Published:Updated:

பிரதமரைச் சந்தித்த எடப்பாடி சகலை... அ.தி.மு.க-வினர் கவலை!

பிரதமரைச் சந்தித்த எடப்பாடி சகலை... அ.தி.மு.க-வினர் கவலை!
பிரீமியம் ஸ்டோரி
பிரதமரைச் சந்தித்த எடப்பாடி சகலை... அ.தி.மு.க-வினர் கவலை!

பிரதமரைச் சந்தித்த எடப்பாடி சகலை... அ.தி.மு.க-வினர் கவலை!

பிரதமரைச் சந்தித்த எடப்பாடி சகலை... அ.தி.மு.க-வினர் கவலை!

பிரதமரைச் சந்தித்த எடப்பாடி சகலை... அ.தி.மு.க-வினர் கவலை!

Published:Updated:
பிரதமரைச் சந்தித்த எடப்பாடி சகலை... அ.தி.மு.க-வினர் கவலை!
பிரீமியம் ஸ்டோரி
பிரதமரைச் சந்தித்த எடப்பாடி சகலை... அ.தி.மு.க-வினர் கவலை!

மிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். சகல அமைச்சர்களுடன் பிரதமரைச் சந்திப்பார் என நினைத்தால், தன் சகலையுடன் பிரதமரைச் சந்தித்து அதிரவைத்துள்ளார் முதலமைச்சர்.

மின்துறை அமைச்சர் தங்கமணி, ஒருநாள் முன்கூட்டியே டெல்லிக்குச் சென்று, இதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமரைச் சந்திக்கும்போது முதல் 10 நிமிடங்கள் மட்டும் சம்பிரதாயத்துக்காக அரசு அதிகாரிகள் இருந்தனர். பிறகு, அனைவரையும் வெளியே நிற்க வைத்துவிட்டு தன் சகலையான மாணிக்கத்தை மட்டும் தன்னோடு வைத்துக்கொண்டு, மோடியிடம் தனிமையில் பேசியுள்ளார்.

‘அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு அப்படி என்ன பிரதமரிடம் பேசினார்? முதல்வர் எடப்பாடியின்  சகலை யார்?’ என்பவை, தமிழக அரசியலையும் தாண்டி பொதுமக்களிடமும் ஆயிரம் வாட்ஸ் கேள்விகளாக இருந்து வருகின்றன.இந்தச்  சம்பவத்தால்  ஆளும்கட்சியினர்  பலர், முதல்வர் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். 

பிரதமரைச் சந்தித்த எடப்பாடி சகலை... அ.தி.மு.க-வினர் கவலை!

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூர் பேரூராட்சி அம்மாபாளையம் வாய்க்கால்கரை, காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர்கள் காளியண்ணன்- பாக்கியம் தம்பதியினர். இவர்களுக்கு ராதா, சுசீலா என்ற இரண்டு மகள்கள். வெங்கடேஷ் என்ற ஒரு மகன். மூத்த மகள் ராதாவை முதல்வர் பழனிசாமிக்கும், இளைய மகள் சுசீலாவை பள்ளிப்பாளையம் அருகே உள்ள குப்பாண்டபாளையத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மாணிக்கத்துக்கும் மணம் முடித்தனர். இந்தச் சகலையைத்தான் பழனிசாமி, பிரதமரிடம் தனிமையில் பேசும்போது தன்னோடு வைத்துக்கொண்டார்.  

இதுபற்றி அ.தி.மு.க-வினரிடம் விசாரித்தபோது, ‘‘மாணிக்கம் சென்னை சட்டக்கல்லூரியில்  எல்.எல்.பி., முடித்தார். பிறகு தன் சொந்த ஊரில் விவசாயம் பார்த்தார். அவ்வப்போது திருச்செங்கோடு, சங்ககிரி நீதிமன்றங்களுக்குச் சென்று வருவார். தொழிலில் முன்னேற்றம் இல்லாததால், ஆழ்துளைக் கிணறு தோண்டும் ரிக் வண்டிகளை வாங்கிப் போட்டார். இவருடைய ரிக் வண்டிகள் மத்தியப்பிரதேசத்தில் ஓடிக் கொண்டிருந்தன.

