Published:Updated:

திருச்சியில் காங்கிரசார்- மாணவர்கள் மோதல், பதற்றம் (படங்கள்)

திருச்சியில் காங்கிரசார்- மாணவர்கள் மோதல், பதற்றம் (படங்கள்)
திருச்சியில் காங்கிரசார்- மாணவர்கள் மோதல், பதற்றம் (படங்கள்)

திருச்சி: திருச்சியில் காங்கிரஸ் தொண்டர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே நடந்த மோதலால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இதனால் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
 

திருச்சியில் காங்கிரசார்- மாணவர்கள் மோதல், பதற்றம் (படங்கள்)

திருச்சியில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற உள்ள காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்களுக்கான கூட்டத்தில் பங்கேற்பதற்காக மாநிலத் தலைவர் ஞானதேசிகன் வர உள்ளார்.

திருச்சியில் காங்கிரசார்- மாணவர்கள் மோதல், பதற்றம் (படங்கள்)

இதனால், ஞானதேசிகனை வரவேற்று திருச்சியில் கட் அவுட், பேனர்களை காங்கிரஸ் தொண்டர்கள் வைத்துள்ளனர். திருச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு காங்கிரசார் பேனர் வைத்திருந்தனர்.

திருச்சியில் காங்கிரசார்- மாணவர்கள் மோதல், பதற்றம் (படங்கள்)

அப்போது, அங்கு வந்த தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பினர் காங்கிரசார் வைத்திருந்த பேனர்களை கிழித்து எறிந்தனர். இது பற்றி தகவல் அறிந்த காங்கிரசார் அங்கு விரைந்து வந்தனர்.

திருச்சியில் காங்கிரசார்- மாணவர்கள் மோதல், பதற்றம் (படங்கள்)

அப்போது, பேனர்களை கிழித்து எறிந்தது தொடர்பாக மாணவர்களுக்கும், காங்கிரசாருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. தகவல் அறிந்து காவல்துறையினர் அங்கு விரைந்து வந்து மோதலை கட்டுப்படுத்தினர்.
 

திருச்சியில் காங்கிரசார்- மாணவர்கள் மோதல், பதற்றம் (படங்கள்)

இதனிடையே, மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காங்கிரசார் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

திருச்சியில் காங்கிரசார்- மாணவர்கள் மோதல், பதற்றம் (படங்கள்)
##~~##

மாணவர்கள்- காங்கிரசார் மோதலால் திருச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

செய்தி& படங்கள்: என்.ஜி.மணிகண்டன்