Published:Updated:

பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா தடுப்பணை: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

சென்னை: பெண்ணையாற்றின் குறுக்கே கர்நாடகா தடுப்பணை கட்டுவதை தடுக்கக் கோரி பிரதமரை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு  அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு கூறியுள்ளளார்.

பெண்ணையாற்றை தனது பகுதி பாசனத்திற்கு கர்நாடகா திருப்பி விடுகிறது என்றும் கர்நாடகா தடுப்பணை கட்டினால் தமிழகப் பகுதிகள் பாதிக்கப்படும் என்றும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

##~~##
கட்டுமான பணியில் கர்நாடகா ஈடுபடுவதை பிரதமர் தடுக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழகத்தின் ஒப்புதல் இன்றி கர்நாடகாவுக்கு அனுமதி அளிக்க கூடாது என்றும் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.