Published:Updated:

மத்திய அரசுக்கு எதிராக மாணவர்களை தூண்டுகிறார்கள்: அமைச்சர் நாராயண சாமி

மத்திய அரசுக்கு எதிராக மாணவர்களை தூண்டுகிறார்கள்: அமைச்சர் நாராயண சாமி
மத்திய அரசுக்கு எதிராக மாணவர்களை தூண்டுகிறார்கள்: அமைச்சர் நாராயண சாமி
மத்திய அரசுக்கு எதிராக மாணவர்களை தூண்டுகிறார்கள்: அமைச்சர் நாராயண சாமி

புதுச்சேரி: மத்திய அரசுக்கு எதிராக மாணவர்களை தூண்டிவிடுவதாக மத்திய அமைச்சர் நாராயண சாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று புதுவையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்," மத்திய அரசு இலங்கை தமிழர் பிரச்னையில் ஆதரவான நிலையை எடுக்கும் என நான் ஏற்கனவே ஒரு மாதத்துக்கு முன்பு கூறி இருந்தேன். அதன்படியே பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி ஆலோசனையின் பேரில் ஐ.நா. சபையில் இந்திய தூதர் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா தீர்மானத்தை முன் மொழிந்துள்ளார்.

இலங்கை அரசு மீது பொது விசாரணை நடத்த வேண்டும் என்பதில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் தமிழகத்திலும், புதுவையிலும் சில அரசியல் கட்சிகள் மாணவர்களை திசை திருப்பி மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக போராட தூண்டி உள்ளனர்.

மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு இலங்கையில் உள்ள தமிழர்களின் புனர்வாழ்விற்காக தமிழர்கள் வாழும் கிழக்கு வட கிழக்கு மாகாண பகுதிகளில் வீடுகளை இழந்த தமிழர்களுக்காக 50 ஆயிரம் வீடுகள் கட்ட ரூ.2250 கோடி நிதி வழங்கி உள்ளது. தமிழர்கள் வாழும் பகுதிக்கு 500 மெகாவாட் மின்சாரம் வழங்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல் தமிழர்கள் வாழும் பகுதிகளில் ரெயில்பாதை அமைக்கவும் இந்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது.

##~~##
இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே-ராஜீவ்காந்தி ஆகியோர் போட்ட ஒப்பந்தத்தில் 13-வது ஷரத்தின் அடிப்படையில் இலங்கையில் வாழக்கூடிய தமிழர்கள் சுமூகமாக வாழ மத்திய அரசு தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறது. ஆனால் இவற்றையெல்லாம் மறைத்து தமிழகம் மட்டுமின்றி புதுவையிலும் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த மாணவர்களை சில அரசியல் கட்சிகள் தூண்டி விடுகின்றன.
புதுவையில் சோனியாகாந்தி உருவபடத்தை அவமதித்தவர்கள் மீது முதலமைச்சர் ரங்கசாமி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சோனியா காந்தியின் தயவில் புதுவையில் அமைச்சராகவும், முதலமைச்சராகவும் பதவி வகித்தவர் ரங்கசாமி. தற்போது கூட அவரது அலுவலகத்தில் சோனியா காந்தியின் உருவ படம் தான் வைத்துள்ளார். ஆனால் சோனியா காந்தி உருவபடத்தை அவமதித்தவர்கள் மீது அவர் நடவடிக்கை எடுக்காதது சோனியாகாந்திக்கு செய்யும் துரோகமாகும்.
ரங்கசாமி 150-க்கும் மேற்பட்ட ரவுடிகளை ஏவி போராட்டம் நடத்த தூண்டி உள்ளார். அவர்கள் எனது அலுவலகத்தை கல்வீசி தாக்கி உள்ளனர். அரவிந்தர் ஆசிரமத்தை சூறையாடி உள்ளனர். இதற்கெல்லாம் ரங்காசமி தக்க நடவடிக்கை எடுக்கவில்லை. புதுவையில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்து விட்டது. இந்த போராட்டத்தின்போது வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கும் வரை எங்கள் கட்சியின் போராட்டம் ஓயாது எங்கள் கட்சியினரின் பல்வேறு அணிகள் சார்பில் புதுவை முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும். மேலும் இதனை கண்டித்து வருகிற புதன்கிழமை காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்." என்றார்.