Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!
கழுகார் பதில்கள்!

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

அ.தி.மு.க-வின் இரு அணிகளும் இணைந்தால் யாருக்கு லாபம்...யாருக்கு நஷ்டம்?


ன்ன நிபந்தனைகளின் அடிப்படையில் இணைகிறார்கள்    என்பதைப் பொறுத்தது அது. பொதுவாகச் சொல்ல வேண்டுமானால், அந்த இரண்டு அணிகளும் இணைவதுதான் அ.தி.மு.க-வுக்கு நல்லது. இரண்டு அணிகளுக்கும் கொள்கை வேறுபாடுகள் பெரிதாக எதுவும் இல்லை.

த.சத்தியநாராயணன், அயன்புரம்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நடக்கிறதா...நடத்தப்படுகிறதா?


நடக்கவும் இல்லை; நடத்தப்படவும் இல்லை. படுக்க வைக்கப்பட்டு இருக்கிறது.

கழுகார் பதில்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சம்பத்குமாரி, பொன்மலை.

விஜயபாஸ்கர், காமராஜ் என்று ஒவ்வொரு அமைச்சராக வில்லங்கத்தில் மாட்டியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்த அமைச்சர்களைப் பதவியில் இருந்து விலக்கவில்லையே?


நினைத்தவுடன் நடவடிக்கை எடுப்பதற்கு எடப்பாடி என்ன ஜெயலலிதாவா? அவரால் நினைத்தையெல்லாம் செய்ய முடியுமா? விஜயபாஸ்கர்கள், காமராஜ்கள் தயவில்தான் எடப்பாடிகள் இருக்க முடியும்!

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14.

நிலைத்து நின்று வரலாறு படைப்பது காதல் திருமணமா அல்லது பெற்றோர் நடத்தி வைக்கும் திருமணமா?


எந்த முறைப்படி திருமணம் நடந்தால் என்ன...? எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே திருமணங்கள் நிலைத்து நீடிக்கும்.

மனதைப் பொறுத்ததே மணம்!

பா.சீமான்ஜிபாரதி, வாசுதேவநல்லூர்.

சாமியார்களுக்கு எதற்கு இத்தனை ஆடை, ஆபரண அலங்காரங்கள்?


போகிற போக்கைப் பார்த்தால் அவர்களுக்கு எதற்கு நிலம், பங்களாக்கள், ஆசிரமங்கள் என்று கேட்பீர்கள் போல இருக்கிறதே!

ஆசை யாரை விட்டது? அவர்கள் அதைத் துறப்பது இல்லையே!

மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

மு.க.ஸ்டாலின் ஒரு குளத்தில் தூர்வாருவது போல் போஸ் கொடுத்திருப்பது பற்றி...?


போஸ் கொடுப்பது மட்டும்தானே இங்கு அரசியல்?

கழுகார் பதில்கள்!

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

அரசியல் பெரும்புள்ளிகளுக்கு எதிரான வருமான வரித்துறை ரெய்டுகள் குறித்த பரபரப்பு ஒரே நாளோடு முடிந்துவிடுகிறதே?


அவர்களது குற்றங்களை முற்றிலுமாக அம்பலப்படுத்தி நடவடிக்கை எடுப்பது நோக்கமாக இருந்தால், தொடர்ந்து அது செய்தியாக இருக்கும். ஆனால், ரெய்டு நடத்துவதாக நடித்து ஒரு மிரட்டலைச் செய்தால் அது ஒருநாள் செய்தியாகத்தான் முடியும். தினகரன் முதலில் ஜாமீன் கேட்டபோது, ‘‘இன்னும் சிலரைக் கைது செய்ய இருக்கிறோம்’’ என்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால், யாரும் கைதாகவில்லை. அவரும் ஜாமீனில் வந்துவிட்டார். இது போலத்தான் ரெய்டு நடவடிக்கைகளிலும் நடக்கிறது.

த.சத்தியநாராயணன், அயன்புரம்

தி.மு.க-வைச் சுட்டிக்காட்டி அ.தி.மு.க-வின் குற்றங்கள் நியாயப்படுத்தப்படுவது பற்றி?


இப்படித்தான் அ.தி.மு.க-வைச் சுட்டிக்காட்டி தி.மு.க-வின் குற்றங்கள் நியாயப்படுத்தப்பட்டு வந்தன. இப்படி ‘கோள்’ சொல்லும் அரசியல்தான் கொள்கை அரசியலாக தமிழ்நாட்டில் நடக்கிறது.

