சொ.மைக்கேல்ராஜ், பாக்கம்.

ராஜீவ் காந்தி பலமுறை தமிழ்நாட்டுக்குச் சுற்றுப்பயணம் செய்தும் காங்கிரஸ் அப்போது ஏன் வெற்றி பெற முடியவில்லை?

1989 சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து நீங்கள் கேட்கிறீர்கள். அந்தத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி நடந்தது. தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க-வில் ஜெயலலிதா அணி, ஜானகி அணி என தனித்தனியாக போட்டியிட்டன. அப்போது 20 முறைக்கு மேல் ராஜீவ் காந்தி தமிழகத்துக்குச் சுற்றுப்பயணம் வந்தார். அப்போது காங்கிரஸ் தலைவராக இருந்தவர் மூப்பனார். கருணாநிதி என்ற பிம்பத்துக்கு முன்னால் அவர் எடுபடவில்லை.

ஆனால், மூப்பனார் அந்தத் தேர்தலில் எடுத்தது மிகச் சரியான நிலைப்பாடு. ‘காங்கிரஸ் தனது உண்மையான பலத்தை அறிய தனித்து நிற்கவேண்டும்’ என்பதே மூப்பனாரின் எண்ணம். ஆட்சியைப் பிடிக்கவில்லை என்றாலும், சேவல் சின்னத்தில் நின்ற ஜெயலலிதா அணி 27 தொகுதிகளைப் பிடித்தது. தனிக்கட்சியாக காங்கிரஸ் 26 தொகுதிகளைக் கைப்பற்றி வியக்க வைத்தது. ஆனாலும் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்பதால், அனைத்துக்கும் மூப்பனார் மீது பழியைப் போட்டு வாழப்பாடி ராமமூர்த்தி முன்னுக்கு வந்தார். அதன்பிறகு முன்பு போலவே அ.தி.மு.க அல்லது தி.மு.க-வின் தோளில் மாறிமாறி ஏறி சுகம் காணும் கட்சியாக காங்கிரஸ் மாறியது.

எம்.சண்முகம், கொங்கணாபுரம்.

சென்னை ஆளுநர் மாளிகை சுற்றுலாத் தலமாக மாறிவிட்டதே?

ஆளுநர் மாளிகைக்கு வேறு எந்த வேலையும் இல்லை. அதனால்தான், பொதுமக்களாவது உள்ளே வந்து பார்த்துச் செல்லட்டும் என்று திறந்து விட்டு விட்டார்கள். முன்பாவது அ.தி.மு.க-வின் இரண்டு கோஷ்டிகளும் சுற்றுலா மாதிரி வந்து சென்றார்கள். இப்போது அவர்களும் ‘கிண்டிக்கு வருவதை விட டெல்லிக்குச் செல்வது தூரம் குறைவான (!) பயணமாக இருக்கிறது’ என்று முடிவு செய்துவிட்டார்கள்.

சம்பத்குமாரி, பொன்மலை.

ஆளும்கட்சி எம்.எல்.ஏ-க்களே ஆளும்கட்சியை எதிர்த்து சட்டசபையில் வெளிநடப்பு செய்யும் வினோதம் அரங்கேறி இருக்கிறதே?

இன்னும் எத்தனையோ வினோதங்கள் நடக்க இருக்கின்றன. அதையெல்லாம் பார்க்கத்தான் போகிறீர்கள். ஆளும்கட்சியை ஆளும்கட்சியே கவிழ்க்கப் போகிறது. அதுதான் க்ளைமாக்ஸ். இன்றைய ஆளும்கட்சிக்கு எதிர்க்கட்சி என்பது தி.மு.க அல்ல, ஆளும்கட்சிதான். தினகரன் என்ன செய்வாரோ என்ற திகிலில்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர்களும் இருக்கிறார்கள்.

இவை வினோதங்கள் அல்ல, அசிங்கங்கள்.

ஜி.மகாலிங்கம், காவல்கார பாளையம்.

இந்தியாவின் அடுத்த பிரதமருக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்போகிறவர் யார்?

‘அடுத்த குடியரசுத் தலைவர் யார்’ என்று சுற்றி வளைத்துக் கேட்கிறீர்கள். இதில் என்ன சந்தேகம்? ராம்நாத் கோவிந்த் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள்தான் அதிகம் இருக்கின்றன. வெற்றி வித்தியாசம் வேண்டுமானால் பி.ஜே.பி எதிர்பார்த்த அளவு இல்லாமல் இருக்கலாம்.

கெம்பை கே.சுரேஷ், அன்னூர்.

அ.தி.மு.க-வை வழிநடத்த இனி ஆளுமைமிக்க தலைவர் உள்ளாரா?

அது, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடக்கும்போதுதான் தெரியும்! ‘யார் பக்கம் இருப்பது உண்மையான அ.தி.மு.க’ என்று மக்கள் முடிவு செய்கிறார்களோ, அந்த அணியின் தலைவர்தான் கட்சியை வழிநடத்தும் ஆளுமைமிக்க தலைவராக வருவார். இன்றைய சூழ்நிலையை வைத்துப் பார்க்கும்போது, அது எடப்பாடி பழனிசாமி, தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடையேயான மும்முனைப் போட்டியாக அமையக்கூடும்.

ப.திருக்காமேஷ்வரன், புதுச்சேரி.

ஜனாதிபதி தேர்தலில் பி.ஜே.பி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா, துணைப் பொதுச்செயலாளர் தினகரன் ஆகியோரிடம் ஆலோசனை பெற்றாரா?

