Published:Updated:

இலங்கை அரசை கண்டித்து நடிகர்- நடிகைகள் ஏப்ரல் 2இல் உண்ணாவிரதம் : ரஜினி, கமல் பங்கேற்பு

சென்னை: இலங்கை அரசை கண்டித்து சென்னையில் ஏப்ரல் 2ஆம் தேதி  படப்பிடிப்புகளை ரத்து செய்துவிட்டு ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்-நடிகைகள் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொன்ற  ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தியும், தனி ஈழம் கோரியும் தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.  கல்லூரி மாணவர்களும் போராட்ட களத்தில் குதித்து இருப்பதால் பிரச்னை தீவிரம் அடைந்துள்ளது.

இந்த நிலையில், இலங்கை அரசை கண்டித்து தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே கடந்த 19ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

இதைத்தொடர்ந்து, இலங்கை அரசுக்கு எதிராக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் ஏப்ரல்  2ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.

##~~##
சென்னை தியாகராயநகர் அபிபுல்லா சாலையில் உள்ள நடிகர் சங்க வளாகத்தில் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற இருக்கிறது. இதில், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட அனைத்து நடிகர்-நடிகைகளும் பங்கேற்கிறார்கள்.
உண்ணாவிரதத்தையொட்டி, அன்றைய தினம் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. வெளியூர்களில் நடைபெறும் படப்பிடிப்புகளையும் ரத்து செய்துவிட்டு, சென்னையில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ளும்படி நடிகர்-நடிகைகளை நடிகர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.