சமூகம்
தொடர்கள்
Published:Updated:

“கலைஞர் பக்குவம் ஸ்டாலினிடம் இல்லை!” - விடுதலைச் சிறுத்தைகள் வன்னியரசு

“கலைஞர் பக்குவம் ஸ்டாலினிடம் இல்லை!” - விடுதலைச் சிறுத்தைகள் வன்னியரசு
பிரீமியம் ஸ்டோரி
News
“கலைஞர் பக்குவம் ஸ்டாலினிடம் இல்லை!” - விடுதலைச் சிறுத்தைகள் வன்னியரசு

“கலைஞர் பக்குவம் ஸ்டாலினிடம் இல்லை!” - விடுதலைச் சிறுத்தைகள் வன்னியரசு

து ஒழிப்புப் போராட்டத்துக்காகக் கைது செய்யப்பட்டு 22 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு ஜாமீனில் வெளியே வந்துள்ளார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான வன்னியரசு. எதற்காக இந்தச் சிறைவாசம்? அவரிடம் கேட்டோம்.

“கலைஞர் பக்குவம் ஸ்டாலினிடம் இல்லை!” - விடுதலைச் சிறுத்தைகள் வன்னியரசு

‘‘தாம்பரம் பக்கத்தில் சமத்துவபுர பெரியார் நகர், அஞ்சுகம் நகர், வரதராஜபுரம் என இந்தப் பகுதியில் பெரும்பாலான வீடுகளில் அண்ணனை, தம்பியை, அப்பாவைப் பறிகொடுத்த சோகக் கதைகள் இருக்கும். காரணம், மது. நெடுஞ்சாலையோரம் உள்ள மதுக்கடைகளை மூடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் தாம்பரம் - கிஷ்கிந்தா சாலையில் உள்ள டாஸ்மாக் கடை, தொடர்ந்து சட்டவிரோதமாக இயங்கியபடியே இருந்தது. 

நாங்கள் போராடியதற்கு முதல் நாள் இரவு, வேலைக்குப் போய்விட்டுத் திரும்பிய ஒரு பெண்ணிடம், டாஸ்மாக்கில் குடித்துவிட்டுத் திரும்பியவர்கள் தவறாக நடந்துகொள்ள முயன்றனர். இந்தக் கொடுமை, பகுதி மக்களையும் எங்களையும் கொந்தளிக்கச் செய்தது. அடுத்த நாளே நூற்றுக்கணக்கான மக்களுடன் அந்த டாஸ்மாக் முன் திரண்டோம். மக்கள் போராட்டத்தால், மதுக்கடையே தீக்கிரையாக்கப்பட்டது. இதையொட்டி, ‘பொதுச் சொத்தைச் சேதப்படுத்தினார்கள்’ என்று எங்களில் 23 பேரைக் கைதுசெய்தது காவல்துறை. இனிமேல் மதுக்கடைகளை எதிர்த்து மக்கள் போராடவே முடியாத அளவுக்குக் கடுமையான நிபந்தனைகளை விதித்தது தமிழக அரசு. பெரும் சட்டப் போராட்டம் நடத்தியே வெளியில் வந்தோம்.’’

‘‘நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடும் உத்தரவு பா.ம.க-வின் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. அதற்குப் போட்டியாகத்தான் உங்கள் கட்சி, இப்படிப் போராடுகிறதா?’’

‘‘இல்லவே இல்லை. பா.ம.க-வின் சட்ட முயற்சிகளை நாங்கள் பாராட்டுகிறோம். அதேநேரம் நாங்கள் களத்தில் இறங்கிப் போராடுகிறோம். மக்களை மீட்கவேண்டிய அரசே, அடித்தட்டு மக்களைக் குறிவைத்து மதுக்கடைகளைத் திறக்கிறது. அதை எதிர்த்தே போராடுகிறோம்.’’

“கலைஞர் பக்குவம் ஸ்டாலினிடம் இல்லை!” - விடுதலைச் சிறுத்தைகள் வன்னியரசு

‘‘கருணாநிதி வைர விழாவில் திருமாவளவனைப் பேச அழைக்காதது வருத்தமா?”

‘‘டெல்லி தலைவர்களை இங்கு அழைத்துப் பேசுவது வரவேற்கத்தக்கது. என்றாலும், ஒவ்வொரு முறையும் டெல்லி தலைவர்களையே கூப்பிட முடியுமா? கலைஞர் எல்லோரையும் அரவணைத்துப் பயணிப்பவர். ஸ்டாலினிடம் அந்தப் பக்குவம் இல்லை. இருந்தாலும் மதவாதம், சாதியவாதம் வீழ்த்தப்படவேண்டும் என்ற புள்ளியில் இணைகிற எல்லா கட்சிகளுடனும் சேர்ந்தே பயணிக்கிறோம். தி.மு.க-வுடனும் அந்த வகையில் உறவைத் தொடர்கிறோம்.’’

- சே.த.இளங்கோவன்