Published:Updated:

‘‘ஓ.பி.எஸ் போல எடப்பாடியும் துரோகி!’’ - திகில் கிளப்பும் தினகரன் டீம்

‘‘ஓ.பி.எஸ் போல எடப்பாடியும் துரோகி!’’ - திகில் கிளப்பும் தினகரன் டீம்
பிரீமியம் ஸ்டோரி
‘‘ஓ.பி.எஸ் போல எடப்பாடியும் துரோகி!’’ - திகில் கிளப்பும் தினகரன் டீம்

‘‘ஓ.பி.எஸ் போல எடப்பாடியும் துரோகி!’’ - திகில் கிளப்பும் தினகரன் டீம்

‘‘ஓ.பி.எஸ் போல எடப்பாடியும் துரோகி!’’ - திகில் கிளப்பும் தினகரன் டீம்

‘‘ஓ.பி.எஸ் போல எடப்பாடியும் துரோகி!’’ - திகில் கிளப்பும் தினகரன் டீம்

Published:Updated:
‘‘ஓ.பி.எஸ் போல எடப்பாடியும் துரோகி!’’ - திகில் கிளப்பும் தினகரன் டீம்
பிரீமியம் ஸ்டோரி
‘‘ஓ.பி.எஸ் போல எடப்பாடியும் துரோகி!’’ - திகில் கிளப்பும் தினகரன் டீம்

“ஓ.பன்னீர்செல்வத்தைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் பி.ஜே.பி-யின் தூதராக மாறிவிட்டார். அம்மாவுக்கும் சின்னம்மாவுக்கும் இவர்கள் துரோகம் செய்துவிட்டார்கள். இதே நிலை நீடித்தால், அ.தி.மு.க-வையே அழித்துவிடுவார்கள்.’’ - இப்படி சொல்வது யார் தெரியுமா? உண்மைத் தொண்டர்கள்.

‘உண்மைத் தொண்டர்கள்’ எனத் தங்களைச் சொல்லிக்கொள்ளும் இவர்கள் யார் தெரியுமா? அ.தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள். தினகரன் கைதைக் கண்டித்து தமிழகத்தின் பல பகுதிகளில் இவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். மதுரை, உசிலம்பட்டி, மேலூர், தேவக்கோட்டை, நெல்லை என தென்மாவட்ட நகரங்களைத் தொடர்ந்து இப்போது தஞ்சை, கோவை பகுதிகளில் போராட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.  இந்தப் போராட்டங்களில்  அ.தி.மு.க அம்மா அணியின் கர்நாடகா மாநிலச் செயலாளர் புகழேந்தி, செய்தித்தொடர்பாளர் நாஞ்சில் சம்பத், நடிகர் குண்டு கல்யாணம் ஆகியோர் பேசிவருகிறார்கள்.

‘‘ஓ.பி.எஸ் போல எடப்பாடியும் துரோகி!’’ - திகில் கிளப்பும் தினகரன் டீம்

மதுரை மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் ராமசுப்பு, மாணவர் அணி முன்னாள் நிர்வாகி வெற்றிப்பாண்டியன், பகுதிக் கழக நிர்வாகி பைகாரா செழியன், ஐ.டி பிரிவு நிர்வாகி உமாகணேசன் ஆகியோர்தான் இந்தப் போராட்டங்களை ஒருங்கிணைக்கும் நான்கு பேர். இவர்களிடம் பேசினோம்.

‘‘அ.தி.மு.க-வுக்குப் பிரச்னை ஏற்பட்ட போதெல்லாம் கட்சியைத் தூக்கி நிறுத்தி, புத்துயிர் கொடுத்தவர் தினகரன். இடையில் விலக்கி வைத்தபோதும், மீண்டும் துணைப் பொதுச் செயலாளர் ஆகும் வரை கட்சிக்கு விசுவாசமாக இருந்தார். முதல்வர் பதவியை இழந்தவுடன் துரோகியாக மாறிய ஓ.பி.எஸ் போல அவர் மாற வில்லை. இன்று அ.தி.மு.க-வில் முக்கியப் பதவிகளில் இருப்பவர்கள் பலரும் தினகரனால் உருவாக்கப்பட்டவர்கள்தான்.

அ.தி.மு.க-வை வழிநடத்தும் தகுதி தினகரனுக்கு மட்டுமே உள்ளது. ஆனால், அவரையே ஒதுக்கிவைப்பதாக அமைச்சர்கள் அறிவித்ததற்குக் காரணம், பி.ஜே.பி மீதான பயம். தங்கள் சொத்துகளைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டுமென்ற பேராசை. அதனால்தான் இந்திய அரசியல் வரலாற்றிலேயே முதல்முறையாக மத்திய அமைச்சர் தலைமையில் அமைச்சர்கள் கூட்டம், தலைமைச் செயலகத்தில் நடக்கிறது.

‘‘ஓ.பி.எஸ் போல எடப்பாடியும் துரோகி!’’ - திகில் கிளப்பும் தினகரன் டீம்

தினகரன் நினைத்திருந்தால் ஆரம்பத்திலேயே பி.ஜே.பி-யுடன் இணைந்து போயிருக்கலாம். இவ்வளவு பிரச்னைகள் வந்திருக்காது. வழக்குகளே வந்திருக்காது, ஓ.பி.எஸ் துரோகியாகி இருக்க மாட்டார். தினகரன் சுயநலவாதியல்ல. திராவிட இயக்க அரசியல் தெரிந்தவர். தமிழர் நலன் சார்ந்து இயங்கக் கூடியவர். அதனால்தான் பி.ஜே.பி-க்குப் பயம் ஏற்பட்டது. தினகரன் கையில் அ.தி.மு.க வந்துவிட்டால், இன்னும் எத்தனை வருடமானாலும் பி.ஜே.பி-யால் தமிழகத்தில் காலூன்ற முடியாது. அதனால்தான் அவர் மீது பொய் வழக்குகள் போட்டு, கட்சியை உடைக்கப் பார்த்தார்கள்.

ஓ.பன்னீர்செல்வத்தைத் தொடர்ந்து எடப்பாடியும் பி.ஜே.பி-யின் தூதராக மாறிவிட்டார். அம்மாவுக்கும் சின்னம்மாவுக்கும் துரோகம் செய்துவிட்டார். தினகரனுக்கு எதிரான அரசியல் சூழ்ச்சிகளையும், சதிகளையும் கண்டித்து ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறோம்.

விசுவாசமுள்ள எம்.எல்.ஏ-க்கள், முக்கிய நிர்வாகிகள் இந்தப் போராட்டங்களுக்கு வந்துவிடுகிறார்கள். ஆனால், சின்னம்மாவாலும், தினகரனாலும் அடையாளம் காட்டப்பட்ட பல அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் நன்றி கெட்டவர்களாக மாறிப்போனார்கள். எங்களுடைய பழங்காநத்தம் ஆர்ப்பாட்டத்துக்கு யாரும் போகக்கூடாதென்று உத்தரவு போட்டார் செல்லூர் ராஜு. ‘ஃபேஸ்புக் பாக்குற அம்பது பேர் கலந்துகொள்வாங்க’ என நக்கலடித்தார்.  தன் சட்டை பாக்கெட்டில் சின்னம்மா படத்தை வைத்து நடிக்கும் இவர், கட்சி அலுவலகத்திலும், நிகழ்ச்சிகளிலும் சின்னம்மா படத்தை அப்புறப்படுத்திய வர்தான்.

‘‘ஓ.பி.எஸ் போல எடப்பாடியும் துரோகி!’’ - திகில் கிளப்பும் தினகரன் டீம்

மேலூர் ஆர்ப்பாட்டத்தில் எல்லா கிளைச் செயலாளர் களும் கலந்துகொண்டனர். இதைப் புறநகர் மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பாவாலும் அமைச்சர் உதயகுமாராலும் தடுக்க முடியவில்லை. சின்னம்மா மற்றும் தினகரனுக்கு விசுவாசமாக இல்லாத இவர்களை, கட்சியினர் நம்பத் தயாராக இல்லை.அமைச்சர்கள் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார்கள். தினகரனை டெல்லி போலீஸ் கைது செய்தபோது, சின்ன எதிர்ப்பைக்கூட காட்டவில்லை.  வழக்கிலிருந்து தினகரன் மீண்டு, கட்சி அவர் கட்டுப்பாட்டில் வரும்போது இந்த நம்பிக்கை துரோகிகள் களையெடுக்கப்படுவார்கள்’’ என்றனர்.

சமீபத்தில், திருச்சியில் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதற்காக சென்றபோது, தினகரனின் தந்தை விவேகானந்தனைச் சந்தித்துள்ளனர் இவர்கள். ‘‘ஆரம்பத்தில் சில சுயநலவாதிகளுக்குக் கட்சியில் பதவிகள் கொடுத்துவிட்டனர். தினகரன் வந்து அவர்கள் அனைவரையும் களை எடுக்க வேண்டும்’’ என்று விவேகானந்தன் இவர்களிடம் சொன்னாராம்.

சசிகலா குடும்பத்திலிருந்து இன்னும் எத்தனை பேர் வருவார்களோ!

- செ.சல்மான்
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்