ஒவ்வொரு வெள்ளியும் புதுப்படம் வெளியான காலம் போய் இப்போது கோலிவுட்டில் இருந்து வாராவாரம் ஒரு முதல்வர் வேட்பாளர் இறக்குமதியாகிறார்! திடீர் பிரஸ்மீட், உணர்ச்சி ததும்பும் உரை, ஆங்காங்கே குறியீடுகள் - அவ்வளவுதான். ‘வா தலைவா’ என நாபிக்கமலத்தில் இருந்து குரலெழுப்பி வரவேற்கிறது தமிழ்ச்சமூகம். அப்படி சமீப காலமாக ரசிகர்களைச் சிலிர்க்க வைத்துக்கொண்டிருக்கும் முதல்வர் வேட்பாளர்கள் 2.0 பற்றிய லிஸ்ட் இது!

ரஜினிகாந்த்:

இவரைப் பற்றி: சினிமாவில் பல ஆண்டுகளாக வசூல் சக்ரவர்த்தி. அரசியலில் மவுன மெழுகுவர்த்தி. கடந்த 20 ஆண்டுகால அரசியலும் தன்னைச் சுற்றியே நடப்பதாக நம்புகிறார் (அ) நம்ப வைக்கப்பட்டிருக்கிறார். சினிமாவைப் போலவே நிஜ வாழ்க்கையிலும் பின்னணி இசை அதிர பில்டப் ஏற்றுபவர். ‘என் ஆதரவு யாருக்கும் இல்லை’ என ஒவ்வொரு தேர்தலின்போதும் பற்ற வைத்துவிட்டு இமயமலைச் சாரலில் குளிர் காயும் மகான்.

தகுதிகள்: ஏழு கோடி பேரையும் தொடர்ந்து பல காலத்திற்கு குழப்பத்திலேயே வைத்திருக்கும் மனோதத்துவ நிபுணர். ‘வரும்... ஆனா வராது’ ட்ரெண்டை ‘என்னத்த’ கண்ணையாவிற்கு முன்பே ஆரம்பித்து வைத்த வள்ளல். ‘இன்னிக்கு ஒரு பேச்சு, நாளைக்கு ஒரு பேச்சு’ பேசாத நாணயக்காரர்.

அரசியலுக்கு வரத் தூண்டுவது: த.மா.க, பா.ஜ.க, அ.தி.மு.க உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள தொள்ளாயிரத்து சில்லறை கட்சிகளும் ரசிகர் மன்றங்களும்.

பிடித்த பன்ச்: ‘ஆண்டவன் ஆணையிட்டால் அரசியலுக்கு வருவேன்’

பட்டங்கள்: தமிழகத்தின் சிறந்த செல்லக்’குரல்’, அரசியலின் அனந்த் வைத்தியநாதன். சும்மாவா! ‘வாய்ஸ்’ எக்ஸ்பர்ட்ல!

விஜய்:

இவரைப் பற்றி: ‘அண்ணா...’ என ரசிகர்கள் அழைப்பதை அறிஞர் அண்ணா எனப் புரிந்து வைத்திருக்கும் வெகுளி. ‘தந்தை சொல்மிக்க மேஜிக் இல்லை’ என்பதை உறுதியாக நம்பி, அதனால் பலப்பல ரெய்டுகள் வந்தாலும் பின்வாங்காதவர். ரஜினிக்காவது அரசியல் என்ட்ரிதான் ஜவ்வாய் இழுக்கும். இவருக்கு படங்களே ‘வருமா வராதா?’ ரகம்தான். ஜல்லிக்கட்டுப் போராட்டம். பண மதிப்பு ஒழிப்பு என எல்லாப் பிரச்னைகளின்போதும் லைம் லைட்டிற்கு வருவார்.

தகுதிகள்: ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் ஒவ்வொரு கட்சிக்கு ஆதரவாக குரல் கொடுப்பது, நிஜ வாழ்க்கைக்குப் பொருந்தும் வகையிலேயே பன்ச் பேசி பின் ரிவர்ஸ் கியர் போடுவது போன்றவை இவரின் சிறப்பம்சங்கள்.

அரசியலுக்கு வரத் தூண்டுவது: எஸ்.ஏ.சி என்னும் மூன்றெழுத்து மந்திரம்.

பிடித்த பன்ச்: Time to lead* (மாறுதலுக்கு உட்பட்டது)

பட்டங்கள்: ‘லேட் ரிலீஸ்’ லெஜண்ட், தந்தைக்கேற்ற தனயன்

விஷால்

இவரைப் பற்றி: அதிக தேர்தல்களில் போட்டியிட்டு கின்னஸ் சாதனை படைத்த பத்மராஜனுக்கு ஒரே போட்டி விஷால்தான் என ட்ரம்பே ஒப்புக்கொண்டதாக தகவல். இவர் நடித்து வெளியாகும் படங்களைவிட, போட்டிபோட்டு வெளியாகும் தேர்தல் முடிவுகள் அதிகம். சினிமாவில் காட்டும் ஆக்ஷன் ரீலை அவ்வப்போது நிஜத்திலும் ஓட்டுவார். இளவயது நாயகர்களுக்கு இவர்தான் கேங்லீடர்.

