Published:Updated:

தமிழ்நாட்டில் படருமா தாமரை? - அரசுத் திட்டங்கள் மூலம் ஆள்சேர்க்கும் பி.ஜே.பி

தமிழ்நாட்டில் படருமா தாமரை? - அரசுத் திட்டங்கள் மூலம் ஆள்சேர்க்கும் பி.ஜே.பி
பிரீமியம் ஸ்டோரி
தமிழ்நாட்டில் படருமா தாமரை? - அரசுத் திட்டங்கள் மூலம் ஆள்சேர்க்கும் பி.ஜே.பி

தமிழ்நாட்டில் படருமா தாமரை? - அரசுத் திட்டங்கள் மூலம் ஆள்சேர்க்கும் பி.ஜே.பி

தமிழ்நாட்டில் படருமா தாமரை? - அரசுத் திட்டங்கள் மூலம் ஆள்சேர்க்கும் பி.ஜே.பி

தமிழ்நாட்டில் படருமா தாமரை? - அரசுத் திட்டங்கள் மூலம் ஆள்சேர்க்கும் பி.ஜே.பி

Published:Updated:
தமிழ்நாட்டில் படருமா தாமரை? - அரசுத் திட்டங்கள் மூலம் ஆள்சேர்க்கும் பி.ஜே.பி
பிரீமியம் ஸ்டோரி
தமிழ்நாட்டில் படருமா தாமரை? - அரசுத் திட்டங்கள் மூலம் ஆள்சேர்க்கும் பி.ஜே.பி

ப்போதெல்லாம் ‘தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்’ என்று தமிழிசையும் பி.ஜே.பி-யின் தமிழக நிர்வாகிகளும் சொல்லும்போது சுதி கொஞ்சம் தூக்கலாகவே தெரிகிறது. ‘‘ஜெயலலிதா மரணத்தால் ஏற்பட்ட வெற்றிடம் எங்களுக்குச் சாதகமாக இருக்கும்’’ என பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷா சமீபத்தில் சொன்னார். அதன்படி பி.ஜே.பி சுறுசுறு திட்டங்களோடு களமிறங்கி இருக்கிறது.

இந்தியாவில் பி.ஜே.பி-க்குப் பெரும் சவாலாக விளங்கும் மாநிலம் தமிழ்நாடு. இங்கு தனது செல்வாக்கை அதிகரித்துக்கொள்ளும் முனைப்பில் இருக்கிறது பி.ஜே.பி.  இதுபற்றிப் பேசிய முன்னாள் பி.ஜே.பி நிர்வாகி ஒருவர், ‘‘ஒரே கல்லில் பல காய்களை அடிக்கத் திட்டமிட்டு செயல்படுகிறோம். மத்திய அரசு திட்டங்களை மக்களிடம் சேர்ப்பது... அதனால் பலன்பெறும் மக்களை பி.ஜே.பி ஆதரவாளர்களாக மாற்றுவது... இதுதான் திட்டம். மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையின்கீழ் வரும் நேரு யுவ கேந்திரா அமைப்பு மூலமாக, தமிழக இளைஞர்களைக் கவரும் திட்டங்களைச் சத்தம் இல்லாமல் செய்து வருகிறோம். இளைஞர் மன்றங்களை ஏற்படுத்துவது, அதன் மூலமாக இளைஞர்களுக்குத் தேவையான விளையாட்டு உபகரணங்கள் அளிப்பது போன்ற பணிகளைச் செய்கிறோம். இந்த அமைப்புகளை நிர்வகிக்கும் ஒருவருக்கு, மாதம் ஐயாயிரம் ரூபாய் சம்பளமாகக் கிடைக்கும். இந்தப் பணிக்கு, பி.ஜே.பி-யின் உறுப்பினர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அந்தப் பகுதியில் உள்ள இளைஞர்களை மன்றத்தில் இணைப்பது முதல் அரசுத் தேர்வுகள் பற்றிய விவரங்களைத் தெரிவிப்பது வரையில் அவர்கள் எப்போதும் இளைஞர்களைச் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். இதனால் மக்கள் மனதில் மோடி என்ற பெயரை அழுத்தமாகப் பதிவுசெய்ய முயன்றுவருகிறார்கள்.

