அரசி சண்முகசுந்தரம், புதுவண்ணை.

காஷ்மீர் பிரச்னை தீர்வதற்கு, வன்முறையையும் தீவிரவாதத்தையும் ஒடுக்கி நிம்மதி பெறுவதற்கு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர் மீது படையெடுத்து, அந்தப் பகுதியைக் கைப்பற்றிக்கொண்டால் என்ன?

காஷ்மீர் பிரச்னை பல்வேறு குழப்பங்கள் கொண்டது. ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீர்’ என்று நாம் சொல்கிறோம். ‘இந்தியா ஆக்கிரமிப்புக் காஷ்மீர்’ என்று பாகிஸ்தான் சொல்கிறது. ‘நாங்கள் இந்தியரோ, பாகிஸ்தானியரோ அல்ல... காஷ்மீரிகள். இந்த இரண்டு நாடுகளும் எங்கள் மண்ணை விட்டு வெளியேற வேண்டும்’ என்று சில அமைப்புகள் சொல்கின்றன. இவற்றில் எது சரியானது என்பதை யார் முடிவு செய்வது?

‘இந்தப் பிரச்னையை நாமே தீர்த்துக்கொள்வோம். வேறு யாரும் இதில் தலையிட்டு மத்தியஸ்தம் செய்யத் தேவையில்லை’ என்கிறது இந்தியா. ‘மூன்றாம் நபர் மத்தியஸ்தம் தேவை’ என்று பாகிஸ்தான் சொல்கிறது. ‘எங்களைப் பற்றிப் பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை’ என்று காஷ்மீர் அமைப்புகள் சொல்கின்றன.

அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடக்காமல் போவதற்குக் காரணமே, எங்கிருந்து யார் ஆரம்பிப்பது என்பதே பிடிபடாமல் இருப்பதுதான். இதுதான் வன்முறை அமைப்புகளுக்குப் பாதை அமைத்துக் கொடுத்துவிட்டது. இதற்குப் படையெடுப்புத் தீர்வாக அமையாது; அழிவையே அதிகப்படுத்தும்.

அ.குணசேகரன், புவனகிரி.

கும்பகோணம் பள்ளி தீ விபத்து, ஸ்ரீரங்கம் திருமண மண்டபம் தீ விபத்து, சென்னை சில்க்ஸ் தீ விபத்து - ஒப்பிடுக?

‘விதி மீறினால் எரியும்” என்பது விதி!

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் நாள்கள் எண்ணப்படுகின்றனவே?

நாள்கள் அல்ல... அவரது ஆட்சிக்கான ஆயுள், நொடிக்கு நொடி எண்ணப்படுகிறது.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

‘இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடை’ என்று மத்திய அரசு செய்த அறிவிப்புப் பற்றித் தமிழக அரசு எந்தக் கருத்தும் சொல்லாமல் வாய்மூடி மவுனமாக இருப்பது ஏன்?

இவர்களே பலியாடுகள். எப்படிப் பதில் சொல்வார்கள்?

எஸ்.பி.விவேக், சேலம்.

எந்தவிதச் சலனமும் இல்லாமல் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசுகிறாரே டி.டி.வி.தினகரன்?

தமிழக அரசியல்வாதிகளில் தயக்கம் இல்லாமல் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, எந்தக் கேள்வியையும் எதிர்கொள்பவராக தினகரன் இருக்கிறார். இது, அவரது தனிப்பட்ட திறமைதான்.

மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

இறைச்சிக்காக மாடுகளை விற்கத் தடை எதிர்ப்புப் போராட்டத்தில் மதம், சாதி, அரசியல் எல்லாம் புகுந்து விளையாடுகின்றனவே?

தடையில் மதம், சாதி, அரசியல் இருப்பதால், எதிர்ப்புப் போராட்டத்திலும் அவை உள்ளன.

டி.சந்திரன், ஈரோடு.

நீரும் நெருப்பும் ஆவேசப்பட்டு அவ்வப்போது பாடம் புகட்டியும் ஆட்சியாளர்கள் புரிந்துகொள்வதாகத் தெரியவில்லையே?

தலைவலியும் கழுத்து வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்பார்கள். நீராலும் நெருப்பாலும் துன்பமும் துயரமும் படுவது மக்கள்தானே? பேரழிவுகளில் இருந்து மக்கள்தான் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். அரசாங்கங்கள் எப்போதும் கற்றுக்கொள்ளாது. அவர்களுக்கு ‘வேறு’ வேலைகள் இருக்கின்றன.

