Published:Updated:

கனிமொழி கூட்டத்திற்கு பொன்முடி தடை? - திகு...திகு... திண்டிவனம் தி.மு.க! .

கனிமொழி கூட்டத்திற்கு பொன்முடி தடை? - திகு...திகு... திண்டிவனம் தி.மு.க! .
கனிமொழி கூட்டத்திற்கு பொன்முடி தடை? - திகு...திகு... திண்டிவனம் தி.மு.க! .
கனிமொழி கூட்டத்திற்கு பொன்முடி தடை? - திகு...திகு... திண்டிவனம் தி.மு.க! .

திண்டிவனம்: கனிமொழிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் பொன்முடி முட்டுக்கட்டை போட்டு தடுத்துவிட்டதாக திண்டிவனத்தில் முணுமுணுப்பு கிளம்பி இருக்கிறது!

தென்மண்டலத்தில் உட்கார்ந்து கொண்டு அழகிரி ஒரு பக்கம் கொடி பிடிக்கிறார். இப்போது வடக்கு மண்டலத்தில் கனிமொழியை வைத்தும் கலகம் பிறந்திருக்கிறது.  தென் மண்டலத்தில் நாடார் அமைப்புகளை தன் பக்கம் ஈர்த்து பலம் சேர்த்துக் கொண்டிருக்கும் கனிமொழி, வடக்கு மண்டலத்தில் வன்னியர்களை குறிவைத்து களத்தில் இறங்கி இருக்கிறார்.

 பொன்முடியால் ஓரங்கட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்ட‌ வன்னியர்கள் இப்போது கனிமொழியின் பின்னால் நிற்கிறார்கள். ஆனால், வன்னியர்கள் மத்தியில் கனிமொழி செல்வாக்கு பெறுவது முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டவர்களுக்கு உள்ளுக்குள் குடைய ஆரம்பித்திருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் கடந்த 23 ஆம் தேதி கனிமொழியை வைத்து பொதுக்கூட்டம் நடத்த அவரது ஆதரவாளர்கள் ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். இதில் கலந்துகொள்ள கனிமொழியும் இசைவு கொடுத்திருந்தாராம். மாவட்டச் செயலாளர் பொன்முடியிடம் அனுமதி பெற்று இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த‌  நிலையில் என்னைக் கேட்காமால்  இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள் என்று தலைமைக்கே போய் புகார் செய்தாராம் பொன்முடி.

கனிமொழி கூட்டத்திற்கு பொன்முடி தடை? - திகு...திகு... திண்டிவனம் தி.மு.க! .

மார்ச் 14 ஆம் தேதி விழுப்புரத்தில் நடந்த ஸ்டாலின் பொதுக்கூட்டத்திற்கு  செய்திருந்த ஏற்பாடுகளைவிட கனிமொழி கூட்டத்திற்கு அசத்தலான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாம். இதில் அப்செட் ஆகித்தான் பொன்முடி அந்தர் பல்டி அடித்ததாக சொல்கிறார்கள். 23 ஆம் தேதி காலையில் சென்னைக்கே சென்று, 'என்னுடைய‌ அனுமதி இல்லாமல் இந்த நிகழ்ச்சி நடை பெறுகிறது. இதற்கு கனிமொழி போகக்கூடாது என்று முட்டுக்கட்டை போட்டிருக்கிறார் பொன்முடி.

 

##~~##
'நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் எல்லாம் முடிந்துவிட்ட பிறகு நான் போகாமல் இருந்தால் சரியாக இருக்காது" என்று கனி மொழியும் கச்சை கட்டினாராம். ஆனாலும், இந்த விவகாரத்தில்  அவரை அடக்கி வாசிக்க வைத்திருக்கிறது தலைமை. இதையடுத்து, கனிமொழி திண்டிவன‌ம் கூட்டத்திற்கு போகவில்லை. ஆனாலும் அசராத அவரின் ஆதரவாளர்கள் அவர் இல்லாமலே கூட்டத்தை செம்மையாக நடத்தி முடித்திருக்கிறார்கள். அடுத்ததாக விழுப்புரத்திலேயே கனிமொழியை வைத்து கூட்டம் நடத்த அவர்கள் ரெடியாகிக் கொண்டிருப்பதால் பவர் பாலிடிக்ஸ் கலைகட்டும் போலிருக்கிறது.
கரு. முத்து