Published:Updated:

அஸ்ஸாமில் 'சூப்பர் எமர்ஜென்ஸி' - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு உண்மையா?

அஸ்ஸாமில் 'சூப்பர் எமர்ஜென்ஸி' - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு உண்மையா?

அஸ்ஸாமில் 'சூப்பர் எமர்ஜென்ஸி' - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு உண்மையா?

Published:Updated:

அஸ்ஸாமில் 'சூப்பர் எமர்ஜென்ஸி' - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு உண்மையா?

அஸ்ஸாமில் 'சூப்பர் எமர்ஜென்ஸி' - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு உண்மையா?

அஸ்ஸாமில் 'சூப்பர் எமர்ஜென்ஸி' - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு உண்மையா?

ஸ்ஸாம் மாநிலத்தில் அண்மையில் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு பட்டியலில் 40 லட்சம் பேரின் பெயர்கள் இடம்பெறாதது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக நடைபெறக்கூடிய நிகழ்வுகள், அந்த மாநிலத்தில் தொடர்ந்து நெருக்கடிகளை உருவாக்கி வருகிறது.

விடுபட்ட 40 லட்சம் பேரும் பங்களாதேஷில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் என்றும், அவர்களை மீண்டும் திருப்பி அனுப்புவதற்காகவே அஸ்ஸாமில் ஆளும் பி.ஜே.பி. அரசு, முயற்சி மேற்கொண்டிருப்பதாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த நிலையில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழு, கௌஹாத்தி சென்றது. ஆனால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகளை, சில்சார் விமான நிலையத்தை விட்டு வெளியேற விடாமல் அஸ்ஸாம் போலீஸார் தடுத்தனர். பின்னர், அவர்கள் மேற்குவங்கம் திரும்பி விட்டனர்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் மட்டுமல்லாது, அஸ்ஸாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டை எதிர்த்துக் குரல் கொடுத்த எவரையும் அந்த மாநிலத்திற்குள் நுழைய அம்மாநில அரசு தடை விதித்து நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டம் - ஒழுங்கைப் பாதுகாக்கும் நடவடிக்கையாகவே திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளை விமான நிலையத்தில் இருந்து வெளியேறத் தடை விதித்ததாக அஸ்ஸாம் காவல்துறையினர் தெரிவித்தனர்.

திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர். அவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுத்து நிறுத்தியதாகவும், இதனால் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டார். சில்சார் விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்ற திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் எம்.எல்.ஏ-வான மொயித்ராவை பெண் காவலர் ஒருவர் தடுக்க முயன்றதால் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக, அந்தக் காவலர் காயம் அடைந்தார்.

இதற்கிடையே, அஸ்ஸாம் மாநிலத்தின் மோரிகான் மாவட்டத்தில் தேசிய குடிமக்கள் பதிவுப் பட்டியலில் 39 குடும்பங்களைச் சேர்ந்த வெளிநாட்டினர் 200 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவலை அந்த மாவட்டத்தின் உதவி ஆணையர் உறுதிப்படுத்தியுள்ளார். மக்கள் தொகை பதிவேடு அச்சாகும்போது, இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இறுதிப் பட்டியலில் அந்தப் பெயர்கள் நீக்கப்படும் என்றார் அவர்.

இதற்கிடையே, அஸ்ஸாம் மாநிலத்திற்குள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகளை நுழைய விடாமல் அம்மாநில அரசு தடுத்ததன் மூலம், சூப்பர் எமர்ஜென்ஸியை பி.ஜே.பி. அமல்படுத்தியிருப்பதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். தவிர, அஸ்ஸாம் காவல்துறையினரால், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இப்பிரச்னை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்தபோது, அதுபோன்ற தாக்குதல் ஏதும் நடைபெறவில்லை என்று மறுக்கிறார்.

அஸ்ஸாமில் வெளியான தேசிய குடிமக்கள் பதிவுப் பட்டியல், உள்நாட்டுப் போருக்கு வழிவகுக்கும் என்று ஏற்கெனவே மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அஸ்ஸாம் தேசிய மக்கள்தொகை பதிவேடு குறித்து, நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் இதுபற்றி தெரிவித்த மத்திய அரசு, இந்தப் பட்டியல் வரைவுதான் என்றும், இறுதிப் பட்டியலில் தவறுகள் களையப்படும் என்று குறிப்பிட்டது. அப்படி மாநில அரசின் மீது தவறு இல்லாத சூழலில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகளை விமான நிலையத்தில் இருந்து மாநிலத்திற்குள் நுழைய விடாமல் தடுத்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது. ஜனநாயகரீதியில் எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகளையும், அமைப்புகளையும் ஒடுக்கும் நடவடிக்கையில் மத்திய பி.ஜே.பி. கூட்டணி அரசைப் பின்பற்றி, அஸ்ஸாம் மாநில அரசும் செயல்படுவதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். இதுபோன்ற ஒடுக்குமுறைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம்...!