Published:Updated:

தி.மு.க-வுக்குள் தீண்டாமை! - ஈரோடு கலாட்டா

தி.மு.க-வுக்குள் தீண்டாமை! - ஈரோடு கலாட்டா
பிரீமியம் ஸ்டோரி
தி.மு.க-வுக்குள் தீண்டாமை! - ஈரோடு கலாட்டா

தி.மு.க-வுக்குள் தீண்டாமை! - ஈரோடு கலாட்டா

தி.மு.க-வுக்குள் தீண்டாமை! - ஈரோடு கலாட்டா

தி.மு.க-வுக்குள் தீண்டாமை! - ஈரோடு கலாட்டா

Published:Updated:
தி.மு.க-வுக்குள் தீண்டாமை! - ஈரோடு கலாட்டா
பிரீமியம் ஸ்டோரி
தி.மு.க-வுக்குள் தீண்டாமை! - ஈரோடு கலாட்டா

“தி.மு.க-வில் மாவட்ட பொறுப்பில் இருக்கும் என்னை, ஒன்றியச் செயலாளர் சாதிரீதியாக இழிவுபடுத்துகிறார். இந்த மாவட்ட தி.மு.க-வில் தலித்களுக்கு முக்கியப் பதவிகள் எதையும் கொடுப்பதில்லை. அப்படியே கொடுத்தாலும், கீழ்த்தரமாக நடத்துகிறார்கள். பெரியார் பிறந்த ஈரோட்டு மண்ணில் தி.மு.க-வில் தீண்டாமைக் கொடுமை தலைவிரித்து ஆடுகிறது” என்று வெடிக்கிறார், தி.மு.க நெசவாளர் அணியின் ஈரோடு தெற்கு மாவட்டத் துணை அமைப்பாளரான மாகாளியப்பன்.

தி.மு.க-வுக்குள் தீண்டாமை! - ஈரோடு கலாட்டா

இது தொடர்பாக, தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியுள்ளார், மாகாளியப்பன். அவரிடம் பேசினோம். “நான் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவன். தாழ்த்தப் பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் அருந்ததியர் மக்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கியவர், கலைஞர். அதனால் ஈர்க்கப்பட்டு தி.மு.க-வில் இணைந்தேன். கடந்த 10 வருடங்களாக தி.மு.க வளர்ச்சிக்காகக் கடுமையாக உழைத்து வருகிறேன். எனது செயல்பாட்டைப் பாராட்டி ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் முத்துசாமியும், மாநில நெசவாளர் அணிச் செயலாளர் சச்சிதானந்தமும் தலைமைக்குப் பரிந்துரை செய்ய, எனக்கு ஈரோடு தெற்கு மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் பதவி கிடைத்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தி.மு.க-வுக்குள் தீண்டாமை! - ஈரோடு கலாட்டா

ஆனால், எனக்குப் பதவி கிடைத்த நாளில் இருந்து கொடுமுடி ஒன்றியச் செயலாளர் சின்னுச்சாமி என்னை மதிப்பதில்லை. சாதி ரீதியாக என்னை மிகவும் இழிவுபடுத்தி வருகிறார். 2016 சட்டமன்றத் தேர்தலையொட்டி, கொடுமுடி ஒன்றியச் செயலாளர் அலுவலகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றேன். அப்போது சின்னுச்சாமி என்னைப் பார்த்து, ‘நீ தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். இங்க நாற்காலியில் எல்லாம் உட்காரக்கூடாது. வெளியே போய் நில்லு’ என்று சொன்னார். எனக்கு அவமானமாகப் போய்விட்டது. பலமுறை அப்படி என்னை அவமானப்படுத்தியுள்ளார்.

