Published:Updated:

இலங்கை காமன்வெல்த் மாநாடு: இந்தியா கலந்துகொள்ள ஜெயலலிதா எதிர்ப்பு!

இலங்கை  காமன்வெல்த் மாநாடு: இந்தியா கலந்துகொள்ள ஜெயலலிதா எதிர்ப்பு!
இலங்கை காமன்வெல்த் மாநாடு: இந்தியா கலந்துகொள்ள ஜெயலலிதா எதிர்ப்பு!
இலங்கை  காமன்வெல்த் மாநாடு: இந்தியா கலந்துகொள்ள ஜெயலலிதா எதிர்ப்பு!

சென்னை: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில், " காமன் வெல்த் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு வரும் நவம்பர் 15-17 தேதிகளில் கொழும்புவில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

"தற்போதைய நிலையில், இவ்வளவு பெரிய முக்கியமான மாநாடு அங்கு நடைபெறுவதும், உலக நாடுகளின் அரசு பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்பதும் போர் குற்றம், இனப்படுகொலை இலங்கை தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் ஆகியவற்றை நிகழ்த்திய தற்போதைய இலங்கை அரசுக்கு அங்கீகாரம் அளிப்பது போல் ஆகிவிடும்.

காமன் வெல்த் நாடுகளின் உயர்நோக்கங்களான மனித உரிமை, சமத்துவம், ஜனநாயக உரிமை ஆகியவற்றை இலங்கை அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

##~~##
மனித உரிமைகளை மதிக்காத, இலங்கையில் நடைபெறும் காமன் வெல்த் மாநாட்டை கனடா புறக்கணிக்க உள்ளதாக பரவலாக கூறப்படுகிறது. இங்கிலாந்து பிரதமரும் இந்த மாநாட்டில் பங்கேற்கக்கூடாது என அந்நாட்டின் வெளி விவகாரங்களுக்கான எம்.பி.க்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தரமாக இடம் பெறும் உயர்ந்த சக்தியாக உருவெடுத்து வரும் இந்தியாவிற்கு ஜனநாயகம் மற்றும் மனித உரிமை ஆகியவை உலகின் எந்த மூலையில் மீறப்பட்டாலும், குறிப்பாக, நமது அண்டை நாட்டில் மீறப்படும்போது அவற்றை நிலைநாட்ட வேண்டிய கடமை உள்ளது.
"இலங்கை அரசின் இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் தொடர்பாக பன்னாட்டு விசாரணைக்கு இலங்கையை உட்படுத்த வேண்டும் என்ற தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை இந்தியாவிற்கு உள்ளது.
இலங்கையில் நடைபெற உள்ள காமன் வெல்த் மாநாட்டை வேறொரு நாட்டிற்கு மாற்ற இன்னும் கால அவகாசம் உள்ளது. எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்த மாநாட்டை வேறு நாட்டில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை இந்தியா முன் வைக்கவேண்டும்.
இந்தியா இதற்கு முன் வந்தால் காமன் வெல்த்தின் உறுப்பு நாடுகளும் பரவலாக இதனை ஆதரிக்கும். எத்தகைய சூழலிலும், இந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்பது என்பது இலங்கையின் ஆட்சியை பலப்படுத்துவதுடன், இப்பிரச்சினையில் தமிழ்நாட்டில் நிலவும் உணர்வுகளை மேலும் அதிகரிக்கச் செய்து விடும். எனவே, இந்த மாநாட்டில் நீங்கள் பங்கேற்க வேண்டாம் என நான் வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்காக போராடும் பெரிய நாடு என்ற முறையிலும், இலங்கையில் வஞ்சிக்கப்படும் சிறுபான்மை தமிழர்களின் ஆதரவு நாடு என்ற வகையிலும் இந்தியா இந்த மாநாட்டை புறக்கணிக்கும் என்ற நம்பிக்கையில் இக்கடிதத்தை தங்களுக்கு எழுதுகிறேன்.
இதன் மூலம், இலங்கை தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக தமிழ்நாட்டிலும், பிற இடங்களிலும் போராடி வரும் தமிழ் மக்களுடன் இந்திய அரசு உள்ளது என்பது நிரூபிக்கப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.