Published:Updated:

“சர்வாதிகாரி... ஓ.பி.எஸ்-ஸின் நிழல்... ஊழல் பேர்வழி!”

“சர்வாதிகாரி... ஓ.பி.எஸ்-ஸின் நிழல்... ஊழல் பேர்வழி!”
பிரீமியம் ஸ்டோரி
“சர்வாதிகாரி... ஓ.பி.எஸ்-ஸின் நிழல்... ஊழல் பேர்வழி!”

அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கு எதிராக கடலூர் அ.தி.மு.க

“சர்வாதிகாரி... ஓ.பி.எஸ்-ஸின் நிழல்... ஊழல் பேர்வழி!”

அமைச்சர் எம்.சி.சம்பத்துக்கு எதிராக கடலூர் அ.தி.மு.க

Published:Updated:
“சர்வாதிகாரி... ஓ.பி.எஸ்-ஸின் நிழல்... ஊழல் பேர்வழி!”
பிரீமியம் ஸ்டோரி
“சர்வாதிகாரி... ஓ.பி.எஸ்-ஸின் நிழல்... ஊழல் பேர்வழி!”

சொந்த மாவட்டத்தில், சொந்தக் கட்சி எம்.எல்.ஏ, எம்.பி-க்களே களத்தில் தனக்கு எதிராக வாள் சுழற்றுவதால் நொந்துபோயிருக்கிறார், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத். இன்னொரு பக்கம் ஊழல் புகார்கள் அவரை இறுக்கிக் கொண்டிருக்கின்றன.

கடலூரில் ஆகஸ்ட் 16-ம் தேதி, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, தமிழக அரசு சார்பில் நடத்தப்பட உள்ளது. அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்கிறார். இவ்விழா தொடர்பாக ஜூலை 15-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார் எம்.சி.சம்பத். அந்தக் கூட்டத்தில்தான் அமைச்சருக்கு எதிராக ஆளும் கட்சியினரே அணி திரண்டு நிற்கும் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. கடலூர் மாவட்டத்தில் இருக்கும் அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் முருகுமாறன், பாண்டியன், கலைச்செல்வன், சத்யா பன்னீர்செல்வம், அ.தி.மு.க எம்.பி-க்கள் சந்திரகாசி, அருண்மொழித்தேவன் ஆகியோர் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்தனர். ‘‘எம்.சி.சம்பத்தை அமைச்சர் பதவியிலிருந்து தூக்கும் வரை அவர் பங்கேற்கும் எந்த நிகழ்ச்சியிலும் இவர்கள் பங்குபெற மாட்டார்கள். முதல்வர் கலந்துகொள்ளும் கூட்டத்தையும் புறக்கணிப்பார்கள்’’ என்பதுதான் கடலூர் மாவட்ட அ.தி.மு.க-வின் ஹாட் டாக்.

“சர்வாதிகாரி... ஓ.பி.எஸ்-ஸின் நிழல்... ஊழல் பேர்வழி!”

இதுகுறித்து சிதம்பரம் அ.தி.மு.க எம்.எல்.ஏ பாண்டியனிடம் பேசினோம். “அமைச்சருக்கும் எங்களுக்கும் தனிப்பட்ட முறையில் எந்தவித கருத்துவேறுபாடும் இல்லை. ஒரு அமைச்சர் என்ற முறையில், மக்கள் பிரச்னை பற்றியோ, தொகுதியின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்தோ இதுவரை எங்களிடம் அவர் பேசியதே இல்லை. சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில்கூட அரசு விழாக்களுக்கு எங்களை அழைப்பதில்லை. மாற்றுக் கட்சிக்காரர் போல, திட்டமிட்டு ஒட்டுமொத்தமாக எங்களைப் புறக்கணித்து வருகிறார். கட்சிக்காரர்கள், மக்கள் மத்தியில் இவர் இணக்கமாக இருப்பதில்லை. நாங்கள் அப்படியிருக்க முடியுமா? நம்பி ஓட்டுப் போட்ட மக்களுக்கு ஏதாவது செய்ய நினைத்தால் இவர் குறுக்கே நிற்கிறார். சுருக்கமாகச் சொன்னால், சர்வாதிகாரம் செய்கிறார்.

