Published:Updated:

ஓரிஜினல் குற்றப்பத்திரிகை கேட்டு அடம் பிடித்த திவாகரன்

ஓரிஜினல் குற்றப்பத்திரிகை கேட்டு அடம் பிடித்த திவாகரன்
ஓரிஜினல் குற்றப்பத்திரிகை கேட்டு அடம் பிடித்த திவாகரன்

நீடாமங்கலம்: கொலை மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் இருக்கும் சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட இருந்த நிலையில் ஓரிஜினல்கேட்டு அடம் பிடித்ததால் வழக்கு விசாரணை ஏப்ரல் 5ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

ஓரிஜினல் குற்றப்பத்திரிகை கேட்டு அடம் பிடித்த திவாகரன்

நீடாமங்கலம் அருகில் உள்ள‌ ரிஷியூரில் கஸ்தூரி என்பவரின் வீட்டை இடித்த வழக்கில் திவாகரன் உள்ளிட்ட எட்டு பேர் கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் ஜாமீன் பெற்று இருந்த நிலையில், கடந்த வாரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தமிழார்வனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திவாகரன், ராஜேந்திரன், கிருஷ்ண மேனன் ஆகியோர் கடந்த 22ஆம் தேதி அதிரடியாய் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மூவரும் இரவோடு இரவாக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

##~~##
வீடு இடிப்பு வழக்கில் தொடர்புடைய மற்ற ஐவருக்கும் ஏற்கெனவே குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டு விட்ட நிலையில், திவாகரன் உள்ளிட்ட மூவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்குவதற்காக இன்று நீடாமங்கலம் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
அப்போது, அவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. ஆனால், ஜெராக்ஸ் நகல் வேண்டாம், எங்களுக்கு ஓரிஜினல்  குற்றப்பத்திரிகை வழங்க வேண்டும் என்று மூன்று பேரும் நீதிபதியிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, அவர்களுக்கு குற்றப்பத்திரிகை வழங்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை ஏப்ரல் 5ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார். அன்றைய தினம் ஓரிஜினல் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்படும் என்று தெரிகிறது.
வீ.மாணிக்கவாசகம்