தமிழ்நாட்டில் படருமா தாமரை? - அரசுத் திட்டங்கள் மூலம் ஆள்சேர்க்கும் பி.ஜே.பி

மத்திய அரசின் திட்டங்கள் மட்டுமல்லாமல், மாநில அரசின் திட்டங்களையும் பெற்றுத் தருவதில் அ.தி.மு.க-வினரை விட பி.ஜே.பி-யினர் முன்னிலை வகிக்கிறார்கள். முதியோர் உதவித்தொகை, பசுமை இல்லம் போன்ற திட்டங்களுக்கான விண்ணப்பங்களைக் கிராம மக்களிடம் பூர்த்தி செய்து வாங்கி, இவர்கள் விண்ணப்பிக்கிறார்கள். கல்விக்கடன் திட்டத்தையும் கையில் எடுத்திருக்கிறது பி.ஜே.பி. அந்தந்தப் பகுதிகளில் உள்ள தகுதியான நபர்களை அடையாளம் கண்டு, அவர்கள் கூப்பிடாமலே சென்று உதவி செய்கிறார்கள்.

இன்னொரு பக்கம் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் முக்கியஸ்தர்கள், பெரிய மனிதர்கள், அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்களிடம் செல்வாக்கு பெற்ற மனிதர்களை அடையாளம் கண்டு, அவர்களை பி.ஜே.பி பக்கம் இழுக்கும் பணியும் முழுவீச்சில் நடந்து வருகிறது’’ என்றார்.

பி.ஜே.பி ஓரளவுக்குச் செல்வாக்குடன் இருக்கும் மாவட்டங்களின் நிலை இது.

கன்னியாகுமரி:  இங்கே பி.ஜே.பி பலமாக இருப்பதற்கு முக்கியக் காரணம், விவேகானந்தா கேந்திரம். இங்கு அடிக்கடி ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் வந்து போக, குமரி மாவட்டத்தில் இந்துத்துவ அமைப்புகள் அதிகமாக வளரத் தொடங்கின. ராம கோபாலன் இந்து முன்னணி இயக்கத்தைத் தொடங்கி, அதன் கிளைகளைப் பரப்பினார். பி.ஜே.பி-யில் கோலோச்சும் பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட பலரும் இந்து முன்னணியின் பொறுப்பாளர்களாக இருந்தவர்கள்தான். , மத்திய அமைச்சர் ஆனபிறகு பொன்.ராதாகிருஷ்ணன், குமரி மாவட்டத்துக்குக் கிட்டத்தட்ட 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கான வளர்ச்சிப் பணிகளை அறிவித்துள்ளார். இந்த மாவட்டத்தை முதல் கட்டமாக பி.ஜே.பி வளையத்தில் கொண்டுவரவேண்டும் என்பதுதான் திட்டம்.

