Published:Updated:

அ.தி.மு.க-வோடு கூட்டணி வைக்கிறதா மதுரை தி.மு.க?

அ.தி.மு.க-வோடு கூட்டணி வைக்கிறதா மதுரை தி.மு.க?
பிரீமியம் ஸ்டோரி
அ.தி.மு.க-வோடு கூட்டணி வைக்கிறதா மதுரை தி.மு.க?

அ.தி.மு.க-வோடு கூட்டணி வைக்கிறதா மதுரை தி.மு.க?

அ.தி.மு.க-வோடு கூட்டணி வைக்கிறதா மதுரை தி.மு.க?

அ.தி.மு.க-வோடு கூட்டணி வைக்கிறதா மதுரை தி.மு.க?

Published:Updated:
அ.தி.மு.க-வோடு கூட்டணி வைக்கிறதா மதுரை தி.மு.க?
பிரீமியம் ஸ்டோரி
அ.தி.மு.க-வோடு கூட்டணி வைக்கிறதா மதுரை தி.மு.க?

தி.மு.க துணைப்பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமியை, மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் கோ.தளபதி அவமதித்த விவகாரம் மதுரையில் பூதாகரமாக வெடித்துள்ளது.

மு.க.அழகிரியும் அவருடைய ஆதரவாளர்களும் தென்மாவட்ட தி.மு.க-விலிருந்து மட்டுமல்ல... மதுரை மாநகர தி.மு.க-விலிருந்தும் ஓரங்கட்டப்பட்டு விட்டார்கள். ஆனால், இப்போது ஸ்டாலின் ஆதரவாளர்களாகச் செயல்பட்டுவரும் தி.மு.க நிர்வாகிகளுக்குள் கோஷ்டி மோதல் தொடர்ந்து நடக்கிறது. புறநகர் மாவட்ட அளவில் இரண்டாகவும், மாநகர அளவில் இரண்டாகவும் மதுரையைப் பிரித்து, தற்போது நான்கு மாவட்டச் செயலாளர்கள் மதுரை தி.மு.க-வை வழிநடத்துகிறார்கள். இதில் மதுரை மாநகரத் தெற்கு மாவட்டச் செயலாளராக கோ.தளபதி இருக்கிறார். அழகிரியின் தீவிர ஆதரவாளராக இருந்து, ஸ்டாலின் அணிக்கு மாறியவர் இவர். இவருக்கும் கட்சி நிர்வாகி களுக்கும் ஆரம்பத்திலிருந்து சரிபட்டு வரவில்லை. ‘‘கட்சிக்காகச் செலவு செய்வதில்லை. ஆளும்கட்சிக்கு எதிராக எந்தப் போராட்டத்தையும் நடத்தவில்லை. அ.தி.மு.க-வின் அமைச்சர் செல்லூர் ராஜு, எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா ஆகியோருடன் தொழில்ரீதியாக இணைந்து செயல்படுகிறார். அ.தி.மு.க-வோடுதான் அவர் கூட்டணியில் இருக்கிறார்’’ என்று தி.மு.க-வினர் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து கூறிவரும் நிலையில், சமீபத்தில் மதுரை ஆரப்பாளையத்தில் நடந்த கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் ஐ.பெரியசாமியை, கோ.தளபதி அவமதித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அ.தி.மு.க-வோடு கூட்டணி வைக்கிறதா மதுரை தி.மு.க?

இதுபற்றி ஆரப்பாளையம் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்த தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராமிடம் பேசினோம். “கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு 13-ம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை நடத்தவுள்ளதாக மாவட்டச் செயலாளர் தளபதியிடம் 10-ம் தேதியே கடிதம் கொடுத்தேன். ஆனால், அவர் வெளியிட்ட விழாப் பட்டியலில், ஆரப்பாளையம் கூட்டம் குறிப்பிடப்படவில்லை. இது சம்பந்தமாக, கட்சியின் மூத்த தலைவர்களிடம் புகார் செய்தேன். அதற்குப்பின், 18-ம் தேதி விழா நடக்கும் என்று அறிவித்தார். ஆனால், எனக்குப் போட்டியாக இன்னொரு நிர்வாகியிடமும் விழாவை நடத்தச் சொல்லியிருக்கிறார். அந்த நிர்வாகி எனக்குத் தெரிந்தவர் என்பதால், ‘மாவட்டச் செயலாளர் நமக்குள் மோதலை உண்டாக்கப் பார்க்கிறார்’ என்று என்னிடமே சொல்லிவிட்டார். அதோடு நிற்கவில்லை தளபதி. எனக்கு மிகவும் நெருக்கமானவர்களிடமும், ‘ஜெயராமுக்கு நன்கொடை கொடுக்காதீர்கள்’ என்று கூறியிருக்கிறார். இவரும் செலவு செய்வதில்லை; செலவு செய்கிறவர்களையும் தடுத்தால், கட்சி எப்படி வளரும்? கலைஞர் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடி, 460 மாணவர் களுக்கு தங்கக்காசுகளும், பொதுமக்களுக்கு பல நலத்திட்டங்களையும் வழங்கும் விழாவாக பல லட்சம் ரூபாய் செலவு செய்து நடத்தினேன். கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரிய சாமி வந்திருந்தார். அப்போது மாவட்டச் செயலாளர் தளபதி அங்கு இருந்தார். எம்.எல்.ஏ பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் முதலில் பேசி முடித்து சென்னைக்குப் புறப்பட்டுவிட்டார். பின்னர், ஐ.பெரியசாமி பேச வந்தபோது மேடையில் தளபதியைக் காணவில்லை. முன்னாள் அமைச்சரும் கட்சியின் துணைப்பொதுச் செயலாளருமான பெரியசாமிக்கு மரியாதை செய்யும்விதமாக ஒரு துண்டுகூட அவர் போர்த்தவில்லை. இதைக்கண்டு அங்கிருந்த கட்சியினரே அதிர்ச்சியடைந்துவிட்டனர். எங்களுக்கும் சங்கடம். கழகத்தின் மூத்த தலைவரை இப்படி உதாசீனப்படுத்தலாமா? என்னை அவமதிக்க வேண்டுமென்று நினைத்து இப்படி அவர் செய்துள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில், என்னுடைய பகுதியில் தி.மு.க-வுக்குக் கூடுதலாக வாக்குகள் வாங்கிக் கொடுத்தேன். அதனாலும் என்மீது அவர் கோபமாக இருக்கிறார். அ.தி.மு.க ஆட்சிக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருக்கும் சூழலில் கட்சியை வளர்ப்பதைவிட்டு, அழிப்பதில் கவனம் செலுத்துகிறார்’’ என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அ.தி.மு.க-வோடு கூட்டணி வைக்கிறதா மதுரை தி.மு.க?

இதுபற்றி கோ.தளபதியிடம் கேட்டோம். ‘‘நான் அன்றைக்கு கூட்டத்துக்கு மாலை ஆறு மணிக்கே வந்துவிட்டேன். முடிந்தவரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன். சென்னை செல்ல வேண்டியிருந்ததால், எட்டு இருபதுக்குக் கிளம்பினேன். இதை அங்கு இருந்தவர்களிடம் சொல்லிவிட்டுத்தான் வந்தேன்.

ஐ.பெரியசாமியைப் புறக்கணித்ததாகச் சொல்வது தவறு. என்னைப்பற்றி அவருக்குத் தெரியும். சின்ன விஷயத்தைச் சிலர் பெரிதுபடுத்துகிறார்கள். கட்சிக்குள் கோஷ்டி சண்டை எதுவும் இல்லை. அ.தி.மு.க அரசை எதிர்த்து பல போராட்டங்களை மதுரையில் நடத்தி வருகிறோம்’’ என்றார்.

‘கோஷ்டிப் பூசல் எதுவும் இல்லை’ என்று இவர் மறுத்தாலும், ‘‘மதுரை தி.மு.க-வில் கோஷ்டிப்பூசல் வெளிப்படையாக வெடித்துள்ளது. இதேபோல் மதுரை மாநகர் வடக்கிலும் கோஷ்டி சண்டை நடந்து வருகிறது’’ என்கிறார்கள் தி.மு.க-வினர். மதுரை புறநகர் மாவட்டங்களில் கோஷ்டி சண்டைகள் இருந்தாலும், கட்சி வேலைகளைச் சிறப்பாகச் செய்து, ஸ்டாலினிடம் நல்ல பெயர் வாங்கிவிடுகிறார்கள் நிர்வாகிகள். அதனால், ‘‘விரைவில் மாநகர் பொறுப்புகளில் மாற்றம் வரும்’’ என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

- செ.சல்மான்
படங்கள்: வீ.சதீஷ்குமார்