Published:Updated:

தாமஸ் விவகாரம்... பிரதமர் பொறுப்பேற்பதாக அறிவிப்பு


புதுடெல்லி, மார்ச்.4,2011

மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே.தாமஸ் நியமன விவகாரத்தில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை தாம் மதிப்பதாகவும், இவ்விவகாரத்துக்கு தாம் பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். ##~~##

ஊழல் வழக்கு நிலுவையில் உள்ள பி.ஜே.தாமஸை சி.வி.சி.யாக நியமனம் செய்தது செல்லாது என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு அளித்தது.
 
முன்னாள் தொலைத்தொடர்பு செயலர் பி.ஜி.தாமஸை, மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பிரதமர் தலைமையிலான மூன்று பேர் கொண்ட உயர்க் குழுவே நியமித்தது.

இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த பிஜேபி மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், தாமஸ் நியமனத்தை கடுமையாக எதிர்த்தார். ஆனால் பிரதமரும், உயர்க் குழுவின் மற்றொரு உறுப்பினரான உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் தாமஸ் நியமனத்தில் உறுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், "சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை மதிக்கிறேன். அனைத்துக்கும் நான் பொறுப்பேற்கிறேன்," என்று கூறிய பிரதமர், "இதுபோன்ற நிகழ்வு பிற்காலத்தில் நடக்காமல் பார்த்துக்கொள்வேன்," என்றார்.

பிஜேபி கருத்து...

தாமஸ் விவகாரத்துக்கு தாம் பொறுப்பேற்பதாக பிரதமர் கூறியிருப்பதை தாம் பாராட்டுவதாகவும், எனவே இந்த விவகாரத்தை இத்துடன் முடித்துக்கொள்ளலாம் என்றும் சுஷ்மா ஸ்வராஜ் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், பிரதமர் தார்மீகப் பொறுப்பேற்றுக் கொள்வது மட்டும் போதாது என்று தெரிவித்துள்ள பிஜேபி, இதுபற்றிய விரிவான அறிக்கையை நாடாளுமன்றத்தில் பிரதமர் தாக்கல் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.