Published:Updated:

தலையங்கம் - இது சில்லறை விஷயமா?

தலையங்கம் - இது சில்லறை விஷயமா?

தலையங்கம் - இது சில்லறை விஷயமா?

தலையங்கம் - இது சில்லறை விஷயமா?

Published:Updated:
தலையங்கம் - இது சில்லறை விஷயமா?
தலையங்கம் - இது சில்லறை விஷயமா?

'பொருளாதாரச் சரிவை ஈடுகட்ட முடியவில்லை' என்று வெட்கமின்றி ஒப்புக்கொள்ளும் மத்திய அரசு, அதில் இருந்து மக்களைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக இன்னும் ஆழமான படுகுழிக்குள் தள்ளும் முடிவை எடுத்திருக்கிறது. 'சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி' என்ற பெயரில், வெளிநாட்டு ஒட்டகங்களை இந்தியக் கூடாரத்துக்குள் மேயவிடப் பார்க்கிறது. பல கோடி இந்திய வர்த்தகக் குடும்பங்களை நடுத்தெருவுக்குக் கொண்டுவரப் பார்க்கிறது.

 முன்பு வெளிநாட்டுக் குளிர்பானங்களை இங்கே அனுமதித்தபோது, இவர்கள் சொன்ன நொண்டிச் சாக்குகளை மறக்க முடியாது. அந்த அந்நிய நிறுவனங்கள் பாதாளம் வரை பாய்ச்சிய பண பலமும் பிரமாண்டமான விளம்பரத் தாக்குதலும் சேர்ந்து... கையடக்க விலையில் கிடைத்த கோலி சோடாவைக் காணாமல் போகச் செய்தன. தள்ளுவண்டியில் இளநீரும் பதநீரும் விற்பவர்களின் வாழ்க்கையையும்கூடப் பெருமளவில் உறிஞ்சிவிட்டன!

'இந்திய விவசாயிகள் விளைவிக்கும் உணவுப் பொருட்களை, அவை விற்றுத் தீரும் வரை கெடாமல் பாதுகாப்பதற்குப் போதிய அளவு குளிர்பதன வசதிகள் இல்லை. அந்நிய நிறுவனங்கள் வரும்போது, அந்தக் குறை தீரும். இதனால், உற்பத்திச் சேதம் தவிர்க்கப்படும். இடைத் தரகர்களின் ஆதிக்கம் ஒழியும். விவசாயிகளுக்குப் பாதுகாப்பான விலை கிடைக்கும்' என்று மத்திய அமைச்சர் கூறியிருப்பதை ஏற்க முடியாது. சைனா பஜாரில் குவிக்கப்படும் பொம்மைகளின் விலையோடு போட்டியிட முடியாமல்... உள்ளூரின் மரப்பாச்சிப் பொம்மைகளும் தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மைகளும் மறைந்துபோனதுபோல... இந்தப் பன்னாட்டுப் பல்பொருள் அங்காடிகளின் அபரிமிதமான அதிரடி இறக்குமதியால் ஏழை விவசாயிகளும் காலப்போக்கில் காணாமல்போகும் அபாயம்தான் அதிகம் இருக்கிறது.

குடும்பத்தைக் காப்பாற்ற வேறு வழியே இல்லாமல் நகை நட்டை கொஞ்ச காலத்துக்கு அடகுவைத்தால், அதைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். குடும்பத்தையே அடகுவைத்தால்..?

அதைத்தான் செய்யப்பார்க்கிறதா, துப்பில்லாத மத்திய அரசு?