Published:Updated:

“அமைச்சர் பதவி கேட்பதில் தவறில்லை!’’ - ராஜன் செல்லப்பா அதிரடி

“அமைச்சர் பதவி கேட்பதில் தவறில்லை!’’ - ராஜன் செல்லப்பா அதிரடி
பிரீமியம் ஸ்டோரி
“அமைச்சர் பதவி கேட்பதில் தவறில்லை!’’ - ராஜன் செல்லப்பா அதிரடி

“அமைச்சர் பதவி கேட்பதில் தவறில்லை!’’ - ராஜன் செல்லப்பா அதிரடி

“அமைச்சர் பதவி கேட்பதில் தவறில்லை!’’ - ராஜன் செல்லப்பா அதிரடி

“அமைச்சர் பதவி கேட்பதில் தவறில்லை!’’ - ராஜன் செல்லப்பா அதிரடி

Published:Updated:
“அமைச்சர் பதவி கேட்பதில் தவறில்லை!’’ - ராஜன் செல்லப்பா அதிரடி
பிரீமியம் ஸ்டோரி
“அமைச்சர் பதவி கேட்பதில் தவறில்லை!’’ - ராஜன் செல்லப்பா அதிரடி

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, ‘அ.தி.மு.க அம்மா அணி’ எம்.எல்.ஏ-க்கள் குரூப் குரூப்பாகப் போய் சந்தித்து வருகின்றனர். ‘தொகுதிப் பிரச்னைகளை முதல்வரிடம் பேசிவிட்டு வந்தோம்’ என்று அவர்கள் சொன்னாலும், ‘கூவத்தூரில் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும்’ என்று முதல்வருக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே அவர்கள் சென்றனர் என்று சொல்லப்படுகிறது.

கூவத்தூரில் எம்.எல்.ஏ-க்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ராஜன் செல்லப்பா, தங்க தமிழ்செல்வன், இன்பதுரை போன்றவர்களுக்கு அமைச்சர் பதவி உறுதி என்று அப்போது சொல்லப்பட்டதாம். ஆனால், அதை மறந்துவிட்டு தன்னையும், தன் குடும்பத்தையும்  முன்னிலைப்படுத்துவதில் முதல்வர் எடப்பாடி ஆர்வம் காட்டுவதாக எம்.எல்.ஏ-க்கள் கடுப்பாகியுள்ளனர்.

இந்த நிலையில்தான், மதுரையில் நடந்த அரசு விழாவில் “அம்மா படத்தை சட்டசபையில் வைக்க முடியவில்லையென்றால், இந்த அரசு இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன?’’ என்று ஆவேசமாகப் பேசியுள்ளார் மதுரை வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ-வும், புறநகர் மாவட்டச் செயலாளருமான ராஜன் செல்லப்பா. முதல்வர் மீதான கோபத்தில்தான் அப்படிப் பேசினார் என்று சொல்லப்படும் நிலையில், இந்த விவகாரம் குறித்து ராஜன் செல்லப்பாவிடம் பேசினோம்.

“அமைச்சர் பதவி கேட்பதில் தவறில்லை!’’ - ராஜன் செல்லப்பா அதிரடி

“சில எம்.எல்.ஏ-க்கள், முதல்வரிடம் அமைச்சர் பதவி கேட்டதாகச் சொல்லப்படுகிறது. நீங்கள் அப்படி ஏதும் கோரிக்கை வைத்துள்ளீர்களா?’’

“அப்படியெல்லாம் யாரும் கோரிக்கை வைக்க முடியாது. அம்மாவின் ஆட்சி தொடர வேண்டும். அவர் உருவாக்கிய திட்டங்கள் மக்களைச் சென்றடைய வேண்டும். அதற்கு அமைச்சர் பதவி இருந்தால்தான் சேவையாற்ற முடியும் என்று இல்லை. தொகுதிக்கான கோரிக்கைகளுக்காகத்தான் முதல்வரைச் சந்தித்து வருகிறார்கள். அப்படிச் செல்பவர்களில் சிலர், அமைச்சர் பதவிக்கான கோரிக்கையை வைக்கலாம். அது ஒன்றும் தவறில்லை.’’

“உங்களுக்குப் பின்னாலும் சில எம்.எல்.ஏ-க்கள் இருக்கிறார்கள். கட்சியில் சீனியரான நீங்களும் அமைச்சர் பதவி கேட்டு கோரிக்கை வைத்தாகச் சொல்லப்படுகிறதே?’’

“என்னை, அம்மாதான் மாவட்டச் செயலாளர் ஆக்கினார்; எம்.பி ஆக்கினார்; பவர்ஃபுல்லான மதுரை மாநகராட்சி மேயராக்கினார்; எம்.எல்.ஏ-வாக்கினார். இவற்றை விட வேறு என்ன எனக்கு வேண்டும்? முதல்வர், சிறப்பாக ஆட்சி செய்கிறார். அவருடன் இணைந்து நாங்கள் பணியாற்றுகிறோம். அப்படி இருக்கையில், நான் ஏன் அமைச்சர் பதவி கேட்கப்போகிறேன் என்று சிலர் கிளப்பி விடுகிறார்கள்.’’

  “இப்போது, அ.தி.மு.க-வில் ஒரு கட்டுப்பாடு இல்லாத மாதிரி தெரிகிறதே?’’

“அப்படியெல்லாம் இல்லை. சின்னச் சின்ன சலசலப்புகள்... விரைவில் சரியாகிவிடும்.’’

‘‘கட்சியின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலாவையும், தினகரனையும் சில எம்.எல்.ஏ-க்கள் பார்த்து வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடந்து வருகின்றனவே?’’

“போய்ப் பார்க்கலாம். யாரையும் தடுக்கவில்லை. போராட்டங்களில் கட்சி நிர்வாகிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. அ.தி.மு.க. கொடி கட்டினால் கட்சித் தொண்டர்கள் போகத்தான் செய்வார்கள். இப்போது கட்சியில் ஏற்பட்டிருக்கிற குழப்பங்கள், சீக்கிரம் முடிவுக்கு வந்துவிடும்.’’

 “பி.ஜே.பி-யின் கட்டுப்பாட்டில் அ.தி.மு.க ஆட்சி நடப்பதாக சொல்லப்படுகிறதே?’’

‘‘மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்த மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதில் தவறில்லையே?’’

“நீங்கள் ‘ஜெ. படத்தை வைக்க முடியாவிட்டால், இந்த ஆட்சி இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன’ என்று கோபமாகப் பேசியதற்கு என்ன காரணம்?’’

“கோபமாகப் பேசவில்லை. அம்மா படத்தை சட்டசபையில் வைக்கக் கூடாது என்று சொன்னதற்குதான் அப்படிச் சொன்னேன். இதே பா.ம.க., தே.மு.தி.க-வுக்கு அவர்களுடைய சின்னங்களைப் பெற்றுத்தரக் காரணமாக இருந்தவரே, அம்மாதான். அப்படிப்பட்ட அம்மாவின் படத்தை, சட்டசபையில் வைக்கக் கூடாது என்று ராமதாஸ் சொல்கிறார். அதற்குதான் அப்படிச் சொன்னேன்.’’

‘‘அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் ஒரு சோர்வு தெரிகிறதே?’’

‘’அ.தி.மு.க நிர்வாகிகளும், தொண்டர்களும், எப்போதுமே புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி புகழ் பரப்ப இயங்குபவர்கள். அ.தி.மு.க-வின் வாக்குவங்கியை எந்தக் கட்சியாலும், எப்போதும் அசைத்துக்கூடப் பார்க்க முடியாது. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளோம். அதை, மதுரையிலிருந்துதான் தொடங்குகிறோம். அதற்குள், அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து சென்றவர்கள் இணைந்து விடுவார்கள்’’ என்றார்.

 ராஜன் செல்லப்பா இப்படிச் சொன்னாலும், “சில எம்.எல்.ஏ-க்கள் தனியாகக் கூட்டம் போட்டுப் பேசிவருகிறார்கள். மக்களிடம் கெட்டபெயர் சம்பாதித்துள்ள அமைச்சர்களை நீக்கிவிட்டு, தங்களை நியமிக்கும்படி, முதல்வரிடம் அவர்கள் கோரிக்கை வைத்து வருவது உண்மைதான்’’ என்கிறது அ.தி.மு.க வட்டாரம். இந்த நிலையில், ‘இப்போதைக்கு அமைச்சரவையில் மாற்றம் கிடையாது’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளது, கட்சிக்குள் உஷ்ணத்தை அதிகரித்துள்ளது.

 - செ.சல்மான்
படம்: வீ.சதீஷ்குமார்