Published:Updated:

டெல்லி: பகுஜன் சமாஜ் கட்சியின் பணக்கார வேட்பாளர் சுட்டுக் கொலை!

டெல்லி:  பகுஜன் சமாஜ் கட்சியின் பணக்கார வேட்பாளர் சுட்டுக் கொலை!
டெல்லி: பகுஜன் சமாஜ் கட்சியின் பணக்கார வேட்பாளர் சுட்டுக் கொலை!
டெல்லி:  பகுஜன் சமாஜ் கட்சியின் பணக்கார வேட்பாளர் சுட்டுக் கொலை!

புதுடெல்லி: டெல்லியில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவர் இன்று சுட்டுக்கொல்லப்பட்டார்.

தெற்கு டெல்லியின் ரஜோக்ரி பகுதியில் உள்ள பண்ணை வீடு ஒன்று உள்ளது.இதன் உரிமையாளர் தீபக் பத்வராஜ் கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் போட்டியிட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று தீபக் பத்வராஜை பார்ப்பதற்காக 2 பேர் அவரது பண்ணை வீட்டிற்கு கருப்பு நிற காரில் வந்துள்ளனர். நிகழ்ச்சி ஒன்றுக்கு பணை வீட்டை முன்பதிவு செய்வதற்காக வந்ததாக கூறி, அவர்கள் உள்ளே சென்றுள்ளனர்.

##~~##
அப்போது தீபக் பத்வராஜ்க்கும் அங்கு வந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் துப்பாக்கியால் தீபக் பத்வராஜை சுட்டுள்ளனர்..படுகாயமடைந்த அவர், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன்னரே.பத்வராஜ் உயிரிழந்தார். 2009 ஆம்ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவர்களில் மிகவும் பணக்கார வேட்பாளராக கருதப்பட்டவர்.. 600 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளதாக, தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டிருந்தார்..
தொழில் அதிபரான அவர், ரியல் எஸ்டேட், உணவகம் மற்றும் கல்வி துறையில் மிகவும் ஆர்வமாக இருந்துள்ளார். போலீசார் தற்போது சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்துள்ளனர்.