Published:Updated:

முதல்வருக்கு கெயில் பொங்கல் - சென்னிமலை விவசாயிகள் விழா!

முதல்வருக்கு கெயில் பொங்கல் - சென்னிமலை விவசாயிகள் விழா!
முதல்வருக்கு கெயில் பொங்கல் - சென்னிமலை விவசாயிகள் விழா!

ஈரோடு: கெயில் நிறுவனம் விளை நிலங்களில் திரவ எரிவாயு குழாய் பதிக்க‌ தடை போட்ட முதல்வருக்கு நன்றி தெரிவித்து சென்னிமலையில் விழா நடந்தது.
 

முதல்வருக்கு கெயில் பொங்கல் - சென்னிமலை விவசாயிகள் விழா!

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்துள்ள சிறுக்களஞ்சி கிராமமக்களால் ஏற்பாடு செய்யபட்ட இந்த விழா, கெயில் குழாய்கள் பதிக்கப்பட்ட நிலத்திலேயே பந்தல் போட்டு நடத்தப்பட்டது தான் சுவாரஸ்யம். விழா பந்தல் அருகே பொங்கல் வைத்து குலவையிட்ட கிராமத்து பெண்கள், 'புரட்சி தலைவி வாழ்க"  என்று கோஷமிட்டனர்.
 

முதல்வருக்கு கெயில் பொங்கல் - சென்னிமலை விவசாயிகள் விழா!

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட‌ ம.தி.மு.க. எம்.பி கணேசமூர்த்தி, ''கெயில் இந்தியா நிறுவனத்திற்கான நமது போராட்டம் இன்னும் முடியவில்லை. விளை நிலங்களில் புதைக்கப்பட்டுள்ள இரும்புக் குழாய்களை அப்புறபடுத்தி, கையகப்படுத்திய நிலங்களை மீண்டும் விவசாயிகளுக்கே வழங்க வேண்டும். நிலங்களின் மீதுள்ள வில்லங்கத்தையும் நீக்கவேண்டும். அப்பொழுதுதான் நில உரிமையாளர்கள் வங்கி கடன் பெறவும், நிலத்தை விற்கவும், மின் இணைப்பு பெறுதல் உள்ளிட்டவைகளை மேற்கொள்ள முடியும்" என்றார்.
 

முதல்வருக்கு கெயில் பொங்கல் - சென்னிமலை விவசாயிகள் விழா!

விழாவில் அலைபேசி வழியாக உரையாற்றிய‌ கூடங்குளம் அணு உலை போராளி சுப.உதயகுமார், ''நிலத்தையும் நீரையும் காப்பாற்ற வேண்டிய கட்டத்தில் நாம் உள்ளோம். மக்கள் ஒன்றிணைந்து போராடியது தமிழக அரசியலில் ஒரு புதிய தாக்கத்தை உண்டாக்கியுள்ளது. அதற்கு கிடைத்த முதல் வெற்றி இது. நாம் இணைந்து போராடினால்தான் பன்னாட்டு சக்திகளிடம் இருந்து நம் வாழ்வாதாரங்களை பாதுகாத்து கொள்ளமுடியும். அதற்காக மக்களின் ஒற்றுமையை பலப்படுத்துங்கள்" என்றார்.

செய்தி, படங்கள்: ஜி.பழனிச்சாமி