Published:Updated:

கூடியது தி.மு.க. செயற்குழு: புறக்கணித்தார் அழகிரி

கூடியது தி.மு.க. செயற்குழு: புறக்கணித்தார் அழகிரி
கூடியது தி.மு.க. செயற்குழு: புறக்கணித்தார் அழகிரி
கூடியது தி.மு.க. செயற்குழு: புறக்கணித்தார் அழகிரி

சென்னை: சென்னையில் நடந்து வரும் தி.மு.க. தலைமைச்செயற்குழு அவசரக் கூட்டத்தை முன்னாள் மத்திய அமைச்சரும், தென் மண்டல அமைப்பாளருமான மு.க.அழகிரி புறக்கணித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கியுள்ளார்.

இந்த கூட்டத்தில் தென் மண்டல அமைப்பாளர் மு.க.அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் நடிகர் நெப்போலியன் புறக்கணித்துள்ளனர். ஆனால், நடிகை குஷ்பு இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகியது. இதையடுத்து தி.மு.க.வை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் பதவி விலகினர்.

ஆனால், கூட்டணியில் இருந்து வெளியேற அழகிரிக்கு விருப்பமில்லை. இதனால் தனது ராஜினாமா கடிதத்தை மிகவும் தாமதமாகவே பிரதமரிடம் கொடுத்தார். ராஜினாமா செய்வது தொடர்பாக டி.ஆர்.பாலுவுக்கும், அழகிரிக்கும் நாடாளுமன்ற வளாகத்திலேயே மோதல் ஏற்பட்டது.

##~~##
இந்த நிலையில் தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் சென்னையில் தற்போது நடந்து வருகிறது. இந்த கூட்டத்தை மு.க.அழகிரி, நகடிர் நெப்போலியன் புறக்கணித்துள்ளனர். ஆனால், மு.க.ஸ்டாலினுக்கு எதிராக பேசிய நடிகை குஷ்பு கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
இந்த கூட்டத்தில், இலங்கை தமிழர் பிரச்னையில் தி.மு.க.வின் அடுத்தகட்ட நிலைப்பாடு குறித்தும், வரவிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி வியூகம் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.