Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!
கழுகார் பதில்கள்!

சோ.பூவேந்த அரசன், சின்ன தாராபுரம்.

ஜெயலலிதா இறப்புக்குப் பிறகு இரண்டு முதலமைச்சர்கள் வந்துவிட்டார்கள். ஆனாலும், ‘அம்மாவின் அரசு’ என்றுதான் அமைச்சர்கள் சொல்கிறார்கள். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது, ‘இது புரட்சித் தலைவரின் அரசு’ என்றுதானே நியாயமாகச் சொல்லியிருக்க வேண்டும்?


அப்படித்தான் சொல்லியிருக்க வேண்டும்.  ‘எம்.ஜி.ஆரால் அல்ல, தன்னால்தான் இந்த ஆட்சி அமைந்தது, கட்சி இருக்கிறது’ என்று நினைத்தார் ஜெயலலிதா. தன்னை சுயம்புவாக நினைத்தார். அதனால், எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்லவில்லை.

எடப்பாடி பழனிசாமி, ‘இது ஜெயலலிதா இறந்ததால் கிடைத்த பாக்கியம்’ என்று உண்மையில் நம்புகிறார். அதனால், ‘அம்மாவின் அரசு’ என்று மறக்காமல் சொல்கிறார். இதுவும் எத்தனை நாளைக்கு என்று தெரியவில்லை. மதுரையில் நடந்த   எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவே எடப்பாடியாருக்கான விழா போல இருந்துள்ளது. அவரது படம் பெரிதாக வைக்கப்பட்டு இருந்தது. ‘நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற’ என்ற பாடல் ஒலித்தபோது, எடப்பாடி படத்தை ஜூம் செய்து காட்டியுள்ளார்கள். அமைச்சர்கள் செல்லூர் ராஜுவும் உதயகுமாரும் பாராட்டித் தள்ளியிருக்கிறார்கள். இப்படியே போனால், ‘அம்மா’ பெயரும் மெல்ல மெல்ல மறக்கப்பட்டு விடும்!

கழுகார் பதில்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் இல்லாதபோதே இவ்வளவு சொத்துக்கள் என்றால், முறைப்படி வாரிசுகள் இருந்திருந்தால் இன்னும் நிறைய சம்பாதித்து இருப்பாரோ?


 ஒருவர் சம்பாதிப்பதற்கும், சொத்து சேர்ப்பதற்கும், அவருக்குக் குடும்பம் இருப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது ஒருவிதமான பேராசை. இன்னும் சொன்னால் பண வெறி. அது குடும்பம் உள்ளவருக்கும் இருக்கும், இல்லாதவருக்கும் இருக்கும்.

ஜெயலலிதாவுக்கு யாரும் இல்லை; கருணாநிதிக்கு எல்லோரும் இருக்கிறார்கள். இரண்டு பேரும் நல்ல பெயர் வாங்கவில்லையே?

உமரி பொ.கணேசன், மும்பை.

ஒரு மனிதனை எப்படி எடை போடுவது?


‘கை சுத்தம், வாய் சுத்தம் வேண்டும்’ என்று கிராமங்களில் சொல்வார்கள். ‘நேர்மையானவரா, உண்மையானவரா’ என்பதை வைத்துத்தான் ஒரு மனிதனை எடை போட வேண்டும். இரண்டும் சுத்தமாக இருந்தால், அவர் செய்யும் செயல் உன்னதமாக இருக்கும்.

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.


பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மட்டும் இந்தத் தருணத்திலும் இப்படி ஆக்டிவாக இருக்கிறார்?


ஆளும்கட்சிக்குள் தினம் தினம் நடக்கும் கூத்துகளுக்கு நடுவே ஒவ்வொருவரும் தங்கள் துறையைப் பற்றி யோசிக்கவே நேரமில்லாமல், ஓடிக் கொண்டுள்ளனர். முதலமைச்சருக்கும் இதே நிலைதான். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு செங்கோட்டையன் சிக்ஸர் விளாசுகிறார். அதற்குத் தோதாக அவருக்கு நல்ல அதிகாரிகளும் கிடைத்துள் ளனர். நல்ல யோசனைகள் எங்கிருந்து வந்தாலும் ஏற்றுச் செயல் படுத்தும் பக்குவம் இருப்பதால் நல்ல பெயர் வாங்குகிறார் செங்கோட்டையன்!

கழுகார் பதில்கள்!

மு.மதிவாணன், அரூர்.

‘சினிமா டிக்கெட் மீதான    ஜி.எஸ்.டி வரியை விலக்காவிட்டால், சினிமாவை விட்டு விலகுவேன்’ என்கிறாரே கமல்?


ஓ! அதனால்தான் டி.வி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வந்துவிட்டாரா கமல்?!

ஏ.மோகன்ராவ், நன்மங்கலம்.

 ‘உலகைப் படைத்த பிரம்மனே வந்தாலும் தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது’ என்கிறேன் நான். சரியா?


உலகத்துக்குள்தானே தமிழகம் இருக்கிறது!

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

தமிழகத்தில் இனியும் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படும் என்று நம்புகிறீர்களா?