மாணிக்கம் ஆங்கிலமும், இந்தியும் சரளமாகப் பேசக்கூடியவர். மாணிக்கம் - சுசீலா தம்பதியினருக்கு கீர்த்தனா என்ற மகளும், ஸ்ரீஹரி என்ற மகனும் இருக்கிறார்கள். மாணிக்கத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெருங்கிய உறவு முறை ஆவது போல, மின்துறை அமைச்சர் தங்கமணியும் நெருங்கிய உறவுக்காரர்தான்.

கடந்த ஐந்து ஆண்டுகளாகத்தான் பழனிசாமியோடு மாணிக்கத்துக்கு நெருக்கம் அதிகரித்தது. அதன் பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு அனைத்து அரசியல் நகர்வுகளையும் நிழல் போல இருந்து கவனித்து வந்தார். தேர்தல் நேரங்களில் வேட்புமனுவைப் பூர்த்தி செய்வது முதல், எந்த நேரத்தில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும். யாரை டம்மி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதுவரை அனைத்து வேலைகளையும் மாணிக்கம் பார்த்து வந்தார்.

இது தவிர எடப்பாடி குடும்பத்து சொத்துப் பரிவர்த்தனைகள் மற்றும் வருமானவரித் துறை கணக்கு வழக்குகள் முழுவதையும் மாணிக்கம் கவனித்து வந்தார். ஆனால், நேரடியாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும், அரசியல் கூட்டங்களிலும் முகத்தை காட்டாமல் திரைமறைவு வேலைகளை மட்டுமே செய்துவந்தார். இப்போது பிரதமரைச் சந்தித்தில் இருந்து எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாரிசாகவே மாணிக்கத்தை நாங்கள் பார்க்கிறோம்’’ என்றார்கள்.

‘‘முதல்வர் பழனிசாமி, மொழிபெயர்ப்பாளராக  மாணிக்கத்தை உடன் வைத்திருந்ததாக சொல்லப்பட்டாலும், உண்மையில் பேசிய விஷயங்கள் வேறு” என்கிறார்கள், எடப்பாடி குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள். ‘‘சி.பி.ஐ வழக்கில் கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஃபைலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தொடர்புடையவர்களின் பெயரும் இருப்பதால், அதைப்பற்றி நேரடியாக பிரதமரிடம் விளக்கிச் சொல்வதற்காகவும், மாணிக்கத்துக்குத் தேசிய மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினர் பதவி வாங்கி தருவதற்காகவும்தான் உடன் அழைத்துச் சென்றார்’’ என்கிறார்கள் அவர்கள். 

‘‘பேசிய விஷயம் எதுவாக இருந்தாலும், அ.தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் வேணுகோபால், மற்றும் மூத்த அமைச்சர்கள் இருக்கும்போது தன் சகலை மூலமாக பிரதமரிடம் பேசியது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்ததோடு, கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தி இருக்கிறது’’ என்றார்கள் அ.தி.மு.க-வினர்.

இதுபற்றி முதல்வர் பழனிசாமியின் சகலை மாணிக்கத்திடம் கேட்டதற்கு, ‘‘கருத்து ஏதும் சொல்ல விரும்பவில்லை’’ என்றார். மின்துறை அமைச்சர் தங்கமணியிடம் பேசியபோது, ‘‘அவர் ஏதோ தனிமையில் பிரதமரைப் பார்த்துப் பேச விரும்பி இருக்கிறார். பார்த்திருக்கிறார். மொழிபெயர்ப்புக்காக தன் சகலையை உடன் வைத்திருக்கிறார். இதில் என்ன இருக்கிறது? வேண்டாம் தம்பி, அந்தப் பிரச்னையை விட்டு விடுங்க தம்பி’’ என்றார்.

- வீ.கே.ரமேஷ்