அ.பிரகாஷ், கோவை-10.

கருணாநிதி அறிக்கைக்கும் ஸ்டாலின் அறிக்கைக்கும் என்ன ஒற்றுமை, வேற்றுமை?


கருணாநிதியின் அறிக்கையில் வர்ணனைகள் இருக்கும். ஸ்டாலினின் அறிக்கையில் வார்த்தைகள் இருக்கும்.

காஞ்சி எஸ்.ஃபைசுதீன், காஞ்சிபுரம்.

மதுவுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்துவரும் நிலையில், மாற்று வருமான வழிகள் பற்றி அரசு சிந்திப்பதாகத் தெரியவில்லையே?

அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் மாற்றுப் பாதை அல்ல; மதுப்பாதை மட்டும்தான்!

மு.சதாசிவம், உதகை.

மகாபாரத சகுனிக்கும், அ.தி.மு.க சசிகலாவுக்கும் என்ன வித்தியாசம்?

மகாபாரதத்தில் ஒரு சகுனிதான் உண்டு. சசிகலா குடும்பத்தில்தான் எத்தனை சகுனிகள்? மகாபாரதத்துடன் இவர்களை ஒப்பிட முடியாது. இந்த மகாபாதகத்தில் தர்மனே இல்லை என்பதைக் கவனிக்கவும்.

கழுகார் பதில்கள்!

க.சுல்தா ஸலாஹீத்தீன் மழாஹிரி, காயல்பட்டினம்.

ரஜினி தனது ரசிகர்களைச் சந்தித்த தொடர் நிகழ்வின் மேடையில் இடம்பெற்றிருந்த தாமரை எதைக் குறிக்கிறது?


இந்தியாவின் தேசிய மலர் என்று சொன்னால் நீங்கள் நம்பப் போகிறீர்களா? அது பி.ஜே.பி-யின் தேர்தல் சின்னம் என்பது அனைவர் மனதிலும் பதிந்திருக்கும். ரஜினி தனது சினிமா கம்பெனிக்கு ‘லோட்டஸ் இன்டர்நேஷனல்’ என்று பல ஆண்டுகளுக்கு முன்பே பெயர் வைத்தார். அதுதான் அதில் இடம்பெற்றுள்ளது.

கழுகார் பதில்கள்!

தமிழகத்தில் அமைச்சர்களும் அதிகாரி களும் தெரிந்தே தவறு செய்கிறார்கள்.  இந்த நிலையில் நீதிமன்றம் என்ன செய்ய வேண்டும்?

நீதிமன்றங்கள் சட்டத்தின் ஆட்சியை மட்டுமல்ல, நியாய தர்மத்தின் ஆட்சியையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பை உடையவை. பெரும்பாலான நேரங்களில் இதனை நீதிமன்றங்கள் மிகச் சரியாகச் செய்கின்றன. சில நேரங்களில் நீதி, தாமதிக்கப்பட்டதாக ஆகிவிடுகிறது. அதுதான் சிக்கலே.

இந்த வாரத்து உதாரணத்தையே எடுத்துக்கொள்ளுங்கள்.... சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும விதிகளை மீறி, கூடுதலாக இரண்டு மாடிகளோடு கட்டடத்தை தி சென்னை சில்க்ஸ் நிறுவனம் தி. நகரில் கட்டுகிறது. அரசு அதிகாரிகள் அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கிறார்கள். உடனே சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளர் நீதிமன்றம் சென்று தடை வாங்குகிறார். அதிகாரிகளால் எதுவும் செய்ய முடியவில்லை.

விதிமீறி கட்டப்பட்ட 64 கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உடனே நீதிமன்றம் சென்று அவர்கள் தடை வாங்கிவிடுகிறார்கள். அதனால் நடவடிக்கை தடைப்படுகிறது.

தடை வழங்கும் சட்ட வல்லமை நீதிமன்றங்களுக்கு உண்டு. தடை போடுவதில் தவறும் இல்லை. ஆனால், அந்த மனுக்களைப் பரிசீலனை செய்து உடனடியாக தீர்ப்புத் தந்திருந்தால், இதுபோன்ற துயரச் சம்பவங்களைத் தடுத்திருக்கலாமே! தாமதிக்கப்படும் நீதி, மறுக்கப்படும் நீதியாகத்தான் புரிந்துகொள்ளப்படும்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:  கழுகார் பதில்கள்,  ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை,
சென்னை- 600 002  kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism