Published:Updated:

காங்கிரசாரை கைது செய்யக் கோரி மாணவர்கள் போராட்டம் ( படங்கள் )

காங்கிரசாரை கைது செய்யக் கோரி மாணவர்கள் போராட்டம் ( படங்கள் )
காங்கிரசாரை கைது செய்யக் கோரி மாணவர்கள் போராட்டம் ( படங்கள் )

திருச்சியில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காங்கிரசாரை கைது செய்யக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காங்கிரசாரை கைது செய்யக் கோரி மாணவர்கள் போராட்டம் ( படங்கள் )

திருச்சியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த கட்சியின் மாநிலத் தலைவர் ஞானதேசிகனை வரவேற்று பேனர்கள், கட் அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தது.

இதனை, சட்டக் கல்லூரி மாணவர்கள் உடைத்து எறிந்தனர். இது பற்றி தகவல் அறிந்த காங்கிரசார் உருட்டுக்கட்டைகளுடன் வந்தனர். அப்போது, மாணவர்கள் மீது அவர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.

காங்கிரசாரை கைது செய்யக் கோரி மாணவர்கள் போராட்டம் ( படங்கள் )

இந்த தாக்குதலில் 4 மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

##~~##
மாணவர்கள் மீது காங்கிரசார் தாக்குதல் நடத்திய போது போலீஸார் வேடிக்கை பார்த்துக் கொண்டதுதான் பெரிய சோகம்.
இதனிடையே, மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காங்கிரசாரை கைது செய்யக் கோரி தஞ்சாவூரில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காங்கிரசார் மன்னிப்பு கேட்கும் வரை எங்கள் போராட்டம் ஓயாது என்று மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 
காங்கிரசாரை கைது செய்யக் கோரி மாணவர்கள் போராட்டம் ( படங்கள் )

நெல்லை: இதனிடையே, நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தை இன்று தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த சுமார் 50 பேர் இரண்டு பிரிவுகளாக முற்றுகையிட பேரணியாக சென்றனர்.

இது பற்றி தகவல் அறிந்த காவல்துறையினர், மாணவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்