Published:Updated:

சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு வழங்கப்படுமா? ரஜினி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை

சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு வழங்கப்படுமா?  ரஜினி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்  கோரிக்கை
சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு வழங்கப்படுமா? ரஜினி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை
சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு வழங்கப்படுமா?  ரஜினி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்  கோரிக்கை

மும்பை: மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறைத்தண்டனையை மறு பரிசீலனை செய்யக்கோரி  மகராஷ்ட்ரா கவர்னருக்கு மனு அனுப்ப முடிவு செய்துள்ளார். இந்நிலையில் அவருக்கு மன்னிப்பு வழங்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

கடந்த 1993 ஆம் ஆண்டு நிகழ்ந்த மும்பை குண்டுவெடிப்பு வழக்கில், ஆயுதம் பதுக்கியது மற்றும் வெடிமருந்து பதுக்க குடோன் வழங்கியது ஆகிய குற்றச்சாட்டுக்களுக்காக சஞ்சய் தத்துக்கு தடா நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. இதனை எதிர்த்து சஞ்சய் தத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சஞ்சய் தத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனையை 5 ஆண்டுகளாக குறைத்து உத்தரவிட்டது. 

இவ்வழக்கு விசாரணையின்போது, அவர் ஏற்கனவே 18 மாதங்கள் தண்டனை அனுபவித்து விட்டார். எனவே மீதம் உள்ள மூன்றரை ஆண்டுகள் அவர் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவை நேற்றே மும்பையில் உள்ள சஞ்சய்தத் வீட்டில் போலீசார் நேரில் வழங்கினார்கள்.

##~~##
இந்நிலையில் இத்தண்டனையை மறுபரிசீலனை செய்யக் கோரி  மகராஷ்ட்ரா கவர்னருக்கு மனு அனுப்ப சஞ்சய்தத் முடிவு செய்துள்ளார்.  இடைப்பட்ட 10 ஆண்டு காலத்தில் சஞ்சய் தத் நன்னடத்தையில் உள்ளார். எந்த குற்றச்செயலிலும் ஈடுபட்டதாக புகார் இல்லை. மேலும் திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையிலும் ஈடுபட்டுள்ளார். இவற்றை மேற்கோள் காட்டி மனு அனுப்பினால் அதை பரிசீலிக்க இடம் உள்ளதாக சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்கண்டேய கட்ஜுவும், சஞ்சய் தத்துக்கு மன்னிப்பு வழங்க கோரி மகாராஷ்ட்ரா ஆளுனருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் அஸ்வினி குமார், " கவர்னரிடம் சஞ்சய் மனு அளித்தால், அப்போது ஆளுனர் தனக்குள்ள அதிகராத்தை பயன்படுத்தி அவரை மன்னிக்கலாம். ஆனால் அரசுன் இதுகுறித்து எதுவும் கருத்து கூற முடியாது" என்றார்.
இதற்கிடையே சஞ்சய் தத்தை அடுத்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. அப்போது அவர் மீண்டும் கைதாகி சிறையில் அடைக்கப்படுவார். அவர் புனே எரவாடா சிறையில் அடைக்கப்படுகிறார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
தேவைப்பட்டால் இதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதுதொடர்பாக கவர்னரை சந்தித்து சஞ்சய் தத்தை விடுதலை செய்ய வேண்டும் என முறையிட உள்ளதாக ஜெயா பச்சனும் தெரிவித்துள்ளார்.
ரஜினி, ஜெயா பச்சன்  கோரிக்கை
பாலிவுட் பிரபலங்களும் சஞ்சய் தத்தை மன்னித்து விடுதலை செய்ய வேண்டும் என கூறி வருகின்றனர். அத்துடன் நடிகர் ரஜினி காந்த்தும், சஞ்சய் தத்துக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார்.
“சஞ்சய்  தத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனை என்னை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது. அதேவேளையில் அவரை விடுதலை செய்ய வேண்டும் என பல தரப்பினரும் விடுத்து வரும் கோரிக்கைகள் நம்பிக்கையூட்டுகிறது.
இந்த தண்டனையிலிருந்துஅவருக்கு விலக்கு கிடைத்து எஞ்சியுள்ள நாட்களை அவர் அமைதியாகவும் நிம்மதியாகவும் கழிக்க வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்” என கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்றத்திலும் மறு ஆய்வு மனு

இதனிடையே உச்ச நீதிமன்றத்தில் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மறு ஆய்வு செய்யக்கோரி சஞ்சய் தத் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.