‘இல்லை’ என்றே சொல்கிறார்கள். சசிகலா, தினகரன், எடப்பாடி ஆகிய மூவருக்கும் பி.ஜே.பி-யை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. தினகரன் தனது ஆதரவை பி.ஜே.பி-க்குத்தான் தந்துள்ளார். சசிகலாவைச் சந்தித்த தம்பிதுரை, ‘‘சின்னம்மா சொன்னதைத்தான் எடப்பாடி செய்தார்’’ என்று சொல்லி இருக்கிறார். இப்படி தம்பிதுரை சொன்னதை எடப்பாடி விரும்பவில்லை.

‘‘பிரதமர் கேட்டார், அதனால் ஆதரிக்கிறேன்’’ என்று அமைச்சர்களிடம் சொல்லி விட்டு, ‘‘சசிகலா சொன்னதால் ஆதரிக்கிறேன்’’ என்று பேட்டி கொடுத்தால், கட்சிக்குள் குழப்பம் ஏற்படும் அல்லவா? அதனால்தான் இந்தக் கண்ணாமூச்சி ஆட்டம் அ.தி.மு.க-வில் நடந்து கொண்டு இருக்கிறது.

பாரதிமுருகன், மணலூர்பேட்டை.

டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைந்தபோதும், மது விற்பனை மூலம் கிடைக்கும் பணம் குறையவில்லையே. இது எதைக் காட்டுகிறது?

கடைகள் குறைந்துவிட்டதால், இருக்கின்ற கடைகளில் கூட்டம் மோதுகிறது. ‘கடை எந்த மூலையில் இருந்தாலும், நாங்கள் குடிக்காமல் இருக்கமாட்டோம்’ என்று குடிமன்னர்கள் சபதம் எடுத்திருப்பதையே இது காட்டுகிறது. கூடவே, அரசாங்கத்துக்கு ஒரு நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது என்றும் சொல்லியே ஆகவேண்டும். அதாவது, பரபரப்பான பகுதியில் இருந்தால்தான் விற்பனை நடக்கும் என்று நம்பி, சாலையோரங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் கடைகளைத் திறப்பதில் அரசும், அதிகாரிகளும் பிடிவாதம் பிடிக்கின்றனர். ஆனால், யாருமற்ற வெட்டவெளி பிரதேசங்களில் கடைகளைத் திறந்தாலும் விற்பனை நடக்கும் என்கிற நம்பிக்கையை இது ஏற்படுத்தியுள்ளது. கடைகள் அனைத்தையும் இப்போதைக்கு மூடமுடியாது என்கிற முடிவில் இருக்கும் தமிழக அரசு, குறைந்தபட்சம் அவற்றை சஞ்சாரமற்ற வெட்டவெளிகளுக்கு மாற்றும் என்றாவது எதிர்பார்ப்போம்.

ச.புகழேந்தி, மதுரை.

தி.மு.க-வுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பா.ம.க., தே.மு.தி.க., ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்தால் என்ன?

இது உங்களின் ஆசையாக இருக்கலாம். நடைமுறை சாத்தியம் இல்லை. இவர்களை ஒன்று சேர்க்கவும் முடியாது, தொகுதிகளைப் பிரிக்கவும் முடியாது. எல்லோருக்கும் 234 தொகுதிகளைப் பிரித்துக் கொடுத்துவிட்டு, தி.மு.க வெளியில் இருந்து ஆதரிக்கலாம். பிரசாரம் செய்யலாம்.

பி.ஜே.பி சார்பில் முன்னிறுத்தப்பட்டு இருக்கும் ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதியானால், அவர் அரசியல் சாசனத்தை மாற்றுகின்ற முயற்சிகளுக்குத் துணை போவார் என்று நம்புகிறீர்களா? அப்படிப் போனால் அவரைக் கட்டுப்படுத்தும் வலிமையான அமைப்புகள் நம்மிடம் இருக்கின்றனவா?

இந்திய அரசியல் சாசனத்தை மாற்றுவது என்பது மிகக் கடினமான விஷயம். இதற்கான முயற்சிகள் முந்தைய வாஜ்பாய் அரசாங்கத்தாலும் எடுக்கப்பட்டன. அவை நடைமுறைக்கு வர முடியவில்லை. இன்று பி.ஜே.பி வாஜ்பாய் காலத்தைவிட அதிக பலமுள்ள ஆளும்கட்சி. அதற்காக தாங்கள் நினைத்ததை எல்லாம் நிறைவேற்றும் நிலையில் மாநிலங்களவையில் அவர்கள் பலம் இல்லை. உச்ச நீதிமன்றம் அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் என்றும் சொல்ல முடியாது.

ஊடகங்கள் அகில இந்திய அளவில் தங்களது எதிர்ப்பைக் கடுமையாகத் தெரிவித்து வருகின்றன. இன்றைய சமூக ஊடகங்கள், ஆட்சியாளர்களின் எண்ணங்களுக்கு உடனுக்குடன் எதிர்வினைகள் ஆற்றிக்கொண்டு இருக்கின்றன. அரசியல் கட்சிகள், அமைப்புகளின் கீழ் இல்லாமல் தன்னிச்சையாக மக்கள் ஆங்காங்கே போராடும் காட்சிகளையும் பார்க்கிறோம். இவை அனைத்துமே நம்பிக்கை தருபவைதான். இவை அனைத்தையும் ஜனநாயக அமைப்புகளின் முக்கிய அங்கங்கள் என்று ஏற்றுக் கொள்வோமேயானால், இந்தியா தனது பன்முகத்தன்மைக்கு எதிரான தாக்குதலை எதிர்கொள்ளும் வலிமையுடன் நிச்சயம் இருக்கிறது என்றே சொல்லவேண்டும்.

எனவே, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவது போன்ற விபரீத காரியங்களில் பி.ஜே.பி இறங்காது என்று நம்புவோம்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600 002
kalugu@vikatan.com என்ற
இமெயிலுக்கும் அனுப்பலாம்!