Published:Updated:

பா.ம.க-வில் இருந்து ஒதுக்கப்பட்டாரா காடுவெட்டி குரு?

பா.ம.க-வில் இருந்து ஒதுக்கப்பட்டாரா காடுவெட்டி குரு?
பிரீமியம் ஸ்டோரி
பா.ம.க-வில் இருந்து ஒதுக்கப்பட்டாரா காடுவெட்டி குரு?

பா.ம.க-வில் இருந்து ஒதுக்கப்பட்டாரா காடுவெட்டி குரு?

பா.ம.க-வில் இருந்து ஒதுக்கப்பட்டாரா காடுவெட்டி குரு?

பா.ம.க-வில் இருந்து ஒதுக்கப்பட்டாரா காடுவெட்டி குரு?

Published:Updated:
பா.ம.க-வில் இருந்து ஒதுக்கப்பட்டாரா காடுவெட்டி குரு?
பிரீமியம் ஸ்டோரி
பா.ம.க-வில் இருந்து ஒதுக்கப்பட்டாரா காடுவெட்டி குரு?

ன்னியர் சங்கத் தலைவரான ‘காடுவெட்டி’ குரு, பா.ம.க-வில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார் என பா.ம.க மற்றும் வன்னியர் சங்க வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது. இதற்கு பா.ம.க தரப்பில் இருந்து எந்த எதிர்வினையும் இல்லை. இந்தச் சூழலில், ஏற்கெனவே பா.ம.க-வில் இருந்து விலகிச் சென்றவர்களும், அதிருப்தியாளர்களும் குருவைச் சந்தித்து வருவதாகச் செய்திகள். அரியலூர், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த குருவின் முக்கிய ஆதரவாளர்கள் ஜெயங்கொண்டத்தில் ஒன்றுகூடி விவாதித்துள்ளனர்.

பா.ம.க-வின் முக்கியப் பிரமுகர்கள் சிலரிடம் பேசினோம். “ராமதாஸ், அன்புமணி உள்பட எல்லோரும் ‘மாவீரன்’ என்று அழைக்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவர் குரு. ஆரம்ப காலத்தில் இருந்து வன்னியர் சங்கத்திலும் பா.ம.க-விலும் இருக்கிறார். பல ஆண்டுகளாக வன்னியர் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார்.

பா.ம.க-வில் இருந்து ஒதுக்கப்பட்டாரா காடுவெட்டி குரு?

தன் அதிரடியான பேச்சுகளால் வன்னிய இளைஞர்கள் மத்தியில் குரு பிரபலம். பா.ம.க சார்பில் நடக்கும் கூட்டங்களில் ராமதாஸ், அன்புமணி ஆகியோரின் பேச்சுகளைவிட குருவின் பேச்சையே பா.ம.க-வினர் ஆரவாரத்துடன் ரசிப்பார்கள். அவர் பேசத் தொடங்கினாலே விசில் பறக்கும். காடுவெட்டி குருவின் கூடவே இருக்கும் சிலர், அவரது பெயரைப் பயன்படுத்தி அடிதடி, கட்டப்பஞ்சாயத்து போன்ற செயல்களில் ஈடுபட்டு வழக்குகளிலும் சிக்குகிறார்கள். இதனால், ஒட்டுமொத்த கெட்ட பெயரும் குருவுக்கு ஏற்படுகிறது. 

2001 மற்றும் 2011 சட்டமன்றத் தேர்தல்களில் குரு வெற்றி பெற்றார். இவர், எம்.எல்.ஏ-வாக இருந்த பத்தாண்டுகளில், ஆண்டிமடம் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதிகளில் இவரால் எந்த முன்னேற்றமும் இல்லை. அவரிடம் தேதி பெற்று அழைப்பிதழ்களில் பெயர் போட்டு அழைத்தாலும்கூட, பல நிகழ்ச்சிகளுக்கு அவர் வருவதில்லை. சந்திக்கச் சென்றால், பல மணி நேரம் காக்க வைப்பார். மற்றவர்களைச் சரியாக மதிப்பதும் கிடையாது. இதனால், கட்சியில் இவருக்குச் செல்வாக்கு இல்லை.

