Published:Updated:

பிரதமர் தலைமையில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல்வர்கள் மாநாடு

பிரதமர் தலைமையில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல்வர்கள் மாநாடு
பிரதமர் தலைமையில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல்வர்கள் மாநாடு
பிரதமர் தலைமையில் ஏப்ரல் 15ஆம் தேதி முதல்வர்கள் மாநாடு

புதுடெல்லி: தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது பற்றி மீண்டும் ஆலோசிக்க டெல்லியில் பிரதமர் தலைமையில் முதல்வர்கள் மாநாடு ஏப்ரல் 15ஆம் தேதி நடக்கிறது.

‘தேசிய தீவிரவாத தடுப்பு மையம்’ என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இந்த தேசிய தீவிரவாத தடுப்பு படையினர், மாநிலங்களில் தன்னிச்சையாக தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

இது மாநில அரசுகளின் உரிமையை பறிப்பது போன்றும், கூட்டாட்சி தத்துவத்துக்கு ஊறு விளைவிப்பது போன்றும் உள்ளது என்று கூறி, தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பதற்கு முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

##~~##
இதேபோல் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மத்திய அரசு கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல்வர்கள் மாநாட்டை கூட்டி ஆலோசனை நடத்தியது. ஆனால் அந்த கூட்டத்தில் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது குறித்து ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.
இதைத்தொடர்ந்து, தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைக்கும் பிரச்சனை தொடர்பாக மீண்டும் மாநில முதல்வர்கள் மாநாட்டை கூட்டி ஆலோசிக்க உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்து உள்ளது.
இந்த மாநாடு ஏப்ரல் 15ஆம் தேதி டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற இருப்பதாக உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதற்கு முன்னதாக, தேசிய தீவிரவாத தடுப்பு மையம் தொடர்பான தளர்த்தப்பட்ட விதிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கையை மாநில முதல்வர்களுக்கு உள்துறை அமைச்சகம் அனுப்ப இருப்பதாகவும் அவர் கூறினார்.