Published:Updated:

தமிழகத்தை பழி வாங்குகிறது மத்திய அரசு: ஜெயலலிதா குற்றச்சாட்டு!

தமிழகத்தை பழி வாங்குகிறது மத்திய அரசு: ஜெயலலிதா குற்றச்சாட்டு!
தமிழகத்தை பழி வாங்குகிறது மத்திய அரசு: ஜெயலலிதா குற்றச்சாட்டு!
தமிழகத்தை பழி வாங்குகிறது மத்திய அரசு: ஜெயலலிதா குற்றச்சாட்டு!

சென்னை: மண்ணெண்ணை ஒதுக்கீட்டை குறைத்து தமிழகத்தை மத்திய அரசு பழி வாங்குவதாக தமிழக சட்டசபையில் இன்று முதலமைச்சர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான பொது விவாதத்திற்கு நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்து பேசுகையில்," முதலமைச்சரின் 'கை' மக்களை வாழ வைக்கும் 'கை'. ஆனால் மத்தியில் ஆட்சி செய்யும் 'கை' தமிழக மக்களை ஏமாற்றும் 'கை'. தமிழக மக்கள் பாதிக்கும் வகையில் அடிக்கடி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் கையாக இருக்கிறது" என்றார்.

இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் ரங்கராஜன், கோபிநாத், விஜயதாரணி ஆகியோர் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர்) சபாநாயகர் அவர்களை இருக்கையில் அமரும்படி கூறினார். தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் பேச முயன்றார்.

##~~##
அப்போது குறுக்கிட்டுப் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா," மத்தியில் இருக்கின்ற 'கை', பெட்ரோல், டீசல் விலையை அடிக்கடி உயர்த்துகிற 'கை' மட்டுமல்ல. தமிழ்நாட்டுக்கு வழங்க கூடிய மண்ணெண்ணையின் அளவை குறைக்கும் 'கை'யாகவும் உள்ளது. மத்திய அரசிடம் இருந்து 50 ஆயிரம் கிலோ லிட்டர் மண்ணெண்ணை தமிழகத்துக்கு வழங்கப்பட்டு வந்தது. அதன் அளவை 22 ஆயிரம் கிலோ லிட்டராக மத்திய அரசு குறைத்துள்ளது.
இது பற்றிய தகவல் நேற்றுதான் எனது கவனத்துக்கு வந்தது. மண்ணெண்ணையின் அளவு குறைக்கப்பட்டதால் இதை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. இதுபற்றி அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்த உள்ளேன். 50 ஆயிரம் கிலோ லிட்டர் மண்ணெண்ணையை 22 ஆயிரம் கிலோ லிட்டராக குறைத்து தமிழ்நாட்டை பழி வாங்குகிற 'கை'தான் மத்தியில் இருக்கிறது" என்றார்.
இந்ந்லையில் ஜெயலலிதாவின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.