Published:Updated:

நேற்று... இன்று... நாளை... - மூன்று முறை மாற்றப்பட்ட முதல்வர் படம்

நேற்று... இன்று... நாளை... - மூன்று முறை மாற்றப்பட்ட முதல்வர் படம்
நேற்று... இன்று... நாளை... - மூன்று முறை மாற்றப்பட்ட முதல்வர் படம்

விருதுநகர்: அரசு அலுவலகங்களில் தற்போது வைக்கப்பட்டுள்ள முதலமைச்சரின் போட்டோ மாடல் விரைவில் மாற்றப்படுகிறது.
 

நேற்று... இன்று... நாளை... - மூன்று முறை மாற்றப்பட்ட முதல்வர் படம்

அனைத்து அரசு அலுவலகங்களிலும் முதலமைச்சர் போட்டோ வைக்கப்படவேண்டும் என்பது விதி. இதற்கான ஒரேமாதிரியான போட்டோக்கள் செய்தி மக்கள் தொடர்பு துறையால் அனுப்பி வைக்கப்படும்.

2011 சட்டசபை தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதா முதல்வராக‌ பொறுப்பேற்றதும் அதிகாரப்பூர்வ போட்டோ என்று ஜெயலலிதாவின் பழைய போட்டோ ஒன்று முதலில் வெளியிடப்பட்டது. அதில் தலையில் சில இடங்களில் நரை மூடி இருப்பது அப்பட்டமாக தெரிந்தது. முதல்வர் ஜெயலலிதா, தலைக்கு டை அடிக்க ஆரம்பித்ததும் அதிகாரிகள் அந்தப் படத்தை மாற்றி விட்டு புதுப்பொலிவுடன் ஒரு போட்டோவை அனைத்து அலுவலகங்களுக்கும் அனுப்பி வைத்தார்கள்.

அந்தப் போட்டோவில் ஜெயலலிதா தலையை பக்கவாட்டில் திருப்பிக்கொண்டு சிரிப்பது போல் இருந்தது. ஜெயலலிதாவின் தலையில் பின்னாடி போட்டிருக்கும்  கொண்டையும் தெளிவாக தெரிந்தது. ச‌மீபத்தில் இந்தப் போட்டோவை கவனித்த முதல்வர் அலுவலக அதிகாரிகள் இப்போது இந்தப் போட்டோவையும் மாற்றும் முடிவுக்கு வந்தார்கள். இதையடுத்து புதிய‌ போட்டோவை தயாரிக்கும்படி செய்தி மற்றும் மக்கள் தொடர்ப்புத்துறைக்கு உத்தரவுகள் பறந்தன‌.

##~~##
இதற்காக‌ செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறையில் ஒரு டீமே உட்கார்ந்து முதல்வர் ஜெயலலிதா நேரடியாக பார்த்து சிரிக்கும்படியான ஒரு போட்டோவை ‘கிராஃபிக்ஸ்’ உதவியுடன் தயாரித்து எல்லா அரசு அலுவலகங்களுக்கும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். உடனடியாக பழைய போட்டோவை எடுத்து விட்டு புதிய போட்டோவை மாட்ட வேண்டும் என்று வாய் மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எம்.கார்த்தி

படம்: ஆர்.எம்.முத்துராஜ்