தகுதிகள்: அசராமல் தொடர்ச்சியாக பிரஸ்மீட்கள் வைத்து மணிக்கணக்கில் பேசுவது, நடிகர் சங்க கட்டடத்தை ‘இழைத்து இழைத்து’ கட்டுவது, திருட்டு வி.சி.டி-க்களை வேட்டையாடுவது, ஸ்டிரைக் அறிவிப்பு விட்டு விளையாடுவது என பல தகுதிகளை கைவசம் வைத்திருக்கிறார்.

அரசியலுக்கு வரத் தூண்டுவது: ‘தம்பி... உங்க ராசிக்கு சி.எம் சீட்டுக்கு நின்னாலும் ஜெயிச்சுடலாம்’ என யாரோ கிளப்பிவிட்டதுதான்!

பிடித்த பன்ச்: முதல்ல கட்டடம், அப்புறம்தான் கல்யாணம்.

பட்டங்கள்: வருங்கால அமெரிக்க ஜனாதிபதி, எலெக்ஷன் கில்லி.

லாரன்ஸ்:

இவரைப் பற்றி: சில காலம் முன்பு வரை சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தவர் ஜனவரிக்குப் பின்னால் தலைப்புச் செய்தியானார். இவருக்கு மெரினா புரட்சியில் முக்கியப் பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. (தேவாவே சொன்னார் மொமென்ட்!) முதல்நாள் ‘அரசு அடிக்கிறது’ எனவும் மறுநாள் அப்படியே மாற்றி அரசைப் போற்றி சால்வை போடவும் செய்யும் ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டிக்குச் சொந்தக்காரர்.

தகுதிகள்: இந்தப் பக்கம், அந்தப் பக்கம் என்று இல்லாமல், எல்லாப் பக்கங்களிலும் கோல் போடுவது இவரின் முக்கியத் தகுதி. சூப்பர் ஸ்டாரின் வாரிசாகவே தன்னை பாவித்துக்கொள்ளும் ‘ஆண்’ சந்திரமுகி.

அரசியலுக்கு வரத் தூண்டுவது: இதுக்குப் பதில் அவருக்கே தெரியாது.

பிடித்த பன்ச்: மொட்ட சிவா கெட்ட சிவாடா!

பட்டங்கள்: குட்டி எந்திரன், ஜுனியர் கபாலி

ஆர்.ஜே பாலாஜி:

இவரைப் பற்றி: ஐநூறு, ஆயிரம் செல்லாது என்ற அறிவிப்பு வெளியாகி மொத்த இந்தியாவும் தத்தளித்த நேரத்தில், ‘இதெல்லாம் ஒரு பிரச்னையா?’ என ஜென் நிலையில் வீடியோ போட்டு கருத்து சொன்னவர். அதே பழக்க தோஷத்தில், மாணவர்களை காவல்துறை அடித்து வெளுத்தபோதும் ‘ஏன் போலீஸை அடிக்கிறீங்க?’ என இன்டர்ஸ்டெல்லார் ரேஞ்சுக்கு மாற்றிப் பேசிய மந்திரக்காரர். ‘சமச்சீர் கல்வி வேஸ்ட் தெரியுமா?’ என கருத்து முத்து உதிர்த்த மூத்த கல்வியியலாளர்.

தகுதிகள்: ‘வர்லாம் வர்லாம் வா’ என ஹிஸ்டாரிக் ஸ்பீச்களை நிகழ்த்திக் காட்டுவது, கருத்தே இல்லையென்றாலும் கருத்து சொல்றேன் என ஸ்டேட்டஸ் - வீடியோ போடுவது, கூட்டம் கூடினால் உணர்ச்சிவசப்பட்டு எகிறுவது என ஏராளமான தகுதிகள் கொட்டிக் கிடக்கின்றன.

அரசியலுக்கு வரத் தூண்டுவது: ‘வரணும், நீங்க அரசியலுக்கு வரணும்’ என கமென்ட் செய்யும் நான்கு ஃபேக் ஐ.டிக்கள்

பிடித்த பன்ச்: ‘இனிமே கேப்போம், இனிமே கேப்போம்’

பட்டங்கள்: வின்ஸ்டன் சர்ச்சில் 2.0

- நித்திஷ்
ஓவியங்கள்: கோ.ராமமூர்த்தி