ஒன்றியச் செயலாளரின் சாதியத் தீண்டாமைப் பற்றி மாவட்டச் செயலாளர் முத்துசாமியிடம் முறையிட்டேன். ஆனால், அவர் ரொம்ப சாதாரணமாக, ‘இது ஒண்ணும் புதுசு இல்ல. பொறுமையா இரு’ என்று சொன்னார். அதுதான் எனக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. கலைஞரின் 94-வது பிறந்தநாள் விழாவுக்காக என் சொந்த ஊரான கந்தசாமிபாளையத்தில், என் தலைமையில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தேன். ‘மாகாளியப்பன் தலைமையில் கூட்டம் நடக்கக் கூடாது’ என்று ஒன்றியச் செயலாளர் சின்னுச்சாமியும், கொல்லங் கோயில் பேரூர் செயலாளர் சந்திரசேகரும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள்.

உடனே மாவட்டச் செயலாளர் முத்துசாமி என்னை அழைத்து, கூட்ட தேதி, தலைமை என எல்லாவற்றையும் மாற்றச் சொன்னார். ஜூன் 27-ம் தேதி கூட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளரும் ஒன்றியச் செயலாளரும் கலந்து கொள்ள வில்லை. அதில் கலந்துகொண்ட மற்ற நிர்வாகிகளோ, என்னை மேடையிலேயே ஏற விடவில்லை. நான் வலுக்கட்டாயமாக மேடையில் ஏறி மைக்கைப் பிடித்தேன். மேடையில் வைத்தே சந்திரசேகரும் மற்றவர்களும் என்னை அவமானப்படுத்தினார்கள். மாவட்டப் பொறுப்பில் இருக்கும் எனக்கே இந்தக் கதி என்றால், சாதாரண தலித் சமுதாயத் தொண்டர்களின் நிலைமையை யோசித்துப் பாருங்கள்” என்றார்.

தி.மு.க-வுக்குள் தீண்டாமை! - ஈரோடு கலாட்டா

இதுகுறித்து கொடுமுடி ஒன்றியச் செயலாளர் சின்னுச்சாமியிடம் பேசினோம். “மாகாளியப்பன் ஏற்கெனவே சமாஜ்வாடி, அ.தி.மு.க, பா.ம.க எனப் பல கட்சிகளுக்குப் போய்விட்டு வந்தவர். கட்சியைத் தவறாகப் பயன்படுத்தி சம்பாதிக்க நினைப்பவர். அதற்கு சரிப்பட்டு வரவில்லை என்றால், ‘சாதி ரீதியாக என்னை ஒடுக்குகிறார்கள்’ என்று இப்படிப் புகார் சொல்வார். தி.மு.க-வில் சீனியாரிட்டி அடிப்படையில்தான் பதவி தர வேண்டும். ஆனால், இவருக்கு மாவட்டப் பதவி கொடுத்தோம். நான் சாதி பார்த்திருந்தால், இவருக்குப் பதவி கிடைக்கச் செய்திருப்பேனா? மாகாளியப்பன் மீது ஸ்டாலினிடம் புகார் கொடுக்க இருக்கிறோம்” என்றார்.

தி.மு.க-வுக்குள் தீண்டாமை! - ஈரோடு கலாட்டா

தி.மு.க ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் முத்துசாமியிடம் பேசினோம். “அந்தப் பையனை நான்தான் பொறுப்புக்குக் கொண்டுவந்தேன். என் மீதே புகார் சொல்கிறார். ஒன்றியச் செயலாளரின் பெயரைப் போடாமல், தன் இஷ்டத்துக்குக் கூட்டத்தை நடத்தப் பார்த்தார். அதனால், நோட்டீஸைத் திருத்தி நடத்தச் சொன்னேன். அன்றைக்கு நான் டைபாய்டு ஜுரத்தில் படுத்துவிட்டேன். ஒன்றியச் செயலாளருக்கு ஒரு திடீர் விபத்து. அதனால், இருவரும் போகவில்லை. மற்றபடி புறக்கணிக்கும் எண்ணம் இல்லை. எல்லா தவறுகளையும் அவர் செய்துவிட்டு, பிரச்னையைச் சாதி ரீதியாக மாற்றுகிறார்” என்றார்.

ஒரு பெரிய கட்சிக்குள் இப்படிப்பட்ட புகார்கள் கிளம்புவது ஆபத்தானது.

- துரை.வேம்பையன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism