Published:Updated:

தி.மு.க. அவசர செயற்குழு இன்று கூடுகிறது

தி.மு.க. அவசர செயற்குழு  இன்று கூடுகிறது
தி.மு.க. அவசர செயற்குழு இன்று கூடுகிறது
தி.மு.க. அவசர செயற்குழு  இன்று கூடுகிறது

சென்னை: காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், தி.மு.க. தலைமைச்செயற்குழு அவசரக்கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் தி.மு.க. தலைமை செயற்குழு அவசரக்கூட்டம், இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்குகிறார்.

இதில், தலைமைச்செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று பொதுச்செயலாளர் க.அன்பழகன் ஏற்கனவே கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தி.மு.க. தலைமைச்செயற்குழு உறுப்பினர்கள் 7 முதல் 10 பேர் வரை உள்ளனர். இவர்கள் அனைவரும் கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.

##~~##
இவர்களுடன் தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்டக்கழக செயலாளர்கள், எம்.பி.க்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் 250 பேர் பங்கேற்பார்கள் என தெரிகிறது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இலங்கை தமிழர் பிரச்னையில், அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தில் 2 திருத்தங்களை கொண்டுவந்து ஆதரிக்கவேண்டும் என்ற தி.மு.க.வின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்ததால், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகியது.
அதன்பிறகு கூடும் முதல் தலைமைச்செயற்குழு கூட்டம் என்பதால், மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த கூட்டத்தில், இலங்கை தமிழர் பிரச்சினையில் தி.மு.க.வின் அடுத்தகட்ட நிலைப்பாடு குறித்தும், வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி வியூகம் குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது.