பகல் நேரங்களில் தன்னுடைய ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு வந்துவிடுகிறாராம். நண்பர்கள், மண்டப ஊழியர்கள்  ஆகியோருடன் வெளிவட்டார நிகழ்வுகளைப் பேசித் தெரிந்துகொள்கிறாராம். ‘‘எங்களுக்கு ரஜினி ஒரு டெஸ்ட் வைத்திருக்கிறார்’’ என உற்சாகமாகச் சொல்கிறார்கள், அவரின் ரசிகர் மன்றத்தினர். அதுதான், விரைவில் வரப்போகும் உள்ளாட்சித் தேர்தல். அடுத்த இலக்குதான் சட்ட மன்றமாம்.

ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர் தேர்தலில் போட்டியிடுவது பற்றிப் பேசும்போது, “உங்களால் எவ்வளவு செலவு செய்யமுடியும்?” என கேட்டாராம் ரஜினி. ஆளுக்கொரு தொகையைச் சொல்ல... கும்பலில் இருந்த ஒருவர், ‘‘எங்களுக்குத் தேர்தல் செலவை  ஸ்பான்சர் செய்ய எத்தனையோ பேர் இருக்கிறார்களே’’ என்றாராம். அந்த நபரை முன்னே அழைத்து, ‘‘உங்களுக்கு ஸ்பான்சர் செய்கிறார் என்றால், அதைவிடப் பல மடங்கு பணத்தை உங்களை வைத்து சம்பாதிக்கத் திட்டமிடுகிறார் என்று அர்த்தம். மக்களுக்கு நம்மீது நம்பிக்கை வர வேண்டும். சாதாரண பிரசார நோட்டீஸை வீட்டுக்கு வீடு விநியோகித்தால் போதும். அதிலுள்ள விஷயங்கள் பிடித்திருந்தால், நமக்கு வாக்களிப்பார்கள்’’ என்றாராம் ரஜினி.

உள்ளாட்சித் தேர்தல் டெஸ்ட்... ஆட்சியைப் பிடிப்பது நெக்ஸ்ட்! - ரஜினி  வியூகம்

ரஜினியின் வேட்பாளர் ராமதாஸ்!

ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகத்தைக் கவனித்து வரும் ஐந்து பேரில் ராமதாஸும் ஒருவர். சென்னை தி.நகரில் ஓட்டல் நடத்தி வருகிறார். வெளியூர்களில் ரஜினி மன்ற நிர்வாகிகள் வீடுகளில் விசேஷங்கள் ஏதேனும் நடந்தால், மன்றம் சார்பில் இவர்தான் சென்று வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு, உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு ரத்தானது அல்லவா? அப்போது சென்னை மாநகராட்சி 136-வது வார்டு கவுன்சிலராகப் போட்டியிட ராமதாஸ் விரும்பினார். ரஜினியிடம் போய் அனுமதி கேட்டிருக்கிறார். அவரும் நீண்ட நேரம் யோசித்துவிட்டு, ‘ஓகே’ சொல்லியிருக்கிறார். அந்த நேரத்தில், ‘ரஜினி ரசிகர் மன்றத்தின் முதல் வேட்பாளர்’ என்று ரசிகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் இந்தத் தகவலை வெளியிட்டனர். ரஜினி உடனே ராமதாஸை அழைத்து, ‘‘மன்றம் பெயர் வேண்டாம். ‘ரஜினியின் ஆசி பெற்ற... ரஜினியின் அன்புத்தம்பி’ இப்படி எது வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளுங்கள்’’ என்று அட்வைஸ் செய்தாராம்.

ராமதாஸுக்குச் சொன்னதுதான் எங்களுக்கும்!

ராகவேந்திரா மண்டபத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு வந்திருந்த ரசிகர் மன்றத் தலைவர் ஒருவர், ‘‘உள்ளாட்சித் தேர்தல், எங்களுக்கெல்லாம் தலைவர் வைத்துள்ள டெஸ்ட். அவர், ராமதாஸுக்கு ஓகே சொன்னதில் இருந்தே நீங்கள் புரிந்துகொள்ளலாம்... ரசிகர் மன்றத்தினரை முதலில் தேர்தல்களத்தில் இறக்கிவிட்டார் என்பதை! ரஜினி எண்ணப்படி, இரண்டு உறுதிமொழிகளை வாக்காளர்களுக்குக் கொடுத்துவிட்டே நாங்கள் தேர்தலில் நிற்கப் போகிறோம். ஒன்று... நாங்கள் பதவிக்கு வந்தால், வீட்டு வாசலில் செங்கல், மணல் கொட்டியிருப்பதைப் பார்த்துவிட்டு கமிஷன் கேட்க வரமாட்டோம். இரண்டு... முறைகேடாக நாங்கள் பதவி மூலம் சம்பாதிப்பதாகப் புகார் எழுந்தால் எங்களைப் பதவி விலகக் கோரும் உரிமை மக்களுக்கு இருக்கிறது. இதை உறுதிமொழியாகக் கொடுப்போம். எங்களின் சொத்து விவரங்களையும் மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிப்போம். இதன்மூலம் மக்களின் அபிமானத்தைப் பெற அனைத்து ரசிகர் மன்றத்தினரும் முடிவு செய்திருக்கிறோம். பொறுத்திருந்து பாருங்கள்’’ என்கிறார்.

ரஜினி பதற்றமாக இருந்தது உண்மை!

பெங்களூருவில் உள்ள ரஜினியின் நண்பர் ராஜ் பகதூர் மீடியாக்களிடம் பேசும்போது, ‘‘நண்பர் ரஜினி திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்திருந்தார். அங்கே மிகுந்த பதற்றத்தில் இருந்தார். அரசியல் குறித்து என்னுடன் ஆலோசனை நடத்தினார்.  ‘அரசியலில் ஈடுபடுவதா... வேண்டாமா’ என்கிற குழப்பமான மனநிலையில் அவர் தவித்ததைப் பார்த்தேன். தமிழக மக்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு ரஜினி அரசியலுக்கு நிச்சயம் வருவார். தனிக்கட்சி தொடங்கி அரசியலில் ஈடுபட வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். நானும் அதையே விரும்புகிறேன்’’ என்றார். ‘‘ரஜினியின் ஒப்புதல் இல்லாமல் இவர் பேச மாட்டார்’’ என்கிறார்கள், பெங்களூரில் உள்ள ரஜினியின் நண்பர்கள்.

உள்ளாட்சித் தேர்தல் டெஸ்ட்... ஆட்சியைப் பிடிப்பது நெக்ஸ்ட்! - ரஜினி  வியூகம்

ரஜினி வைத்திருக்கும் கெடு!

அரசியல் பற்றிய தயக்கம் ரஜினி மனதில் இருந்திருந்தால், ரசிகர்கள் சந்திப்பு நிகழ்வின்போது மீடியாக்களை உள்ளே விட்டிருக்க மாட்டார். தன் பேச்சும் நடவடிக்கையும்  மக்களிடம் போக வேண்டும் என அவர் எதிர்பார்த்திருக்கிறார். ரஜினியின் பரம எதிரியாக பா.ம.க ஒருகாலத்தில் இருந்தது. ஆனால், தற்போது பா.ம.க-வின் அன்புமணியைப் பற்றிப் பெருமையாகப் பேசி அந்தத் தரப்பினரைக் கவர்ந்துவிட்டார் ரஜினி. மு.க.ஸ்டாலின், திருமாவளவன், சீமான் ஆகியோரையும் பாராட்டியவர், அ.தி.மு.க-வைப் பற்றி ஒரே வரியில்,  ‘சிஸ்டமே கெட்டுக் கிடக்கே?’ என்று சொல்லிவிட்டார். ரஜினியின் நெருங்கிய நண்பராக இருந்தவர் திருச்சி அடைக்கலராஜ். அவர் தற்போது உயிருடன் இல்லை. அவரின் மருமகன் பிரான்ஸிஸ் பாஸ்டின். தென் மாவட்டங்களில் ரஜினி மன்றத்தினருடன் தொடர்பில் இருந்தவர். அவர், ‘‘அரசியல் கட்சிகளுக்கு ரஜினி கெடு வைத்திருக்கிறார். கெட்டுக் கிடக்கும் இந்த சிஸ்டத்தை  விரைவில் சரி செய்ய வேண்டும். அதை அவர்கள் சரி செய்யாவிட்டால், ரஜினி நிச்சயம் மாற்றிக் காட்டுவார். அவரை மிகவும் சங்கடப்படுத்திய சில லேட்டஸ்ட் விஷயங்களைச் சொல்கிறேன். தமிழகத்தில் பல பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் இல்லை. அப்படியானால், உயர்கல்வி எப்படித் தரமானதாக இருக்கும்? மக்களின் வாக்குகளைக் கவர இலவசங்கள் வேண்டாம்... வேலையைக் கொடுங்கள் என்பதுதான் ரஜினியின் எதிர்பார்ப்பு. அம்மா பெயரில் இலவசத் திட்டங்களுக்காக பல கோடிகள் செலவு என்கிறார்கள். இதை ஏன் நலிவுற்ற ஏழை விவசாயி களுக்குத் தரக் கூடாது? நதிநீர் இணைப்பு என்பது ரஜினியின் பத்து வருடக் கனவு. அதற்காக ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாக அறிவித்தார். அந்தத் திட்டம் இதுவரை செயல்வடிவுக்கு வந்ததா? மருத்துவத்துறையில் ஊழல் தலை விரித்தாடுகிறதே, இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும். அதை ரஜினி செய்வார்’’ என்கிறார்.

உள்ளாட்சித் தேர்தல் டெஸ்ட்... ஆட்சியைப் பிடிப்பது நெக்ஸ்ட்! - ரஜினி  வியூகம்

ரஜினி வருவது நிச்சயம்!

இப்படிச் சொல்வது யார் தெரியுமா? யதார்த்த ஜோதிடர் ஷெல்வி. ‘‘ரஜினியின் நட்சத்திரம் திருவோணம். ராசி மகரம். லக்னம் சிம்மம். யாரோ ஆன்மிக ஆலோசனை சொல்லித் தான் தற்போது அரசியல் பற்றி அவர் வாய் திறந்திருக்கிறார். இதுதான் சரியான தருணம். கடந்த 19 ஆண்டுகளாக இருந்த சனி தசை, வருகிற 31.1.2018-ல் முடிகிறது. அடுத்து வருவது புதன் தசை. இது வருவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே, பாசிடிவ் சிக்னலைக் காட்ட ஆரம்பிக்கும். அந்த வகையில்தான், தற்போது ரஜினி அரசியல் பற்றிப் பேச ஆரம்பித்திருக்கிறார். இதற்கு முன்பு, அவர் குழப்பமான மனநிலையில் இருந்ததற்கும் சனி தசைதான் காரணம். இனி அவரது மனம், பொதுச் சேவை செய்ய உந்துதலை ஏற்படுத்தும். குடும்பம் அல்லாத டிரஸ்ட் ஆரம்பிப்பார். இவருக்கு ஏற்றமாதிரி மற்ற அரசியல் கூட்டணிகள் மாறும். அரசியல் அமைப்பு கட்டத்துக்குள் வந்தே தீருவார். 26.6.2020  வரையிலான காலகட்டத்தில் உடல் ஆரோக்கியத்தில் அவர் மிக மிகக் கவனம் செலுத்த வேண்டும்’’ என்றார்.

ரஜினி அரசியல் குறித்த யூகங்கள் முடிவுக்கு வரும் நாளுக்காகக் காத்திருப்போம்.

- பாலகிஷன்
படம்: ஆ.முத்துக்குமார்