Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

Published:Updated:
கழுகார் பதில்கள்!
பிரீமியம் ஸ்டோரி
கழுகார் பதில்கள்!
கழுகார் பதில்கள்!

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

சசிகலாவும் தினகரனும் இல்லாவிட்டால் அ.தி.மு.க நடுத்தெருவுக்கு வந்திருக்கும் என்பது உண்மைதானே?

ஓரளவு உண்மைதான். ‘அம்மா இறந்து போனாலும் சின்னம்மா இருக்கிறார்’ என்று அக்கட்சியினர் நம்பினார்கள். சசிகலாவும் தினகரனும்தான் எம்.எல்.ஏ-க்களைக் கூவத்தூரில் அடைத்து வைத்திருந்து காப்பாற்றினார்கள். அதைச் செய்திருக்கா விட்டால், இந்த ஆட்சி இவ்வளவு நாள்கூட நீடித்திருக்காது.

கழுகார் பதில்கள்!

வண்ணை கணேசன், சென்னை-110.

‘1962-ம் ஆண்டு போரில் இந்தியா இருந்த நிலைமை வேறு.   2017-ம் ஆண்டு நிலைமை மாறிவிட்டது’ என்று சீனாவின் மிரட்டலுக்கு மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி பதில் அளித்துள்ளாரே?

ஜெட்லி சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. 1962-ல் இந்தியா இருந்த நிலைமையும் இப்போதும் இருக்கும் நிலைமையும் ஒன்றல்ல. இந்தியா சுதந்திரம் அடைந்த 15 ஆண்டுகளுக்குள் நடந்த மோதல் அது. ராணுவ வலிமையும் அன்று குறைவு. பொருளாதார நிலைமையும் அன்று போதுமானதாக இல்லை. இன்று இரண்டிலும் இந்தியா வலிமை பெற்று உள்ளது. இதைத்தான் சீனாவைப் பார்த்து ஜெட்லி சொல்கிறார். அது தேவையான எச்சரிக்கைதான். ஆனால், சீனாவை எச்சரிக்கும் அளவுக்கான வலிமையோடு இருக்கிறோமா என்பதை யோசிக்க வேண்டும்.

கழுகார் பதில்கள்!

என்.முருகேஷ், மங்கைநல்லூர்.

‘ஆட்சியை நடத்த வேறுவழியின்றி பி.ஜே.பி-யுடன் ஒத்துப் போகிறோம்’ என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சொல்கிறாரே?

உண்மையை வெளிப்படையாக ஒப்புக் கொண்டதற்கு நன்றி சொல்ல வேண்டும். இந்த வாக்குமூலத்தை ஜெயலலிதா சமாதியில் கல்வெட்டாக அடித்து வைக்கலாம். வருங்காலம் வாழ்த்தும்!?

கழுகார் பதில்கள்!

மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

ஜி.எஸ்.டி.யை முதன்முதலில் கொண்டுவந்தது காங்கிரஸ்தான். ஆனால், அந்தக் கட்சி இப்போது எதிர்க்கிறதே?


காங்கிரஸ் கட்சி ஜி.எஸ்.டி-யை எதிர்க்கவில்லை. ‘நாங்கள் கொண்டுவர நினைத்த ஜி.எஸ்.டி இது அல்ல. இன்னும் சில விஷயங்களைச் சேர்த்திருக்க வேண்டும்’ என்றுதான் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் சொல்கிறார். ‘ஜி.எஸ்.டி-யைக் கொண்டுவருவதில் ஏன் இவ்வளவு அவசரம்? பப்ளிசிட்டிக்காக அவசரப்படுகிறார் மோடி’ என்றுதான் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி சொல்லி இருக்கிறார். மோடி நடத்திய நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ள மறுத்ததாலேயே, ஜி.எஸ்.டி-யை காங்கிரஸ் எதிர்க்கிறது என்று அர்த்தம் அல்ல. இன்னொரு விஷயம் தெரியுமோ... குஜராத் முதல்வராக இருந்தபோது ஜி எஸ் டி -யை எதிர்த்தவர்தான்  இப்போது அந்த சட்டத்தைக் கொண்டு வந்திருக்கும்  மோடி.

ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

கழுகார் பதில்கள்!‘தமிழ்நாட்டின் வரலாற்றுப் பிழை’ என்று இப்போது எதனைக் கூறுவீர்கள்?

சசிகலா குடும்பத்தைக் கட்சியை விட்டு நீக்கி வைத்த ஜெயலலிதா, ‘தனக்குப் பிறகு இவர்கள் வந்து கட்சியைக் கைப்பற்றுவார்கள்’ என்று முன்யோசனையுடன் உணராமல் இருந்ததுதான் வரலாற்றுப் பிழை.

டி.சந்திரன்,
ஈரோடு.

அரசியல் களத்தில் நன்னடத்தையும் நேர்மையும் எப்படி இருக்கிறது?

ஊழல் செய்கிறார்கள். தண்டனை பெறுகிறார்கள். சிறைக்குப் போகிறார்கள். அதனால் கட்சி உடைகிறது. உடைந்த கட்சியை ஒட்ட வைப்பதற்கு லஞ்சம் கொடுக்கிறார்கள். அதற்கும் சிறைக்குப் போகிறார்கள். சிறையில் சலுகைகளைப் பெறுவதற்காகவும் லஞ்சம் தருகிறார்கள். ‘எல்லாவற்றையும் பணத்தால் சாதிக்க முடியும், பணத்தால் மட்டுமே சாதிக்க முடியும்’ என்று நினைப்பவர்கள் கையில் அரசியல் களம் போய்விட்டது.

கழுகார் பதில்கள்!

வளையாபதி, தோட்டக்குறிச்சி.

‘ஜனாதிபதி தேர்தலைத் தத்துவரீதியான மோதலாக மாற்றுவதற்கு காங்கிரஸ் முயற்சிக்கிறது’ என்ற வெங்கையா நாயுடுவின் கூற்று சரியானதா?

ஜனாதிபதி தேர்தலுக்கும் தத்துவ மோதலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. யாருக்கு அதிக வாக்குகள் கிடைக்கிறதோ, அவர்கள் வெல்லப் போகிறார்கள். பி.ஜே.பி-யும் காங்கிரஸும் தலித் சமூகத்தைச் சார்ந்தவரையே நிறுத்தி இருப்பதால் ‘எந்த மோதலும் ஏற்படாதவாறு சாமர்த்தியமாக சமாளிக்கிறார்கள்’ என்று வேண்டுமானால் சொல்லலாம்.

கழுகார் பதில்கள்!

வி.ஐ.பி கேள்வி

தியாகு, தலைவர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.

உச்ச நீதிமன்றத்தால் முதல் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டவரின் படத்தைத் தமிழகக் காவல்துறையில் கூட மாட்டி வைத்திருக்கிறார்களே. சட்டப்படி இதற்குத் தீர்வு காண்பது எப்படி?

சொத்துக்குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார் ஜெயலலிதா. அதனாலேயே முதலமைச்சர் பதவியில் இருந்து இறக்கப்பட்டார். பிறகு, கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு அவருக்குச் சாதகமாக வந்தது. அதனால் மீண்டும் முதல்வர் ஆனார். கர்நாடக அரசு, இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. ஜெயலலிதாவின் நல்ல காலம், அவர் இறக்கும் வரை தீர்ப்பு வரவில்லை. மரணத்துக்குப் பிறகு வந்த தீர்ப்பால், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் இருக்கிறார்கள்: ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் மீண்டும் முதல்வர் பதவியை இழந்து பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு இருப்பார். ‘இறந்து போனவரைத் தண்டிக்க முடியாது’ என்ற அடிப்படையில் அவருக்குத் தண்டனை தரப்படவில்லையே தவிர, அவரை ‘நிரபராதி’ என்று நீதிமன்றம் சொல்லி விடவில்லை.

இந்தச் சூழலில் ஜெயலலிதாவின் படத்தை அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்களில் வைப்பது தவறான முன்னுதாரணம். இதைத் தடுக்க வேண்டிய கடமை உச்ச நீதிமன்றத்துக்குத்தான் இருக்கிறது. அவர்கள் இதற்கான வழிகாட்டு நெறிமுறையை உடனடியாக வெளியிட வேண்டும். சட்டத்தின் மீது அக்கறை கொண்டவர்கள், இதனை நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும்.

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:  கழுகார் பதில்கள்,  ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002 

kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!