

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் இன்று சட்டசபைக்கு வந்து, வருகை பதிவேட்டில்,கையெழுத்திட்டு சென்றார்.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று முதலமைச்சர் ஜெயலலிதா இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது அவர் கூறிய கருத்துக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஏற்பட்ட அமளி காரணமாக திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
இன்றும் ஒரு பிரச்னை தொடர்பாக திமுகவினர் எழுப்பிய கோரிக்கை ஏற்கப்படாததால் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
##~~## |
இந்தநிலையில் திமுக. தலைவர் கருணாநிதி, திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ. என்ற அடிப்படையில் இன்று சட்டசபைக்கு வந்தார். அவரை திமுக. எம்.எல்.ஏ.க்கள் வரவேற்றனர்.பின்னர் சட்டமன்ற லாபியில் வைக்கப்பட்டுள்ள பதிவேட்டில் கையெழுத்து போட்ட பின்னர் கருணாநிதி, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.