கோவை: 1998-ல் கோவை குண்டுவெடிப்பு சம்பவத்துக்குப் பிறகுதான் பி.ஜே.பி காலூன்ற ஆரம்பித்தது. கோவையின் தொழிலதிபர்களை வளைக்கும் வேலையில் இறங்கியிருக்கிறது பி.ஜே.பி. சிறிய தொழிலதிபர்கள், பெரிய தொழிலதிபர்கள் என்று பிரித்து, தனித்தனியாகச் சந்தித்து அவ்வப்போது கூட்டம் நடத்தியிருக்கிறார்கள். தொழிலதிபர்களுக்கு மத்திய அரசு மூலமாக என்னென்ன செய்ய முடியுமோ, அவற்றையெல்லாம் செய்து தருவதாக உறுதி கொடுத்திருக்கிறார்கள். வெவ்வேறு கட்சிகளின் அனுதாபிகளாக இருக்கும் தொழிலதிபர்களுக்கும், பி.ஜே.பி-க்கு ஆதரவான மனநிலையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். “மோடி, ஏழைகளுக்கு இலவசமாக வீடு தருகிறார். இங்கே இருக்கும் ஆளும்கட்சியினர் கேட்பது போல ஐம்பதாயிரம், ஒரு லட்சம் என்று லஞ்சம் எல்லாம் கிடையாது. வெறும் 75 ரூபாய்தான் விண்ணப்பச் செலவு’’ என்று அப்ளிகேஷன்களோடு வீதிவீதியாகச் சென்று மக்களைச் சந்திக்கிறார்கள். வாரத்துக்கு ஒரு மத்திய அமைச்சரோ, பி.ஜே.பி நிர்வாகியோ கோவைக்குள் வட்டமடிக்கிறார்கள்.ஆர்.எஸ்.எஸ் முழு நேர ஊழியர்கள் அதிகமாகச் செயல்படுகிறார்கள்.

திருப்பூர்: இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து அன்னையர் முன்னணி, விவேகானந்தர் பேரவை, இந்து மக்கள் கட்சி, பாரத் சேனா, அனுமன் சேனா... என பி.ஜே.பி-க்கு ஆதரவு அளிக்கும் இந்து அமைப்புகள் இங்கு ஏராளம். தொழிலாளர் வர்க்கம் அதிகம் நிறைந்த திருப்பூர், இடதுசாரிகளின் கோட்டையாக இருந்தது ஒரு காலம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாகக் காவிகளின் ஆதிக்கம் அதிகரித்திருக்கிறது. தென் மாவட்டத் தொழிலாளர்கள் இங்கு நிறைந்திருப்பதால், அவர்களைத் தங்களின் பக்கம் இழுத்துக்கொள்வதில் இந்து அமைப்புகள் மும்முரமாக இருக்கின்றன.

பின்னலாடை நிறுவனங்கள்தான் திருப்பூரின் உயிர். ஆட்சி பலத்தைப் பயன்படுத்தி, தொழில்துறைக்குள் தங்களின் ஆதிக்கத்தைச் செலுத்தினால், கட்சி வளரும் என்பதில் பி.ஜே.பி தெளிவாக இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் மீது பற்றுள்ள பின்னலாடை நிறுவன உரிமையாளர்களை ஒருங்கிணைத்து, பொதுவான அறக்கட்டளைகளை உருவாக்கி, அவற்றைப் பின்னணியில் இருந்து இயக்குகிறார்கள். அதன் விளைவு... இந்த மாவட்டத்துக்குத் தமிழக அமைச்சர்கள் வருகிறார்களோ, இல்லையோ... மாதம் ஒரு மத்திய அமைச்சர் விசிட் அடித்துவிடுகிறார். தங்களின்மீது மத்தியில் இருந்து நேரடிப் பார்வை விழுவதைத் தொழில்துறையினரும் விரும்புகிறார்கள்.

சிலம்பம், கராத்தே எனப் பள்ளிச் சிறுவர்களுக்குத் தற்காப்புக் கலை மற்றும் விளையாட்டுப் பயிற்சி அளிப்பது... வாரம்தோறும் இந்துத்துவா கொள்கைகளை விளக்கும் வகையில் வகுப்புகள் எடுப்பது எனக் கிராமங்களை நேரடியாகச் சென்றடைகிறார்கள். வாரம் ஒருவர் என்ற அடிப்படையில், கட்சியின் சிறப்புப் பேச்சாளர்கள் மொத்த கிராமத்தையும் சுற்றி வருகிறார்கள். வட மாநில பி.ஜே.பி எம்.பி ஒருவர், திருப்பூரில் ஒரு கிராமத்தில் தூய்மை இந்தியா திட்ட விழிப்பு உணர்வை நடத்துகிறார். தாராபுரம், உடுமலை போன்ற முஸ்லிம்கள் அதிகம் நிறைந்த பகுதிகளிலும் ஆர்.எஸ்.எஸ்-ஸின் ஈடுபாடு மிகவும் வீரியத்துடன் செயல்படத் தொடங்கியிருக்கிறது.

கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் வட்டாரங்களின் பெரும்பான்மை சமூகமான கவுண்டர் சமூகத்தின் வாக்கு வங்கியைப் பெற அதிகப்படியான முயற்சிகளை எடுத்துவருகிறது பி.ஜே.பி. மேற்கு மண்டலத்தில் அ.தி.மு.க-வுக்கு இந்தச் சமுதாயம் அளித்துவந்த ஆதரவை, இப்போது அ.தி.மு.க-வில் நிலவும் சூழலைப் பயன்படுத்தி, தங்களுக்குச் சாதகமாக மாற்ற பி.ஜே.பி-யினர் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், சிதறிக் கிடக்கும் கொங்கு அமைப்புகள் அனைத்தையும், தன்னுடைய தலைமையின் கீழ் கொண்டுவந்து இணைத்துவிட்டால், மேற்கு மண்டலத்தையே கைப்பற்றிவிடலாம் என்பது பி.ஜே.பி-யின் கணக்கு.

மத்திய அரசு போடும் உரத்தில் தாமரை போஷாக்காக வளருமா என்பது போகப் போகத் தெரியும்.

- ஆர்.குமரேசன், புண்ணியமூர்த்தி, தி.ஜெயப்பிரகாஷ், த.ராம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழ்நாட்டில் படருமா தாமரை? - அரசுத் திட்டங்கள் மூலம் ஆள்சேர்க்கும் பி.ஜே.பி

‘‘சட்டவிரோதமாக எதையாவது செய்கிறோமா?’’

துபற்றி பி.ஜே.பி-யின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.என் சிவநேசனிடம் பேசினோம். “பி.ஜே.பி காலூன்ற முயற்சிக்கிறது என்ற வாதமே முதலில் தவறு. தமிழகத்தில் காலூன்றி கால் நூற்றாண்டுக்கு மேலாகிவிட்டது. திராவிடக் கட்சிகளுக்கு நிகராக தமிழகத்தில் நாங்களும் அமைப்பு ரீதியாக வலுவாக உள்ளோம். ஒரு மாநிலத்தில் கட்சியை வலுவாக்க நினைப்பது, எல்லா தேசியக் கட்சிகளுக்கும் உள்ள பொதுவான ஆசைதான். அது எங்களுக்கும் இருப்பதில் என்ன ஆச்சர்யம்? நேரு காலத்தில் ஐந்தாண்டு திட்டங்களைச் செயல்படுத்தியதுபோல், இன்று பிரதமர் நரேந்திர மோடி, தொலைநோக்குப் பார்வையுடன் தேசத்தின் வளர்ச்சிக்காகப் பல நல்ல திட்டங்களைக் கொண்டு வருகிறார். அவற்றை மக்களிடம் கொண்டு செல்வது ஒவ்வொரு பி.ஜே.பி உறுப்பினரின் கடமை. அதைத்தான் செய்கிறோம். அதன்மூலம் பி.ஜே.பி-க்கு மக்களின் ஆதரவு பெருகினால் அது நியாயமான விஷயம்தானே? கட்சியை வளர்ப்பதற்காக நாங்கள் சட்டவிரோதமான வழிமுறைகளைப் பின்பற்றினால் தவறு என்று சொல்லுங்கள். கோவையில் தொழில்துறையில் பல திட்டங்களைச் செயல்படுத்துவதால் பி.ஜே.பி-க்கு ஆதரவு பெருகுகிறது. கட்சியை வளர்ப்பது ஒரு பக்கம் இருக்கட்டும்... தொழில்வளம் பெருகுகிறதா என்பதைப் பாருங்கள்” என்றார்.

- எஸ்.கிருபாகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism