Published:Updated:

ஐபிஎல் போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்பதை அனுமதிக்க முடியாது: ஜெயலலிதா

ஐபிஎல் போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்பதை அனுமதிக்க முடியாது: ஜெயலலிதா
ஐபிஎல் போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்பதை அனுமதிக்க முடியாது: ஜெயலலிதா
ஐபிஎல் போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்பதை அனுமதிக்க முடியாது: ஜெயலலிதா

சென்னை: சென்னையில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர்கள் யாரும் பங்கேற்பதை அனுமதிக்க முடியாது என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்த்துள்ளார்

இது தொடர்பாக பிரதமருக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில், " ஐபிஎல் அணியில் இடம்பெற்றுள்ள இலங்கை வீரர்கள் 13 பேர் சென்னையில் நடைபெறும் எந்த ஒரு போட்டியிலும் கலந்துகொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள்,

இலங்கை பிரச்னை தொடர்பாக தமிழகத்தில் உணர்வுப்பூர்வமான நிலை உச்ச நிலையில் காணப்படுகிறது.இந்த தருணத்தில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள், நடுவர்கள் மற்றும் இதர அதிகாரிகள் தமிழகத்திற்கு வருவது பரிந்துரைக்கத்தக்கதல்ல.

##~~##
இலங்கைக்கு எதிராக நிலவும் பதட்டமான சூழ்நிலையில், ஐபிஎல் போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்றால், ஏறகனவே மக்களிடையே காணப்படும் கோப உணர்ச்சிகள் மேலும் தூண்டப்பட ஏதுவாகிவிடும் என நாங்கள் அஞ்சுகிறோம்" என்று கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் இந்த கடிதம் குறித்து கருத்து தெரிவித்த மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மணிஷ் திவாரி, பிரதமர் தற்போது  வெளிநாட்டு சுற்று பயணத்தில் உள்ளதாகவும், அவர் நாடு திரும்பியபின்னர் ஜெயலலிதாவின் கடிதம் குறித்து முடிவு செய்வார்" என்றார்.
இலங்கை கிரிக்கெட் வாரியம் கருத்து
இதனிடையே ஜெயலலிதாவின் இந்த கடிதம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை கிரிக்கெட் வாரியம், தமது வீரர்களை சென்னை ஐபிஎல் போட்டியில் கலந்துகொள்ளுங்கள் என்றோ அல்லது கலந்துகொள்ளாதீர்கள் என்றோ தாங்கள் எதுவும் கூறப்போவதில்லை னெறும், கலந்துகொள்வதா வேண்டாமா என்பது குறித்து வீரர்களே முடிவு செய்துகொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.