Published:Updated:

திவாகரன் மீண்டும் கைது ஏன்? - திகைக்க வைக்கும் திரைமறைவு காரணங்கள்!

திவாகரன் மீண்டும்  கைது ஏன்?  - திகைக்க வைக்கும் திரைமறைவு காரணங்கள்!
திவாகரன் மீண்டும் கைது ஏன்? - திகைக்க வைக்கும் திரைமறைவு காரணங்கள்!

மன்னார்குடி: சசிகலாவின் சகோதரர் திவாகரன் மீண்டும் அதிரடியாக கைது செய்யப்பட்டிருப்பது அ.தி.மு.க. வட்டாரத்தில் பலபேருக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

திவாகரன் மீண்டும்  கைது ஏன்?  - திகைக்க வைக்கும் திரைமறைவு காரணங்கள்!

நில அபகரிப்பு மற்றும் வீடு இடிப்பு புகாரில் ஏற்கெனவே ரிஷியூர் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் தமிழார்வனிடம் பணி செய்தவரின் மனைவி கஸ்தூரி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் திவாகரன் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸ், இந்த வழக்கில் அவரை ஓட ஓட விரட்டி கைது செய்தது

இந்த நிலையில் மீண்டும் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். தமிழார்வன் மற்றும் கஸ்தூரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இப்போது மீண்டும் திவாகரனை கைது செயதிருக்கிறது நீடாமங்கலம் போலீஸ்.

திவாகரன் மீண்டும்  கைது ஏன்?  - திகைக்க வைக்கும் திரைமறைவு காரணங்கள்!

இது வெளியில் சொல்லப்படும் காரணம். ஆனால், சொல்லாத பல காரணங்கள் இந்த கைதின் பின்னணியில் இருப்பதாக திவாகரனுக்கு நெருக்கமானவர்கள் பட்டியல் தருகிறார்கள்.

''அ.தி.மு.க-வை விட்டு நீக்கப்பட்ட திவாகரன் கொஞ்ச நாட்கள் அப்செட்டில் இருந்தார். பிறகு மௌனம் கலைத்து தனது பழைய நட்புகளை புதுப்பிக்க ஆரம்பித்தார். கூடவே தி.மு.க., காங்கிரஸ் புள்ளிகள் சிலரோடும் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். குறிப்பாக தி.மு.க. புள்ளிகள் வீட்டு திருமணங்கள் சிலவற்றில் கலந்து கொண்டு சர்ச்சையில் சிக்கிக் கொண்டார். .

மேலும், சசிகலா மீண்டும் கார்டனுக்குள் கால்பதித்த பிறகு அ.தி.மு.க. பிரமுகள் பலர் மீண்டும் திவாகரன் வீட்டிற்கு படையெடுத்தார்கள். கட்சியிலும் ஆட்சியிலும் தங்களுக்கு தேவையான இடத்தை பிடிப்பதற்கு சிலர் திவாகரனிடம் துண்டு போட்டு இடம் பிடித்தார்கள்.

##~~##

இந்த நிகழ்வுகளை எல்லாம் இங்குள்ள சசிகலா போலீஸ், மேலிடத்திற்கு தெரியப்படுத்தாமல் மறைத்து விட்டது. இந்த விவகாரங்கள் எல்லாம் இப்போது  வேறு ரூட்டில் தெரிய வந்ததும்தான் கைது நடவடிக்கை பாய்ந்திருக்கிறது" என்கிறார்கள் மன்னார்குடி அ.தி.மு.ககாரர்கள்.

நேற்று இரவு 8 மணிக்கு திருவாரூர் மாவட்டம் சுந்தரக்கோட்டையில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்ட திவாகரன்,, நீடாமங்கலம் காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டார். இவரோடு  அ.தி.மு.க. காரர்களான கிருஷ்ண மேனன், ராஜேந்திரன் ஆகியோரையும் கைது செய்து அழைத்து வந்தது போலீஸ்.

திவாகரன் மீண்டும்  கைது ஏன்?  - திகைக்க வைக்கும் திரைமறைவு காரணங்கள்!

இவர்கள் இருவரையும் விடுவிக்கக் கோரி உள்ளூர்வாசிகள் சிலர் ஸ்டேஷன் வாசலில் படை திரட்டியதை அடுத்து, மூவரையும் வேறு இடத்திற்கு மாற்றியது போலீஸ். மீண்டும் நள்ளிரவு 12 மணிக்கு நீடாமங்கலம் காவல் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்ட மூவரும்,. இரண்டு மணிக்கு நீடாமங்கலம் மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். மூவருக்கும் 15 நாள் காவல் விதிக்கப்பட்டதை அடுத்து, இன்று அதிகாலையில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்

திவாகரன் மீண்டும்  கைது ஏன்?  - திகைக்க வைக்கும் திரைமறைவு காரணங்கள்!

பின்னர். இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் பேசியவர்கள், ''திவாகரன் கைது ஒரு தொடக்கம் தான். அவரோடு நெருக்கமாக இருக்கும் இன்னும் சிலர் மீதும் அடுத்தடுத்து நடவடிக்கைகள் பாயலாம்" என்று சஸ்பென்ஸ் வைக்கிறார்கள்.

-கு.ராமகிருஷ்ணன்

படங்கள்: எஸ். சிவபாலன்