நம்பவில்லை. எடப்பாடி ஆட்சியில் ஸ்திரத்தன்மை ஏற்படாது. தினகரனே அவரோடு சமாதானமாகப் போனாலும், சில எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்து மிரட்டத்தான் செய்வார்கள். அதனால், இந்த ஆட்சி எப்போதும் நித்ய கண்டமாகத்தான் தொடரும். இந்த ஸ்திரத்தன்மை இல்லாமல் போனதால்தான் தொழில் வளர்ச்சி என்பது தேய்கிறது.

தீ.அசோகன், திருவொற்றியூர்.

‘தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பத்தால் காங்கிரஸ் வளர்வதற்கான வாய்ப்பு உள்ளது’ என்று ராகுல் காந்தி சொன்னது பற்றி..?


ராகுல் எந்த காங்கிரஸைச் சொன்னார் என்று உங்களால் கூற முடியுமா? திருநாவுக்கரசர் காங்கிரஸ், சிதம்பரம் காங்கிரஸ், தங்கபாலு காங்கிரஸ், பீட்டர் அல்போன்ஸ் காங்கிரஸ், செல்லக்குமார் காங்கிரஸ், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காங்கிரஸ், கிருஷ்ணசாமி காங்கிரஸ், வசந்தகுமார் காங்கிரஸ், குமரி அனந்தன் காங்கிரஸ் இப்படி ஏகப்பட்ட காங்கிரஸ்கள் இருக்கின்றனவே!

ஆக, அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் பல்வேறு பிரிவுகளாக உடைந்தாலும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரவே வராது. உங்களுக்கு பயமே வேண்டாம்.

கழுகார் பதில்கள்!

எஸ்.பி.விவேக், தாதம்பட்டி.

அதிர்ஷ்டம், குருட்டு அதிர்ஷ்டம்... ஆகியவற்றுக்கு உதாரணம்?


பன்னீருக்கு முதல்வர் பதவி கிடைத்தது அதிர்ஷ்டம். ஒருவிதத்தில் இன்னாருக்கு இந்த வாய்ப்பு ஏற்படும் என்று கணிக்க முடியும்.

எடப்பாடிக்கு கிடைத்தது குருட்டு அதிர்ஷ்டம். பன்னீரும் பிரச்னை செய்து, சசிகலாவும் சிறைக்குப் போய், தினகரனும் எம்.எல்.ஏ ஆக முடியாமல், முதல்வர் பதவியில் எடப்பாடி தொடர்கிறார் அல்லவா?

கழுகார் பதில்கள்!

வி.ஐ.பி கேள்வி

கோபண்ணா, தமிழக காங்கிரஸ் ஊடகத் துறை தலைவர்


தமிழ்நாட்டுக்கும் தமிழுக்கும் காங்கிரஸ் கட்சி செய்த பங்களிப்புகளை குறைத்து மதிப்பிடும் போக்கு தமிழக அரசியலில் சிலரிடம் இருக்கிறதே?


சிலரிடம் அல்ல, பலரிடமும் இருக்கிறது. அதற்குக் காரணம், காங்கிரஸ் கட்சிதான். காங்கிரஸ் ஆட்சி தமிழுக்கு என்ன செய்தது என்று பார்த்தாலே இரண்டு முக்கியமான குற்றச்சாட்டுகள்தான் வந்து நிற்கும்.

ஒன்று, ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாற்றம் செய்வதற்காக விருதுநகர் சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்தபோது, அன்றைய காங்கிரஸ் ஆட்சி அதை அலட்சியப்படுத்தியது. சங்கரலிங்கனார் செத்தே போனார். இரண்டாவது, இந்தி எதிர்ப்புப் போராட்டம் 1965-ம் ஆண்டு நடந்தபோது அதனை மத்திய, மாநில காங்கிரஸ் அரசுகள் துப்பாக்கி முனையில் அடக்கியது. தமிழகத்துக்குள் முதலும் கடைசியுமாக ராணுவம் வந்தது. இந்த இரண்டு குற்றச்சாட்டுகளையும் காங்கிரஸ் கட்சி எதிர்கொண்டாக வேண்டும். தமிழை தி.மு.க கொண்டாடியதால், அதை விரோதமாகப் பார்க்கும் மனநிலை அன்றைய காங்கிரஸ் தலைவர்களிடம் இருந்தது.

அதேநேரத்தில் தமிழை ஆட்சி மொழி ஆக்கியது காங்கிரஸ் அரசுதான். கல்லூரிக் கல்வித்துறையில் ஏராளமான நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டு வந்ததும் காங்கிரஸ் அரசுதான். இதை எல்லாம் மாற்றுக் கட்சியினர் சொல்ல மாட்டார்கள். காங்கிரஸ் கட்சிதான் சொல்ல வேண்டும்.

காமராசரின் வாழ்க்கை வரலாற்று புத்தகம் எழுதிய தாங்கள், காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகள் குறித்த தரவுகளைத் தொகுத்து எழுதினால், அவை வெளிச்சத்துக்கு வரும்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி: 
கழுகார் பதில்கள்,  ஜூனியர் விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை- 600 002 
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism