Published:Updated:

அம்பலமான பேரம் - "முகம் என்னுடையது... வாய்ஸ் டப்பிங்!"

அம்பலமான பேரம் - "முகம் என்னுடையது... வாய்ஸ் டப்பிங்!"
பிரீமியம் ஸ்டோரி
அம்பலமான பேரம் - "முகம் என்னுடையது... வாய்ஸ் டப்பிங்!"

அம்பலமான பேரம் - "முகம் என்னுடையது... வாய்ஸ் டப்பிங்!"

அம்பலமான பேரம் - "முகம் என்னுடையது... வாய்ஸ் டப்பிங்!"

அம்பலமான பேரம் - "முகம் என்னுடையது... வாய்ஸ் டப்பிங்!"

Published:Updated:
அம்பலமான பேரம் - "முகம் என்னுடையது... வாய்ஸ் டப்பிங்!"
பிரீமியம் ஸ்டோரி
அம்பலமான பேரம் - "முகம் என்னுடையது... வாய்ஸ் டப்பிங்!"

‘கடந்த பிப்ரவரி 18-ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு பதவியேற்று, ஆட்சியில் நிலைப்பதற்குப் பின்னால் பணம் விளையாடி இருக்கிறது’ என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு முதல்முறையாக நேரடி ஆதாரம் கிடைத்திருக்கிறது. டைம்ஸ் நவ் - மூன் டி.வி இணைந்து நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில், ரகசிய கேமராவுக்கு முன்பாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள் இரண்டு எம்.எல்.ஏ-க்கள். ஒருவர், ஓ.பி.எஸ் தரப்பில் இருக்கும் மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணன். இன்னொருவர், எடப்பாடி தரப்பில் இருக்கும் சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ்.

“சசிகலா அணியை ஆதரிக்க கூவத்தூர் விடுதிக்கு அழைத்துச் செல்வதற்கு முன், இரண்டு கோடியிலிருந்து ஆறு கோடி ரூபாய் வரை ரேட் எகிறியது. இரட்டை இலைச் சின்னத்தில் வென்ற கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி போன்றோருக்கு 10 கோடி ரூபாய் அளிப்பதாகச் சொன்னார்கள். நான் அங்கிருந்து தப்பித்து வந்தேன். ஓ.பி.எஸ் அணியில் இருந்தால் அமைச்சர் பதவி கிடைக்கும், அதுமட்டுமில்லாமல் 500 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்ற டார்கெட்தான்...” என்ற ரீதியில் சரவணன், சிலருடன் கேஷுவலாகப் பேசுவது வீடியோவில் அப்படியே பதிவாகியுள்ளது.

அம்பலமான பேரம் - "முகம் என்னுடையது... வாய்ஸ் டப்பிங்!"

இந்தப் பதிவு சென்னையிலோ, திருச்சியிலோ ஒரு ஹோட்டலில் வைத்து, அவருக்கு நெருக்கமானவர்கள் மூலம் எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அந்த வீடியோவில் ‘ஓ.பி.எஸ் அணியும் பண பேரம் குறித்து பேசியதாகக் கூறப்பட்டுள்ளதுதான்’ பெரும் பரபரப்பு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை. மார்பிங் செய்து என் குரலில் யாரோ பேசியுள்ளார்கள். கூவத்தூரிலிருந்து தப்பி வந்த நான், துணிச்சலாக சசிகலா மீது புகார் கொடுத்தேன். அதிலிருந்து என்னை அரசியலில் இருந்து விரட்டத் திட்டமிட்டு வருகிறார்கள். இதற்கு சட்டரீதியான நடவடிக்கை எடுப்பேன்” என்று இப்போது சொல்கிறார் சரவணன்.

சூலூர் எம்.எல்.ஏ கனகராஜிடம் பேசினோம். “நான் இன்னும் அந்த வீடியோவைப் பாக்கல. சொல்லக் கேட்டதுதான். எத்தனையோ டி.வி-காரங்க வர்றாங்க. இப்பக்கூட 15 டி.வி சேனல் ரிப்போர்ட்டர்ஸ் என் வீட்ல உட்கார்ந்திருக்காங்க. நான் அப்படி யார்கிட்டயும் எதுவும் சொல்லலை. கூவத்தூர்ல யாருக்கும் பணமும் கொடுக்கல. பேரமும் பேசலை. நல்ல சாப்பாடு போட்டாங்க, அவ்வளவுதான். பணம் கொடுத்தாங்கனு யார் சொன்னது?” என்றார்.

அம்பலமான பேரம் - "முகம் என்னுடையது... வாய்ஸ் டப்பிங்!"

‘‘அந்த வீடியோவில் நீங்கதானே சார் அப்படிச் சொல்றீங்க?” என்று கேட்டோம். ‘‘வீடியோவில் வேண்டுமானால் என் முகம் இருக்கலாம். ஆனால், வாய்ஸ் நான் பேசியதானு பார்க்கணும். இப்ப எவ்வளவோ டெக்னாலஜி இருக்கு. விளம்பரத்துக்காக நான் சொன்ன மாதிரி போட்டிருக்காங்க. அது பொய். நான் அப்படி யார்கிட்டயும் சொல்லவே இல்லை’’ என்று தீர்மானமாக மறுத்தார்.

‘அதிகபட்சமாக 10 கோடி ரூபாய் பேசப்பட்டதாக’ சொல்லப்படும் கொங்கு இளைஞர் பேரவையைச் சேர்ந்த எம்.எல்.ஏ தனியரசு, ‘‘சரவணன் ஒரு மனநோயாளி’’ என்றார் அதிரடியாக. ‘‘அவர் பாவம். அதுக்காக அவர் சிகிச்சையில் இருந்ததாகவும் சொன்னாங்க. ஒழுக்கமில்லாத ஆள். மாத்தி மாத்திப் பேசிட்டு இருப்பாரு. கூவத்தூர் ரிசார்ட்லதான் இருந்தாரு. இடையில வெளியில போயிட்டாரு. வெளியே போய் ‘மாறுவேஷம் போட்டுட்டு வந்தேன்... கடல்ல நீந்தி வந்தேன்’னு சொல்லிட்டு இருந்தாரு. அதுக்கு அப்புறம் ஓ.பி.எஸ் டீம்ல போய் சேர்ந்துட்டாரு. எந்தச் சூழல்ல இப்படி சரவணன் பேசினார்னு எனக்குத் தெரியலை. மனநோயின் வெளிப்பாடா? போதையில இருந்தாரா? இல்லை, யாராவது மிரட்டி இப்படி சொல்ல வெச்சாங்களான்னு எனக்குத் தெரியலை. ஆனா, எனக்குத் தெரிஞ்சு சரவணன் சொல்ற மாதிரி எந்தச் சம்பவமும் நடக்கலை. அங்க பேரம் பேசவும் இல்லை. யாரையும் விலை பேசவும் இல்லை. இது சம்பந்தமா சட்டபூர்வமாக நடவடிக்கை எடுப்பேன்” என்றார் நம்மிடம்.

அம்பலமான பேரம் - "முகம் என்னுடையது... வாய்ஸ் டப்பிங்!"

மனித நேய ஜனநாயகக் கட்சியின் தலைவரும் எம்.எல்.ஏ-வுமான தமிமுன் அன்சாரி, ‘‘நான் கூவத்தூர் முகாமுக்குப் போகவில்லை என்பது நாடறிந்த செய்தி. ‘கரன்சி பாலிடிக்ஸ் எங்களுக்குப் பிடிக்காது’ என்பதைச் சொல்லித்தான் எடப்பாடி அரசுக்கு ஆதரவை அளித்தோம். ‘உங்களுக்கு ஆதரவு அளிப்பதற்கு நன்றியாக எதிர்காலத்தில் எங்கள் கட்சிக்கு வாரியப் பதவிகளைத் தாருங்கள்’ என்று மட்டும் சொன்னேன். அப்போது எங்கள் கட்சித் தலைவர்கள் அனைவரும் உடன் இருந்தனர். இதைத்தவிர நாங்கள் எந்தப் பேரத்திலும் ஈடுபடவில்லை. இது இறைவன் மீது ஆணை” என்கிறார்.

‘‘தேசிய அளவில் விவாதிக்கப்படும் இந்த விவகாரம் தொடர்பாக ஏதேனும் வழக்குப் போடப்பட்டால், ஜனாதிபதி தேர்தலில் தமிழக எம்.எல்.ஏ-க்கள் வாக்களிப்பதுக் குறித்து சர்ச்சை கிளம்பலாம்’’ எனச் சட்ட நிபுணர்கள் சொல்கிறார்கள். எடப்பாடி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியபோது நடந்த சம்பவங்கள் தொடர்பாக, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஒரு வழக்கு போட்டிருக்கிறார். ‘‘அந்த வழக்கில் இந்த விவகாரத்தையும் விசாரிக்குமாறு கோரிக்கை வைக்க முடியும்” என்றும் சொல்லப்படுகிறது.

எடப்பாடியின் நாற்காலிக்கு நாலாதிசைகளிலும் சிக்கல் வருகிறது.

- ச.ஜெ.ரவி, செ.சல்மான், எம்.புண்ணியமூர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism