Published:Updated:

“பிரிந்தவர்கள் திரும்பினால் அனைவருக்கும் நல்லது!” - வரவேற்கும் அமைச்சர் ஜெயக்குமார்!

“பிரிந்தவர்கள் திரும்பினால் அனைவருக்கும் நல்லது!” - வரவேற்கும் அமைச்சர் ஜெயக்குமார்!
பிரீமியம் ஸ்டோரி
“பிரிந்தவர்கள் திரும்பினால் அனைவருக்கும் நல்லது!” - வரவேற்கும் அமைச்சர் ஜெயக்குமார்!

“பிரிந்தவர்கள் திரும்பினால் அனைவருக்கும் நல்லது!” - வரவேற்கும் அமைச்சர் ஜெயக்குமார்!

“பிரிந்தவர்கள் திரும்பினால் அனைவருக்கும் நல்லது!” - வரவேற்கும் அமைச்சர் ஜெயக்குமார்!

“பிரிந்தவர்கள் திரும்பினால் அனைவருக்கும் நல்லது!” - வரவேற்கும் அமைச்சர் ஜெயக்குமார்!

Published:Updated:
“பிரிந்தவர்கள் திரும்பினால் அனைவருக்கும் நல்லது!” - வரவேற்கும் அமைச்சர் ஜெயக்குமார்!
பிரீமியம் ஸ்டோரி
“பிரிந்தவர்கள் திரும்பினால் அனைவருக்கும் நல்லது!” - வரவேற்கும் அமைச்சர் ஜெயக்குமார்!

ரண்டு அணிகளாக அ.தி.மு.க பிரிந்து கிடக்கும் நிலையில், அ.தி.மு.க அரசின் ஓராண்டு சாதனையும், எடப்பாடி பழனிசாமி பதவியேற்று நூறு நாள்களானதன் சாதனையும் தமிழக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஓ.பன்னீர்செல்வமோ ‘ஜெயலலிதாவின் மரணத்தில் புதைந்திருக்கும் மர்மத்தை வெளிக்கொண்டு வருவேன்’ என்று நெடும்பயணம் மேற்கொண்டுள்ளார். ‘அ.தி.மு.க-வின் இரு அணிகளும் இணையவேண்டும்’ என்ற கோரிக்கைக்கு விழுந்த முட்டுக்கட்டை இன்னும் தீராத நிலையில், அமைச்சர் டி.ஜெயக்குமாரிடம் பேசினோம்.

“இரு அணிகளும் இணைவதுபோல் நெருக்கம்காட்டி, பின்னர் பிரிகிற நிலை உண்டாகி உள்ளதே?”

“அந்த நிலையை நாங்கள் ஒருபோதும் உண்டாக்கவில்லை. ‘கூடிவாழ்ந்தால் கோடி நன்மை’ என்பது முதல்வர் அம்மா எங்களுக்குச் சொல்லித்தந்த பாடம். அதை நாங்கள் உறுதியாகப் பின்பற்றுகிறோம்.”

“இரு அணிகளும் இணைவதைத் தடுக்கும் சக்திதான் எது?’’

“அதுதான் எங்களுக்கும் புரியவில்லை. அவர்கள்தான் அதைச் சொல்லவேண்டும். அன்றும் சரி; இன்றும் சரி. ‘வாருங்கள் பேசுவோம், அம்மாவின் ஆட்சி நடக்கிறது. இதை நல்லபடியாகக் கொண்டுசெல்வோம்’ என்றுதான் தொடர்ந்து சொல்லி வருகிறோம்.”

“பிரிந்தவர்கள் திரும்பினால் அனைவருக்கும் நல்லது!” - வரவேற்கும் அமைச்சர் ஜெயக்குமார்!

“எதிர் அணியில் உள்ளவர்கள் குறித்து நீங்கள் சில விமர்சனங்களை வைத்தீர்கள். இது இணைப்புக்கு முட்டுக்கட்டை போடுவது போலாகிவிடாதா?”

