Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

சுந்தரிப்ரியன், வேதாரண்யம்

‘மோடியின் இலங்கைப் பயணம் வெற்றி’ என்று இலங்கை அமைச்சர் ஒருவர் சொல்லி இருக்கிறாரே?


புத்த சாமியார்கள் உட்கார்ந்து இருக்கும்போது அவர்களைத்  தலைகவிழ்ந்து இந்தியப் பிரதமர் கும்பிடு போட வேண்டும் என்பது அவர்களது திட்டமானால் இலங்கைப் பயணம் வெற்றிதான். விழா எடுக்கலாம்!

கழுகார் பதில்கள்!

சி.கார்த்திகேயன், சாத்தூர்

நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களைச் சந்திப்பது அவ்வளவுக் கடினமான பெரிய விஷயமா?


ஜெயலலிதா போயஸ் கார்டனில் இருந்து கட்சியின் தலைமைக் கழகத்துக்கு வரும்போது வாழை மரம் கட்டி, கட் அவுட் வைத்து வரவேற்புத் தந்ததற்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை!

வரதன், காஞ்சிபுரம்

கழுகார் பதில்கள்!

ஜெயலலிதா படத்தைச் சட்டசபையில் திறக்கலாமா?

உச்சநீதிமன்றம் இதற்கான வழிகாட்டு நெறிமுறையை வகுக்க வேண்டும்.

சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம்

‘கருணாநிதிக்கு இருக்கும் அரசியல் முதிர்ச்சி ஸ்டாலினுக்கு இல்லை’ என்கிறாரே தமிழிசை?


கருணாநிதியின் வயதுக்கு ஸ்டாலின் வரும் போது முதிர்ச்சி வரும். அப்பா குமரிஅனந்தனின் முதிர்ச்சி தமிழிசைக்கு வந்துவிட்டதா என்ன?

சோ.பூவேந்த அரசன், சின்னதாராபுரம்

ஜெயலலிதா மனது வைத்திருந்தால் இன்னும் என்னவெல்லாம் சாதித்திருக்க முடியுமென்று கருதுகிறீர்கள்?


கருணாநிதிக்கு இருந்த குடும்பத்தடைகள், முக்கியப் பிரமுகர்களின் தடைகள் ஜெயலலிதாவுக்கு இல்லை. எனவே அவர் நாட்டுக்காக எவ்வளவோ நல்ல விஷயங்களைச் செய்திருக்க முடியும். தான் என்ற மிதமிஞ்சிய கர்வமும், சசிகலா குடும்பத்தினர் வெட்டிய அகழிகளும், பணத்தாசையும்தான் அவரைத் துணிச்சலான பல முடிவுகளை எடுக்க முடியாமல் தடுத்தன.

ஜெயலலிதா மனது வைத்திருந்தால் என்னவெல்லாம் சாதித்திருக்க முடியும் என்பதைப் பட்டியலிடுவதுக் கடினம். என்னவெல்லாமோ செய்தாரே அதனைப் பட்டியலிடுவதும் கடினம்.

கழுகார் பதில்கள்!

பி.தர்ஷினி, குடந்தை.1

 ‘தனிக்கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை’ என்கிறாரே நடிகை விந்தியா?


இந்த நாட்டில் கட்சி தொடங்குவது கடலைமிட்டாய் வாங்குவது போல அவ்வளவு சாதாரணமாக ஆகிவிட்டது. அதுதான் விந்தியா பேச்சில் இருந்து தெரிகிறது.

எம்.ஜி.ஆர். இறந்தபோது சரோஜாதேவி கொடுத்த பேட்டியில், ‘‘பெங்களூருவில் இருந்த எனக்குத் திடீரென எம்.ஜி.ஆர். போன் செய்தார். மெட்ராஸுக்கு வரச்சொன்னார். ‘உனக்கு எம்.பி.  பதவி தரப்போகிறேன்’ என்று சொன்னார். ‘நான் குடும்பத்தோடு இங்கு செட்டில் ஆகிவிட்டேன். அதனால் வேண்டாம்’ என்று சொன்னேன். அதனால் விட்டுவிட்டார்” என்று சொன்னார். அந்த எம்.ஜி.ஆர்-தான் வெண்ணிற ஆடை நிர்மலாவுக்கு எம்.எல்.சி.யும் ஜெயலலிதாவுக்கு எம்.பி.யும் கொடுத்தார்.

இப்படிப்பட்ட நாட்டில், விந்தியாக்களின் எண்ணங்களும் முக்கியமானவைதான்!

ரமேஷ், ஈரோடு

‘பிரதமரிடம் அரசியல் சம்பந்தமாகப் பேசவில்லை’ என்கிறாரே முதல்வர் எடப்பாடி பழனிசாமி?

சேலத்து மாம்பழம்
தித்திக்கும் மாம்பழம்
அல்வா போல மாம்பழம்
அனைவருக்கும் வேண்டுமா
பங்கு போட்டுத் தின்னலாம் - என்று பாடி இருப்பார் எடப்பாடி?