முதல்வர் வேட்பாளராக அன்புமணி அறிவிக்கப்பட்ட பிறகு, பா.ம.க-வை அனைத்துச் சமுதாய மக்களுக்குமான இயக்கமாக மாற்ற வேண்டும் என அன்புமணி கடும் முயற்சி செய்கிறார். ஆனால், காடு வெட்டி குருவோ, ‘வன்னியர் ஓட்டு அந்நியர்களுக்கு இல்லை’ எனத் தொடர்ந்து பேசி வருகிறார். முழுக்க முழுக்க வன்னியர் சாதி இளைஞர்களை மட்டுமே குரு நம்பிக் கொண்டிருக்கிறார். இது, அன்புமணிக்கும் குருவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கு முக்கியக் காரணம். வன்னிய இளைஞர்கள் மத்தியில் குருவுக்குப் பெரும் ஆதரவு உள்ளது. அன்புமணிக்குக்கூட அந்தளவுக்கு இல்லை. இந்த நிலையில், ஃப்ளக்ஸ் மற்றும் பேனர்களில் குருவின் படங்களை அன்புமணி ஆதரவாளர்கள் தவிர்த்து வருகிறார்கள்.

பா.ம.க-வில் இருந்து ஒதுக்கப்பட்டாரா காடுவெட்டி குரு?

குருவுக்குத் தொண்டையில் தொற்று ஏற்பட்டு, சில நேரங்களில் பேசுவதற்குச் சிரமப்படுகிறார். இரண்டு முறை அறுவை சிகிச்சையும் செய்துள்ளார். சத்தம் போட்டுப் பேசக் கூடாது என்று குருவை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதன் காரணமாகவும் அவர் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. இதெல்லாம் சேர்ந்துதான் குருவைக் கட்சியைவிட்டு ஒதுக்கிவிட்டார்கள் எனச் சிலர் கிளப்பிவிடுகிறார்கள். குரு மீது எங்கள் அய்யா வைத்துள்ள மதிப்பும் மரியாதையும் இன்றளவும் குறையவில்லை” என்றனர்.

பா.ம.க-வில் இருந்து ஒதுக்கப்பட்டாரா காடுவெட்டி குரு?

குரு ஆதரவாளர்கள் சிலரிடம் பேசினோம். “கட்சியின் வளர்ச்சிக்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்தவர் மாவீரன் குரு. ஆனால், சில விஷமிகள் அவரின் வளர்ச்சியைப் பிடிக்காமல், அவரை ஓரங்கட்ட நினைக்கிறார்கள். அவரைத் தவிர வேறு யாராலும் வன்னியர் சங்கத்தை இவ்வளவு சிறப்பாக எழுச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல முடியாது. கட்சியிலிருந்து அவரை ஓரங்கட்ட நினைத்தால், வன்னியர் சங்கம் இரண்டாகப் பிளவுபடும்” என எச்சரிக்கை விடுவதுபோல பேசினர்.

இதுகுறித்து குருவின் கருத்தை அறிய அவரது செல்போனுக்கு பலமுறை தொடர்புகொண்டும் பேச முடியவில்லை. குருவின் வீட்டுக்கு இரண்டு முறை சென்றோம். இதுகுறித்துப் பேச குரு மறுத்துவிட்டார்.

பா.ம.க-வின் வழக்கறிஞர் பாலுவிடம் பேசினோம். “கட்சியிலிருந்து குரு நீக்கப்பட்ட தாகவோ, அவர் ஒதுங்கியிருக் கிறார் என்றோ சொல்வது அப்பட்டமான பொய். அவர், உடல்நிலை சரியில்லாமல் உள்ளார். அவ்வளவுதான். அவர், கட்சிக்காக எந்தளவுக்கு உழைக்கக்கூடியவர் என்பதை நன்கு தெரிந்தவன் நான். ‘குரு, என் வயிற்றில் பிறக்காத பிள்ளை’ என்று பல கூட்டங்களில் அய்யா பேசியுள்ளார். சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்கூட, ‘அய்யாவையும் என்னையும் பிரிப்பது, என் மரணமாகத்தான் இருக்க முடியும்’ என குரு உருக்கமாகப் சொன்னார். முதன்முதலில், சின்ன அய்யாவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தவரே குருதான். கட்சிக்குள் எந்தப் பிளவும் இல்லை” என்றார் பாலு.

- எம்.திலீபன்