Published:Updated:

3வது அணி கானல் நீர்: காங்கிரஸ், பா.ஜ.க சொல்கிறது

3வது அணி கானல் நீர்: காங்கிரஸ், பா.ஜ.க சொல்கிறது
3வது அணி கானல் நீர்: காங்கிரஸ், பா.ஜ.க சொல்கிறது
3வது அணி கானல் நீர்: காங்கிரஸ், பா.ஜ.க சொல்கிறது

புதுடெல்லி: 3வது அணி கானல் நீர் என்றும் அந்த அணி ஆட்சிக்கு வர வாய்ப்யேயில்லை என்று காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகள் கூறியுள்ளன.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு வெளியிலிருந்து ஆதரித்து வரும் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங், காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத, ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று கூறினார். இதனை, காங்கிரசும், பா.ஜ.க.வும் நிராகரித்துள்ளன.

இது குறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரஷித் ஆல்வி கூறுகையில், 3வது அணிக்கு வாய்ப்பு இருப்பதாக நான் கருதவில்லை என்றார்.

எப்போதெல்லாம் 3வது அணி ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் அது விரைவிலேயே கவிழ்ந்து விடுவதைத்தான் வரலாறு சுட்டிக்காட்டுகிறது என்று தெரிவித்த ஆல்வி, 3வது அணியை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள் என்றும் பதவிக்காகவே 3வது அணி ஆரம்பிக்கப்படுவதால், அதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

##~~##
அத்வானியை முலாயம்சிங் புகழ்ந்தது பற்றி நாங்கள் ஒன்றும் சொல்வதற்கு இல்லை என்று கூறிய ரஷித், எங்களைப் பொறுத்தவரை, பா.ஜ.க. ஒரு மதவாத கட்சி என்றும் மதவாத சக்திகளை எப்போதும் எதிர்ப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் மன்மோகன்சிங்கை பலவீனமானவர் என்று முலாயம்சிங் விமர்சித்து இருப்பது நாட்டையே விமர்சிப்பதற்கு சமம் என்று ரஷித் ஆல்வி கூறினார்.
பா.ஜ.க. செய்தித்தொடர்பாளர் பல்பீர் புஞ்ச் கூறுகையில், 3வது அணி என்பது செய்தியில் அடிபட்டுக்கொண்டிருக்கும். ஆனால் அது தொடங்கப்படாது. அப்படி ஒரு அணி வரும் என்று நான் கருதவில்லை’ என்றார்.