கழுகார் பதில்கள்!

அ.ச.நாராயணன், பாளையங்கோட்டை

மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தமிழ்நாட்டுக்குக் காட்டும் திடீர்க் கரிசனம் பற்றி..?


இது திடீர்க் கரிசனம் அல்ல. பல ஆண்டுகளாகவே அவருக்கும் தமிழ்நாட்டுக்கும் ‘வர்த்தக’ உறவுகள் உண்டு.

எஸ்.பி.விவேக், தாதம்பட்டி

வருமான வரிச் சோதனை அடிக்கடி நடக்கிறதே?


அவர்களுக்கு வருமானம் வேண்டாமா?

பொன்விழி, அன்னூர்

தி.மு.க.வேர் ஊன்றக் காரணமான முடிதிருத்தும் நிலையங்களை நினைத்துப் பார்க்கிறார்களா?


இவர்களுக்கும் ‘முடி’யைப் பற்றிய கவலைதான். தலைமுடியை அல்ல. மணிமுடியை!

பாரதிமுருகன், மணலூர்பேட்டை

 ‘போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்’ என்கிறாரே ரஜினி?


பாகுபலி படம் பார்த்த பாதிப்பாக இருக்கலாம்.

கழுகார் பதில்கள்!

“ஒரு காலத்தில் இந்தியாவுக்கே அரசியல்  ரீதியாக முன்னோடியாகத் திகழ்ந்த தமிழினம்,இன்று எல்லோரும் சிரிக்கிற நிலைக்குச் சீரழிந்து போனதற்கு என்ன காரணம்?”

லை நிமிர்ந்து நிற்கக் கூடிய தன்னம்பிக்கை உள்ளத் தலைமை இல்லாததுதான் காரணம். இந்தியாவின் பிரதமராக நேரு இருக்கலாம். ஆனால் அவரே மதிக்கும் தலைவராக காமராசர் இருந்தார். ஏதாவது பிரச்னை என்றால் ராஜாஜியிடம் கலந்தாலோசனை செய்தார் நேரு. சாஸ்திரி காலத்திலும் இந்திரா காலத்திலும் மதிக்கத்தக்கவராக காமராசர் இருந்தார். அதன்பிறகு அப்படிப்பட்ட தலைவர்கள் காங்கிரஸில் இல்லை. தனது பேச்சைக் கேட்கும் தலையாட்டிப் பொம்மைகளைத்தான் டெல்லி தேடி வைத்துக் கொண்டது. இன்று ‘க்ளார்க்’ அளவுக்குத் தான் தமிழகத் தலைவர்களுக்கு மரியாதை இருக்கிறது. இதேபோலத்தான் பி.ஜே.பி.யிலும்.

தமிழ்நாட்டு பி.ஜே.பி. தலைவர்களை அதன்  டெல்லித் தலைமை மதிப்பதாகவே தெரியவில்லை. தமிழ்நாட்டு நலன் சார்ந்த முடிவுகளுக்கு எதிராகவே முடிவுகள் எடுக்கிறார்கள் என்றால் இவர்களுக்கு என்ன மரியாதை இருக்கிறது என்பதைச் சொல்லாமலேயே தெரிந்து கொள்ளலாம்.

காங்கிரஸ் கட்சிக்கு அடித்தளமாக நம் தமிழகத் தலைவர்கள் இருந்ததுபோலவே, காங்கிரஸ் கட்சிக்கு எதிரான அணி அமைப்பதற்கும் தமிழகத் தலைவர்கள் அடித்தளம் அமைத்தார்கள். வி.பி.சிங் ஆட்சி அமைக்க கருணாநிதி துணை நின்றார். தேவகவுடாவும் குஜ்ராலும் பிரதமர் ஆக கருணாநிதியும் மூப்பனாரும் துணை நின்றார்கள்.அடுத்தடுத்து அமைந்த ஆட்சிகளுக்குக் கருணாநிதியும் ஜெயலலிதாவும் துணையாக இருந்தார்கள். இவர்களை நம்பி மத்திய ஆட்சி இருந்தது. ஆனால் இன்று ஏன் சிரிக்கிறார்கள் என்றால்.... எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் போட்டிபோட்டுக் காவடி தூக்குகிறார்கள். கீழே உட்காரச் சொன்னால் தரையில் படுத்துவிடுகிறார்கள். திருநாவுக்கரசருக்கும் தமிழிசைக்கும் தங்களைப் பதவியை விட்டுத் தூக்காமல் இருந்தால் போதும். டெல்லித் தலைமை என்ன முடிவுகள் எடுத்தாலும் எதிர்கேள்வி கேட்க மாட்டார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்திய அரசியலுக்குத் தமிழகத்திலிருந்து எப்படி முன்னோடிகள் கிடைப்பார்கள்?

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: கழுகார் பதில்கள்,  ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை,  சென்னை- 600 002 kalugu@vikatan.com  என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!