இவர் ஓ.பி.எஸ்-ஸின் நிழல் என்பது ஊருக்கே தெரியும். கடலூர் மாவட்டத்தில் இவர் சிபாரிசு செய்த நிர்வாகிகள் பலரும் இப்போது ஓ.பி.எஸ் அணியில்தான் இருக்கிறார்கள். பதவி சுகத்துக்குத்தான் இங்கு ஒட்டிக்கொண்டு இருக்கிறார். அது போய்விட்டால் ஓ.பி.எஸ் அணிக்குத் தாவிவிடுவார். இவர் அமைச்சராக இருக்கும் வரை இந்தக் கூட்டம் மட்டுமல்ல... எல்லாக் கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளையும் புறக்கணிப்போம். இது சம்பந்தமாக முதல்வரிடமும் புகார் கொடுத்திருக்கிறோம்” என்றார்.

“சர்வாதிகாரி... ஓ.பி.எஸ்-ஸின் நிழல்... ஊழல் பேர்வழி!”

சொந்தக் கட்சிக்காரர்கள் இப்படிக் குமுறிக் கொண்டிருக்க... சம்பத் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை இன்னொரு தரப்பு வீசிக் கொண்டிருக்கிறது. சம்பத் மீது நீதிமன்றத்தில் ஊழல் புகார் கொடுத்திருக்கும் அனைத்துப் பொதுநல இயக்கத்தைச் சேர்ந்த சேகரிடம் பேசினோம்.

“கடலூர் நகரத்துக்குப் புறவழிச்சாலை கிடையாது. அதனால், போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஜவான் பவன் - கம்மியம்பேட்டை இணைப்பு சாலையை அமைத்திடவேண்டும் என்பது பல வருட கோரிக்கை. இந்தச் சாலையைப் போடுவதற்காக ஒன்றரை கோடி ரூபாய் நிதியை நெடுஞ்சாலைத் துறை ஒதுக்கியது. பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த இடத்தை நெடுஞ்சாலைத் துறைக்கு மாற்றி, சாலை போட்டனர். ஆனால், இந்தச் சாலையை முறைப்படி பராமரிக்கத் தவறியதால், சாலை போடப்பட்ட சில நாள்களிலேயே 83 பெரிய பள்ளங்கள் விழுந்து நாள்தோறும் விபத்துக்கள் ஏற்பட்டன. இதுகுறித்து கடலூர் மாவட்ட அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டு, தெருமுனை பிரசாரம், சாலைமறியல் போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதற்காக மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் என்றுகூட பார்க்காமல் 60 பேர் மீது வழக்கு போடச் சொன்னார் அமைச்சர் சம்பத். எந்தவிதமான சட்ட நடைமுறையும் பின்பற்றப்படாமல், முறைப்படி ஒப்பந்தமும் போடப்படாமல், தனது அதிகாரத்தால் நிதி ஒதுக்கி, அதில் பெரும் ஊழல் செய்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், அமைச்சரின் சொந்த கிராமமான மேல்குமார மங்கலத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 40 லட்சம் ரூபாய் மதிப்பில் சமூக நலக்கூடம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக மூன்று வருடங்களாக அது பாதியிலேயே நிற்கிறது. இப்படி மக்கள் வரிப்பணம் வீணாகிறதே என்றுதான் நீதிமன்றத்தின் கதவைத் தட்டியுள்ளோம்” என்றார்.

“சர்வாதிகாரி... ஓ.பி.எஸ்-ஸின் நிழல்... ஊழல் பேர்வழி!”

இந்தக் குற்றச்சாட்டு குறித்து அமைச்சர் எம்.சி.சம்பத்திடம் பேசினோம். “எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் கட்சி கூட்டத்தைப் புறக்கணிப்பது குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஊழல் புகார் என்பது ஆதாரமில்லாத பொய்யான குற்றச்சாட்டு. அவர்கள் சாலை மறியல் செய்தார்கள்... அதற்குக் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?” என்றார்.

அமைச்சர் பதவிக்கும் உங்களுக்கு சம்பந்தம் உண்டுதானே!

- க.பூபாலன்
படங்கள்: எஸ்.தேவராஜன்