பொன்விழி, அன்னூர்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தோற்றுப்போகக் காரணம், மக்கள் வாக்களிக்காதது. ஆனால், வைகோவால்தான் தி.மு.க ஆட்சிக்கு வரமுடியாமல் போனது என்று சொல்கிறார்களே?

சிலர் அப்படி விமர்சனம் செய்யக் காரணம், மக்கள் நலக்கூட்டணி அமைத்து விஜயகாந்த்தை, வைகோ அதில் இணைத்துக்கொண்டதுதான். ‘முதலமைச்சர் வேட்பாளர்’ என்ற மலர்மாலையும் விஜயகாந்த்துக்குச் சூட்டப்பட்டது. இதை வைத்து, அத்தகைய புகார் வைக்கப்படுகிறது. ‘விஜயகாந்த் தங்கள் பக்கம் வந்தால் வெற்றி பெற்றிருப்போம்’ என்று தி.மு.க நினைத்தால், அது அவர்களுடைய பலவீனத்தின் வெளிப்பாடு.

வி.ஐ.பி கேள்வி!

கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்

? இன்றைய இளைஞர்கள், இளம்பெண்கள் அரசியலில் தங்களை வழிநடத்த ஏன் புதிய ரட்சகர்களை எதிர்பார்க்கிறார்கள்? புதிய தலைவர்களாக தங்களை அறிவித்துக்கொள்ள முனைபவர்களிடம் கொள்கைகளையோ, திட்டங்களையோ ஏன் எதிர்பார்ப்பதில்லை?

! வரலாற்றில் தனிநபர் வகிக்கும் பாத்திரம் என்பது முக்கியமானது. விடுதலைப் போராட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் பங்கெடுத்தாலும், காந்தியின் பங்களிப்பை நிராகரிக்க முடியாது. இப்படி ஒவ்வொரு வரலாற்று நிகழ்வையும் சொல்லலாம். எனவே, இளைஞர்கள் தங்களுக்கான தலைவர்களாக யாராவது ஒருவரை, உங்களது வார்த்தைகளில் ‘ரட்சகரை’ எதிர்பார்ப்பது தவறு இல்லை. அவர், புதிய ரட்சகராக இருப்பதையும் குறை சொல்ல முடியாதுதான். பழைய ரட்சகர்களின் சாயம் வெளுத்துப் போனதால், புதியவர்களைத் தேடலாம். அதையும் விடுவோம்.

ஆனால், அப்படிப்பட்டவர்களின் கொள்கையைப் பற்றியும், திட்டங்களைப் பற்றியும் கவலைப்படாமல் வெறும் கவர்ச்சிக்காக, பரபரப்புக்காக அழைப்பு விடுக்கிறார்கள் என்பது உண்மைதான். ‘ரஜினி வந்தால்தான் தமிழகத்தைக் காப்பாற்ற முடியும்’, ‘கமல் வந்தால்தான் தமிழகத்தை வளர்க்க முடியும்’ என்கிறார்கள். ‘இளைய தளபதியே, வா வா தலைவா’ என்று சிலர் கிளம்புகிறார்கள். ஆர்.ஜே பாலாஜியை ஒரு தரப்பு அழைக்கிறது. ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியை இன்னொரு தரப்பு அழைக்கிறது. ‘தொண்டன்’ சமுத்திரக்கனியை மற்றொரு தரப்பு அழைக்கிறது.

இவர்கள் எல்லாம் ரட்சகர்கள் வரிசையிலா வருவார்கள்? ‘யாராவது வந்து எதையாவது செய்துவிட மாட்டார்களா’ என்ற ஏமாற்றம் கலந்த ஏக்கத்தின் வெளிப்பாடு இவை. இத்தகைய அவசர, சிறுபிள்ளைத்தனமான அழைப்புகள் பெரும் ஏமாற்றமாகத்தான் முடியும்!

கே.வெங்கட், விழுப்புரம்.

சென்னை சில்க்ஸ் தீ விபத்து நமக்கு உணர்த்தும் பாடம் என்ன?

விதியை மீறி ஒரு கட்டடம் கட்டும்போது, சும்மா ஒப்புக்கு ஒரு நோட்டீஸை அனுப்பும் அரசாங்கமும்...

எந்த நோட்டீஸை அனுப்பினாலும் அதற்கு இடைக்காலத் தடை விதிக்கிறோம் என்று வழக்கு போட்டு இழுத்தடித்து, அதுவே நிரந்தரத் தடை போல ஆகிவிடும் நிலைமையை உருவாக்கும் நீதி அமைப்பும்...

இங்கு இருக்கின்றன என்பதை ஏழுமாடிக் கட்டடம் எரிந்து உணர்த்துகிறது.

படம்: வி.ஸ்ரீனிவாசுலு

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:  கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002 kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!