Published:Updated:

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் மதமாற்ற தடை சட்டம்: வெங்கையா நாயுடு

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் மதமாற்ற தடை சட்டம்: வெங்கையா நாயுடு
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் மதமாற்ற தடை சட்டம்: வெங்கையா நாயுடு
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் மதமாற்ற தடை சட்டம்: வெங்கையா நாயுடு

ஹைதராபாத்: மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்படும் என்று  அக்கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், பசுக்களை கொல்லத் தடை செய்வதற்கு அனைவருக்கும் பொதுவான சட்டம் கொண்டு வரப்படும் என்றார்.

##~~##
அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370வது பிரிவு நீக்கப்படும் என்று கூறிய நாயுடு,  பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்றார்.
ரூ.25 லட்சம் கோடி கருப்புப் பணத்தை 100 நாட்களில் கொண்டு வர மத்திய நடவடிக்கை இல்லை என்று வெங்கையா நாயுடு குற்றம்சாற்றினார்.
குஜராத் மாநிலம் உலக நாடுகளுக்கு முன் மாதிரியாகத் திகழ்கிறது  என்றும் அவர் கூறினார்.
சிறிய நாடுகளான வங்கதேசம், இலங்கை போன்றவை இந்தியாவை மதிப்பதில்லை என்று வெங்கையா நாயுடு தெரிவித்தார்.