“பேட்டிகள், பத்திரிகைகளில் வந்த செய்திகள் என்று அனைத்தையும் பாருங்கள். மிகவும் மோசமான முறையில், பண்பாடற்ற வார்த்தைகளில் எதிர் அணியில் உள்ள சிலர்தான், எங்கள் மீது விமர்சனம் வைத்திருப்பார்கள். அதைச் செய்தியாளர்கள் சுட்டிக்காட்டி, ‘அதன் மீது உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்’ என்று கேட்கும்போது, என் கருத்தைச் சொல்கிறேன். அதிலும் ஒழுங்குமுறையைக் கடைப்பிடித்தே பேசுகிறேன். எங்கள் அணியில் உள்ள அனைவருமே அப்படித்தான் பேசுகிறோம். இதைப் பார்த்தாலே, நல்லெண்ணத்தோடு அணுகுமுறையைக் கையாள்வது எந்த அணி என்பது தெரியும்.”

“கட்சியில் சசிகலா, தினகரன் ஆகியோரின் தலையீடு கூடாது என்பதுதானே எதிர் அணியினரின் முக்கியக் கோரிக்கை. அந்தக் கோரிக்கையை நீங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்கிறீர்களா?”

“கட்சியில் அவர்கள் இல்லை என்பதைச் சொல்லும் விதமாகத்தானே அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் சசிகலா படங்கள் எல்லாம்கூட அகற்றப்பட்டன. மக்களும் அதைப் பார்த்துக் கொண்டுதானே இருந்தார்கள்?”

“எடப்பாடி பழனிசாமி ஆட்சி எப்படி நடக்கிறது?”

“நடந்துகொண்டிருப்பது அம்மாவின் ஆட்சி. எந்தத் தலையீடும் இல்லாமல் சுதந்திரமான ஆட்சி நடக்கிறது. தலைமைக் கழகத்துக்குத் தொண்டர்கள் எப்போதும்போல திரளாக வருகிறார்கள். அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் வருகிறார்கள்... அடிமட்டத் தொண்டனின் கோரிக்கை மனுக்கள் எப்போதும்போல் கட்சி அலுவலகத்தில் பெறப்பட்டு, அவற்றின் மீது உடனுக்குடன் தீர்வு காணப்படுகிறது. கோட்டையில் பொதுமக்களின் மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. இதுதான் அம்மாவின் ஆட்சிக்குச் சாட்சி.”

“உள்ளாட்சித் தேர்தல் தேதி நெருங்கிவிட்டது; அ.தி.மு.க. இரு அணிகளாகப்  பிளவுபட்டுக் கிடக்கும் நேரத்தில் சின்னம் இல்லாமல் இருப்பது,  வெற்றியைப் பாதிக்காதா?”

“அதிகமான எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள்., மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் அனைவருமே எங்களிடம்தான் இருக்கிறார்கள். அதைவிட முக்கியம், அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறோம். இரட்டை இலைச் சின்னமும் எங்களிடம்தான் வந்துசேரும். அதில் எந்தச் சந்தேகமும் யாருக்கும் வேண்டாம்.”

“உங்கள் அணிக்கு வரவழைப்பதுபோல், வரவழைத்து ‘காலி’ செய்துவிடும் திட்டம் போட்டுள்ளதாக எதிர் அணியினர் சொல்லி வருகிறார்களே?”

“அது தேவையற்ற பயம். மிகவும் பலம் பொருந்திய நிலையில் நாங்கள் இருந்தும், யாரையும் நாங்கள் உதாசீனம் செய்ய விரும்பவில்லை. ‘சிறுதுளி பெருவெள்ளம்’ என்ற கருத்தின்படி சேர்ந்திருக்கவே விரும்புகிறோம். பிரிந்து சென்ற சகோதரர்கள் மீண்டும் ஒற்றுமையுடன் கழகத்துக்குத் திரும்ப வேண்டும். அதைத்தான் உலகம் ஏற்கும். அதுதான் இயல்பாகவும் இருக்கும். மீண்டும் சொல்கிறோம்...நாங்கள் யாரையும் இழக்க விரும்பவில்லை. அவர்கள் ஏன் இணைவதற்கு வரவில்லை என்பது இந்த நிமிடம் வரை எங்களுக்குப் புரியவில்லை. வந்தால் அனைவருக்கும் நல்லது.”

‘‘ஜெயலலிதா மரணத்தில் புதைந்திருக்கும் மர்மத்தை வெளிக்கொணர்வேன் என ஓ.பி.எஸ் கூறிவருகிறாரே?’’

‘‘முன்னாள் முதல்வரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகத் தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்ற உத்தரவுக்கு அனைவரும் கட்டுப்படுவோம்.’’

- ந.பா.சேதுராமன்
படம்: ஆ.முத்துகுமார்