Published:Updated:

மாணவர்கள் மீது காங்கிரசார் தாக்குதல்: கோவையில் காங். கொடி எரிப்பு!

மாணவர்கள் மீது காங்கிரசார் தாக்குதல்: கோவையில் காங். கொடி எரிப்பு!
மாணவர்கள் மீது காங்கிரசார் தாக்குதல்: கோவையில் காங். கொடி எரிப்பு!
மாணவர்கள் மீது காங்கிரசார் தாக்குதல்: கோவையில் காங். கொடி எரிப்பு!

கோவை: திருச்சியில் மாணவர்கள் மீது காங்கிரசார் நடத்திய தாக்குதலை கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியின் கொடியை மாணவர்கள் எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சியில்  மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காங்கிரஸ் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை போலிஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.அப்போது காங்கிரஸ் கட்சியின் கொடியை  மாணவர்கள் தீ வைத்து எரித்தனர். மாணவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

தனி ஈழம் அமைக்க பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மாணவர் போராட்டம் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் திருச்சியில் போராட்டம் நடத்திய மாணவர்களை காங்கிரஸ் கட்சியினர் தாக்கியதாகவும், இதில் கல்லூரி மாணவர்கள் படுகாயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கோவையில் தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பினர் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு கூட்டமாக வந்து  காங்கிரஸ் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்க வந்தனர். காவல் துறை அனுமதியளிக்க மறுக்கவே கமிஷனர் அலுவலக வாயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

##~~##

பின் கமிஷனர் அலுவலகம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் காங்கிரஸ் கட்சியின் கொடிகளை தீ வைத்து எரித்தனர். அப்போது ஏர்டெல் நிறுவன விளம்பர பலகைகளையும் தீ வைத்து  எரித்த மாணவர்கள் தமிழீழம் அமையும் வரை போராட்டம் தொடரும் எனவும் ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கை வீரர்களை அனுமதிக்க மாட்டோம் எனவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பினை சேர்ந்த மாணவ மாணவிகளை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த போராட்டம் காரணமாக கமிஷனர் அலுவலகம் முன்பாக பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

இதே போன்று கோவை கடற்படை அலுவலகமாக ஐ.என்.எஸ் அக்ராணியை முற்றுகையிட்டு அனுமன் சேனா என்ற அமைப்பின் மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்க அனுமதிக்க கூடாது என அவர்கள் வலியுறுத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட அனுமன் சேனா மாணவர் அமைப்பினர் 20 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். போராட்டம் காரணமாக கடற்படை மையத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதனிடையே, இன்று மாலை மதுரையில் பைக் பேரணி நடத்திய மாணவர் போராட்ட குழுவினர், மாவட்ட காங்கிரஸ் தலைவர் தெய்வநாயகத்தின் வீட்டை முற்றுகையிட்டு, 'மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காங்கிரஸ் காரர்களே இந்தியாவை விட்டே வெளியேறுங்கள்" என்று கோஷம் போட்டனர்

-ச.ஜெ.ரவி